Astrology: கனவிலோ, வீட்டிலோ குரங்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சில நேரங்களில் நம்முடைய கனவில் உயிரினங்களும், சக மனிதர்களும் வெவ்வேறு நிலைகளில் தோன்றுவதை நாம் கண்டிருப்போம். அதேசமயம் சில நேரங்களில் பாம்பு, பூரான் தொடங்கி பலவிதமான உயிரினங்களும் நம் வீட்டிற்கு வந்துவிடும். அப்படியாக குரங்கு நம் கனவிலும் அல்லது வீட்டிற்கு உள்ளேயும் வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
குரங்குகளுக்கான பலன்: பொதுவாக நம்முடைய வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் என்ன பலன், என்ன பரிகாரம் என்பவை கணிக்கப்பட்டிருக்கும். அதைப்போல தான் கனவு பலன்களும் உண்டு. சில நேரங்களில் நம்முடைய கனவில் உயிரினங்களும், சக மனிதர்களும் வெவ்வேறு நிலைகளில் தோன்றுவதை நாம் கண்டிருப்போம். அதேசமயம் சில நேரங்களில் பாம்பு, பூரான் தொடங்கி பலவிதமான உயிரினங்களும் நம் வீட்டிற்கு வந்துவிடும். அப்படியாக குரங்கு நம் கனவிலும் அல்லது வீட்டிற்கு உள்ளேயும் வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். குரங்குகள் ஆஞ்சநேயரின் அவதாரமாகவும், வாகனமாகவும் ஆக பார்க்கப்படுகிறது. வனப்பகுதிகளிலும், மலையிடங்களிலும் வசிக்கும் இவை சில நேரங்களில் வீட்டுக்கே வந்துவிடும். அப்படி வீட்டுக்குள் வந்தால் முதலில் நாம் கையில் என்ன கிடைக்கிறதோ அதனை தூக்கி குரங்கை துரத்த முயற்சிப்போம். அப்படியெல்லாம் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் சொல்கிறது.
இதையும் படிங்க: Chennai Air Show: சென்னை ஏர் ஷோ போற பிளான் இருக்கா? கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு.. பார்க்கிங் உள்ளிட்ட முழு விவரம் உள்ளே..
குரங்கு ஆஞ்சநேயராக இருப்பதால் அந்த இடத்தில் கண்டிப்பாக ராமரின் அனுக்கிரகமும் இருக்கும். குரங்கு சாதாரணமாக வீட்டுக்குள் வராது. அப்படி வந்து விட்டால் அந்த வீட்டில் ஏதோ கெட்ட சக்தி இருப்பதாக அர்த்தம். தொடர்ந்து அந்த வீட்டில் இருப்பதால் தான் குரங்கு வீட்டுக்குள் வரும் என்பது புரிந்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு தூங்கும்போது வளையல், கொலுசு சத்தம், திடீரென அழும் சத்தம், சிரிப்பு சத்தம் கேட்பதாக சொல்வார்கள். எதிர்மறையான எண்ணங்கள் இருக்கும் இடத்தில் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்பு தான் என சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் தான் குரங்கு வீட்டில் இருக்கும் நெகட்டிவிட்டியை நமக்கு காட்டுகிறது. ஒருவேளை உங்கள் வீட்டுக்கு குரங்கு வந்தால் உடனடியாக கணபதி ஹோமம் அல்லது சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சும்மா செல்லும் நேரம் திடீரென குரங்கு நம்மை பார்த்து கடிக்க வருவது போலவோ, அல்லது தாக்குதல் நடத்தினாலோ இரு வகையாக எடுத்துக் கொள்ளலாம். ஒன்று நமக்குள் இருக்கும் எதிர்மறையான எண்ணம். மற்றொன்று நாம் நினைத்த வேண்டுதல்களை செய்யாமல் இழுத்தடிப்பது என சொல்லலாம்.
இதனை தீர்க்க ஸ்ரீராமஜெயத்தை அடிக்கடி சொல்ல வேண்டும். குறிப்பாக புதன்கிழமை தோறும் 108 முறை காலை 6 முதல் 7 மணிக்குள் எழுதி ஆஞ்சநேயருக்கு மாலையாக போட வேண்டும். கூடுதலாக வெற்றிலை மாலையும் போடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தின் எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடுவதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் தைரியத்துடன் செயல்பட ஏதுவாக சூழலும் உண்டாகும்.
இதையும் படிங்க: Washington Sundar Birthday Special: காது கேளாமை.. சிறுவயதில் வாட்டிய வறுமை.. ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தரின் பயணம்..!
அதேசமயம் உங்களுடைய கனவில் ஒரு குரங்கை கண்டால் அது மிகவும் மங்களகரமானது மற்றும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. கனவில் குரங்கைக் கண்டால் அவர்களுக்கு நிச்சயம் அனுமனின் ஆசீர்வாதம் இருக்கும் என்பது அர்த்தமாகும். மேலும் குரங்கு வருவது போல கனவு காணும் அந்த நபரின் வாழ்க்கையில் விரைவில் ஏதாவது மாற்றம் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது. அதே சமயம் குரங்கு கோபமாக இருப்பது போலவும் அல்லது மற்ற குரங்குடன் இணைந்து சண்டையிடுவது போலவும் கனவு கண்டால் நீங்கள் யாரிடமாவது சண்டைக்கு செல்லலாம் அல்லது உங்களைத் தேடி பிரச்சினை வரலாம் என்பது அர்த்தமாகும். எனவே எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அதேபோல் கனவில் குரங்கு எதையாவது சாப்பிடுவது போல காட்சிகளை கண்டால் அதுவும் எதிர்மறையான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்பது அர்த்தமாகும். அதேபோல் இத்தகைய காட்சிகளால் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எதிர்காலத்தில் சிரமங்களை எதிர்கொண்ட வேண்டி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. குரங்கள் மகிழ்ச்சியாக கூடி விளையாடுவதை பார்ப்பதால், உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கூட்டமாக குரங்குகளை கனவில் பார்த்தால் உங்களுடைய மொத்த குடும்பமும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் என்பது அர்த்தமாகும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)