5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படும் காரணம் தெரியுமா?

Christmas Celebration: மேரி என்ற கன்னிப் பெண்ணுக்கு மகனாய் அவதரித்தவர் தான் இயேசு கிறிஸ்து. அவரின் பிறந்த நாளை தான் கிறிஸ்துமஸ் தின விழாவாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் 25ஆம் தேதி தான் அவர் பிறந்ததாக கூறப்பட்டு அந்த நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் டிசம்பர் 25ஆம் தேதி தான் பிறந்தார் என்பது பைபிளில் எங்கேயும் இல்லை என்ற தகவலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இயேசு கிறிஸ்து பிறப்பு எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படும் காரணம் தெரியுமா?
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 20 Nov 2024 13:32 PM

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ் ஆகும். கிறிஸ்துமஸ் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட பண்டிகை. ஆனால் பைபிளில் எங்குமே இயேசுநாதர் இந்த நாளில்தான் பிறந்தார் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25 தான் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. மேலும் வாழ்நாளில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை அவரின் தாயாரான மரியாள் என்றுமே கொண்டாடியது இல்லை என்றும் வரலாறு நமக்கு சொல்கிறது.

இயேசுவின் பிறப்பு:

இயேசு கிறிஸ்து, மரியாள் என்று கன்னிப் பெண்ணுக்கு பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார் என்று லூக்கா நற்செய்தி மற்றும் மத்தேயு நற்செய்தி நமக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றி தெரிவிக்கிறது.‌ இயேசு கிறிஸ்து பிறந்தவுடன் வான தூதர்கள் மூலம் இயேசு பிறப்பு பற்றி அங்குள்ள மேய்ப்பர்களுக்கு ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக பிறந்திருக்கிறார் என்று செய்தி தெரிவிக்கப்படுகிறது. பின்பு மெய்பர்கள்‌ மரியாளையும் இயேசு கிறிஸ்துவையும் வணங்கினர். மேலும் விண்மீன் ஒன்றின் வழிகாட்டுதலின்படி கிழக்கில் இருந்து சில ஞானிகள் இயேசுவை வந்து வணங்கினர் என்று குறிப்பிடப்படுகிறது. கிழக்கிலிருந்து சென்ற ஞானிகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் சென்றார் என்று சொல்லப்படுகிறது.

மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நால்வர் தான் இயேசுவைப் பற்றிய நற்செய்திகள் மற்றும் இயேசுவின் போதனைகளைப் பற்றி அதிகம் எழுதியவர்கள். ஆனால் மத்தேயு நற்செய்தி மற்றும் லூக்கா நற்செய்தி ஆகிய இரண்டுமே இயேசுவின் கிறிஸ்து பிறப்பைப் பற்றி இரு வேறு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றனர். அதேபோல் மாற்கு மற்றும் யோவான் ஆகிய இருவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மத்தேயு மற்றும்‌ லூக்கா ஆகியோர் இயேசு கிறிஸ்து பிறந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளை எழுதினார்கள்.

முக்கிய மூன்று நிகழ்வுகள்:

எனவே இவர்கள் இருவரும் இயேசுவின் பிறப்பை பற்றி கூறுகையில் மூன்று முக்கியமான விஷயங்களை பற்றி தெரிவித்துள்ளனர். ரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, அப்பாவிகளின் படுகொலை மற்றும் பெத்லகேமின் நட்சத்திரம் ஆகிய மூன்றும்தான் இயேசுவின் பிறப்பை பற்றி கூறும்போது சொல்லப்படும் செய்தி.

Also Read: Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை.. முதன்முதலில் குடில் வைத்தவர் யார் தெரியுமா?

அனைத்து யூதர்களும் தங்கள் பூர்வ இடத்திற்கு திரும்பிச் செல்ல கட்டாயப்படுத்தியதின் அடிப்படையில் எடுக்கப்பட்டது தான் ரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பு. இது லூக்காவின் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி.யூதர்களின் ராஜா பிறந்தார் என்ற‌ செய்தியை கேட்டு அச்சமடைந்த ஏரோது மன்னன், பெத்லகேம்‌ நகரில் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு ஆணை பிறப்பித்தார் என மத்தேயு நற்செய்தி தெரிவிக்கிறது. இந்த இரண்டு செய்திகளுக்கும் இடையே ஒரு‌‌ எளிய முரண்பாடு இருக்கிறது.

