Deepavali 2024: தீபாவளி நாளில் வணங்க வேண்டிய மகாலட்சுமி கோயில்கள்! - Tamil News | deepavali 2024 worship on this mahalakshmi temple during diwali 2024 | TV9 Tamil

Deepavali 2024: தீபாவளி நாளில் வணங்க வேண்டிய மகாலட்சுமி கோயில்கள்!

Deepavali 2024: நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வே தீபாவளி பண்டிகையின் வரலாறாக பார்க்கப்படுகிறது. அவர் மூலம் மகாலட்சுமியின் அவதாரமான சத்தியபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டார். அவனின் வேண்டுகோளின்படி நான் இறந்த பிறகு இந்த நாளை எல்லாரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். தீபாவளி நாளில் நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் தான் அந்நாளில் அவள் வாசம் செய்யும் நல்லெண்ணெய்யுடன் குளியலை தொடங்கி கடவுள் வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகிறோம்.

Deepavali 2024: தீபாவளி நாளில் வணங்க வேண்டிய மகாலட்சுமி கோயில்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

24 Oct 2024 12:25 PM

தீபாவளி பண்டிகை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வே தீபாவளி பண்டிகையின் வரலாறாக பார்க்கப்படுகிறது. அவர் மூலம் மகாலட்சுமியின் அவதாரமான சத்தியபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டார். அவனின் வேண்டுகோளின்படி நான் இறந்த பிறகு இந்த நாளை எல்லாரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். தீபாவளி நாளில் நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் தான் அந்நாளில் அவள் வாசம் செய்யும் நல்லெண்ணெய்யுடன் குளியலை தொடங்கி கடவுள் வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த தீபாவளி நாளில் நாம் வணங்க வேண்டிய மகாலட்சுமி கோயில்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

திருத்தங்கல்

ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீலாதேவி ஆகியோருக்கு இடையே விஷ்ணு மீதான பக்தியின் அளவு குறித்து போட்டி ஏற்பட்டது. இதில் மகாலட்சுமியான ஸ்ரீதேவி மற்ற லட்சுமிகளை விட தான் சிறந்தவள் என்பதை நிரூபிக்க வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு தங்காலமலை எனப்படும் திருத்தங்கலுக்கு வந்து தவம் இருந்தாள். அவளது பக்தியால் விஷ்ணு ஈர்க்கப்பட்டார். மற்ற லட்சுமிகளும் மகாலட்சுமியின் பக்தி தான் சிறந்தது என ஒப்புக்கொண்டனர். செங்கமல நாச்சியார் திருநாமத்தோடு இந்த கோயிலில் திருமகளான மகாலட்சுமி தங்கியதால் இந்த ஊருக்கு திருத்தங்கல் என பெயர் வந்தது. இந்த இடம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெருமாளுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் விஷ்ணு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதனால் நின்ற நாராயணப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

மாமாகுடி 

மகாலட்சுமி அவதரித்த தலமாக மாமாகுடி என்ற ஊரை குறிப்பிடுகின்றனர். இந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பனார் கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இருந்து வட பக்கத்திலும், ஆக்கூருக்கு அருகேயும் அமைந்துள்ளது. இங்கு மாமாகுடி சிவலோகநாத சுவாமி மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலில் சிவகாமி அம்பாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளது.

Also Read: Diwali 2024: தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

திருவாலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் அமையப்பெற்றுள்ள அழகிய சிங்கர் திருக்கோயிலுக்கு தீபாவளி நாளில் வணங்கினால் பல பலன்கள் கிடைக்கிறது. திருமங்கையாழ்வாருக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று பெருமாளை லட்சுமி தேவி இடைவிடாது வேண்டி வந்தாள்.  இதனை தொடர்ந்து லட்சுமி வேண்டுகோளின்படி அவள் திருவாலியில் தவம் செய்யும் பூரண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள்.  பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வரும் வழியில் வழிப்பறி செய்துக் கொண்டிருந்தான்.  அவரது காதில் பெருமாள் அஷ்டசாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார்.  அந்த மண்டபம் இன்றும் அந்த இடத்தில் உள்ளது.

மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்க ஊர் என முதலில் அழைக்கப்பட்டு பின்னாளில் திருவாலி எனும் மருவியது. இங்கு திருவாலி அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோயில் இரட்டைத் தலங்களாக கருதப்படுகிறது. மேலும் ஒரே ஒரே திவ்ய தேசமாக  (34வது திவ்ய தேசம்)  போற்றப்படுகிறது.

Also Read: E Coli Bacteria: சென்னை குடிநீரில் 75% E Coli பாக்டீரியா.. ஐஐடி ஆய்வில் சொன்ன பகீர் தகவல்.. எப்படி பாதுகாத்துக்கொள்வது?

திருக்கண்ணமங்கை

மகாலட்சுமி முதலில் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட நிலையில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள்.  அதை உள்ளத்தில் நிறுத்தி இந்த கோயிலில் எழுந்தருளும் நாயகனை திருமணம் செய்து வேண்டும் என்று இங்கு வந்து தவம் இருந்தாள். பெருமாளும் தன் பாற்கடலை விட்டு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு மேலும் இந்த திருத்தலத்துக்கு லட்சுமி வனம் என்று பெயரும் உண்டு. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!
இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!