5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadi Amavasai: ஆடி அமாவாசை நாளில் இதெல்லாம் செய்யாதீங்க!

Aadi Month: இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பெற்றவர்களை இழந்தவர்கள் மட்டுமே இதனை செய்ய வேண்டும். மற்றவர்கள் வழிபாடு நடத்தினால் போதுமானது. அதேபோல் குலதெய்வம் கோயிலுக்கு இந்நாளில் சென்று வருவதும் மிகுந்த பயனளிக்கும். மேலும் இத்தகைய ஆடி அமாவாசை நாளில் நாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிய வேண்டும்.

Aadi Amavasai: ஆடி அமாவாசை நாளில் இதெல்லாம் செய்யாதீங்க!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Aug 2024 15:44 PM

ஆடி அமாவாசை: முன்னோர்களை வழிபட அமாவாசை தினம் சிறந்த நாள் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் நாம் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் அகன்று மகிழ்ச்சி பிறக்கும் என்பது ஐதீகமாகும். அதேசமயம் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் வரும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகிய 3 தினங்களை எக்காரணம் கொண்டு தவிர்க்கவே கூடாது. பிற அமாவாசை தினத்தில் வழிபடாவிட்டாலும் பரவாயில்லை. இந்த 3 தினங்களில் நம் முன்னோர்களை நினைத்து நாம் கட்டாயம் வழிபட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் பித்ருலோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் பூலோகத்துக்கு புறப்படும் நாளாக கருதப்படும் ஆடி அமாவாசை தினம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

Also Read: Aadi Amavasai: ஆடி அமாவாசை.. முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறந்த நேரம் எது?

இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பெற்றவர்களை இழந்தவர்கள் மட்டுமே இதனை செய்ய வேண்டும். மற்றவர்கள் வழிபாடு நடத்தினால் போதுமானது. அதேபோல் குலதெய்வம் கோயிலுக்கு இந்நாளில் சென்று வருவதும் மிகுந்த பயனளிக்கும். மேலும் இத்தகைய ஆடி அமாவாசை நாளில் நாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய சில விஷயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

அதாவது, “ஆடி அமாவாசை நாளில் நீண்ட நேரம் தூங்கக்கூடாது. அதிகாலை எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் நீராடி விட வேண்டும். அன்றைய நாளில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. மேலும் சமையலறை, பூஜை அறையையும் சுத்தம் செய்யக்கூடாது. மேலும் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும் போதாது. வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்க வேண்டாம். பூஜை அறையில் விளக்கேற்றும் அதேசமயம் முன்னோர்களின் படங்களின் முன்னால் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும்.

Also Read: Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டிலேயே வழிபடுவது எப்படி?

இந்த நாளில் வெளியாட்களை யாரும் வீட்டுக்கு அழைத்து உணவளிக்க வேண்டாம். தானம் செய்ய நினைப்பவர்கள் வெளியே தாராளமாக செய்யலாம். முன்னோர்களுக்கு படையல் வைக்கும்போது இரண்டு இலைகளாக போட வேண்டும். மேலும் எல்லா புகைப்படங்களையும் ஒரே இடத்தில் வைத்து படையலிட வேண்டும். இந்த படையல் உணவை வீட்டில் இருப்பவர்கள் மட்டும் உண்ண வேண்டும். மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். குறிப்பாக படையல் போடுவதற்கு முன் காகத்திற்கு படையலிட வேண்டும்.

மேலும் இந்நாளில் பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்க வேண்டாம்.அதேபோல் நகம் வெட்டவோ, நெற்றியில் திருநீறு, குங்குமம் வைக்காமலோ இருக்கக்கூடாது. அதேபோல் குளித்து விட்டு பெண்கள் சமையல் செய்ய வேண்டும். வழிபாடு நடத்தும்போது குளிக்கலாம் என நினைக்கக்கூடாது” என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News