முரண்பாடான கருத்துக்கள்:

வரலாற்று தகவலின் படி இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கி.பி‌ 6 நூற்றாண்டில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. சிரியாவின் ரோமானிய ஆளுநரான குயிரினியஸ் யூதேயாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு கி.பி 6 ஆண்டு தான் உத்தரவிடப்பட்டுள்ளதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. யூதேயா என்பது இஸ்ரேல் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். குயிரினியஸ் கணக்கெடுக்க உத்தரவிட்ட கி.பி‌ 6 நூற்றாண்டில் குழந்தைகள் படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கொலை செய்ய உத்தரவிட்ட ஏரோது மன்னன் கி.பி 4 ஆண்டிலேயே இறந்துவிட்டார். இதன் அடிப்படையிலேயே வரலாற்று அறிஞர்கள் இயேசு பிறப்பில் முரண்பாடான கருத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பெத்லகேமின் நட்சத்திரம்:

ஞானிகள் கண்ட இந்த பெத்லகேம் நட்சத்திரம் பற்றி பல அறிஞர்கள் வானிலை நிகழ்வுடன் இணைக்க முயற்சி செய்துள்ளர்.‌ 17 ஆம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியை செய்து வந்த வானியலாளரும் ஜோதிடருமான ஜோஹன்னஸ்‌ கெப்ளர் கூறுகையில் கிமு 7 ஆண்டில் நிகழ்ந்த வியாழன் மற்றும் சனி கோள்களின் நேர்கோட்டு இணைப்பு நிகழ்வுகளை அந்த ஞானிகள் கண்டு இருக்கலாம் என்று தெரிவித்தார். இந்த மூன்று ஞானிகளும் வானிலை பற்றிய அறிவும் தீர்க்கதரிசியாகவும் வாழ்ந்து வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கிறது. எனவே இதன் மூலம் இயேசு பிறந்ததற்கான நேரத்தை அவர்கள் அறிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 25 கொண்டாட்டத்துக்குரிய நாளாக மாறியது எப்படி?

ஆனால் இயேசு கிறிஸ்து இந்த நாளிலால் பிறந்தார் என்று யாரும் தெளிவாக எதிலும் குறிப்பிடவில்லை. பிறகு டிசம்பர் 25 எப்படி கொண்டாட்டத்திற்குரிய நாளாக மாறியது? இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே டிசம்பரில் சில கொண்டாட்டங்களுக்கு அந்த மக்கள் பழகி இருந்தனர். குளிர்காலம் முடிந்து இருள் நீங்கி ஒளி வரும் அந்த நாளை மக்கள்‌ கொண்டாடி வந்தனர். ஜெர்மனி, ரோம்,ஸ்கேண்டிநேவியா போன்ற பகுதிகளில்‌ இந்த  டிசம்பர் மாத பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது.

இந்த பகுதியில் ஏற்கனவே ஒரு மத நம்பிக்கை இருந்து வந்துள்ளது. அந்த நேரத்தில் கிறிஸ்துவ‌‌ முதமும் அங்கு பரவ தொடங்கியது. ஏற்கனவே அங்கு பின்பற்றப்பட்டு வந்த மதத்தை தாண்டி இந்த மதம் பரவலாக அனைவராலும் பின்பற்ற தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் யாரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவில்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 4 ஆம் நூற்றாண்டில் தான் ரோம் தேவாலயங்கள் 25 டிசம்பரை‌ இயேசு கிறிஸ்து பிறந்த நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஏற்கனவே அந்தப் பகுதி மக்கள் இந்த காலங்களில் பண்டிகை கொண்டாடி வருவதால் இந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இருந்தது. எனவே காலப்போக்கில் டிசம்பர் 25 இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்!

மக்களுக்காக பிறந்தவர்:

இயேசு கிறிஸ்துவின் தாயார்‌ மரியாள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடியதாக வரலாறு இல்லை.மேலும் இயேசு பிறந்து 1000 ஆண்டுகளுக்குப் பிறகே கிறிஸ்துமஸ் பண்டிகை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் சரி இயேசு கிறிஸ்து இந்த உலகில் அவதரித்தது உண்மை. அவர் இந்த மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் மக்களின் பாவங்களை போக்குவதற்காகவும் இந்த உலகத்தில் பிறந்தார் என்பதும் உண்மை. உலக மக்களால் அதிகம் பின்பற்றப்படும் இந்த இயேசு கிறிஸ்து எப்பொழுது பிறந்தார் என்பதை விட அவர் நமக்காக ஏன் பிறந்தார் என்பதை உணர்ந்து ஏற்று, அவருக்கான கொண்டாட்டமாக இந்த கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுவோம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது.இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News