5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali: தீபாவளி கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? – ஆன்மிகம் சொல்லும் நிகழ்வு இதுதான்!

Deepavali Festival: நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்னர் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்ற காரணம் பலருக்கும் தெரியாமல் உள்ளது.அதனைப் பற்றி நாம் காணலாம். இது இந்து, சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவை தாண்டி இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூட தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Diwali: தீபாவளி கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? – ஆன்மிகம் சொல்லும் நிகழ்வு இதுதான்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Oct 2024 21:30 PM

தீபாவளி பண்டிகை: இந்திய பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. சொல்லப்போனால் மதச்சார்பின்மை கொண்ட நாடும் என சொல்லலாம். அந்த அளவுக்கு பல மதங்கள், இனங்கள், சமயங்கள், உணவுகள், பண்டிகைகள், பழக்க வழக்கங்கள், உடைகள், வழிபாட்டு முறைகள், கலாச்சாரங்கள், திருவிழாக்கள் என வாழ்நாள் முழுவதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.  இதில் சில பண்டிகைகள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில், காரணங்களில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு பண்டிகைக்கும் வரலாறு என்பது உள்ளது. அதில் ஒன்று தான் தீபாவளி. தீபங்களின் ஒளியே தீபாவளியாகும். வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி நல்வழி பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் வரும் அமாவாசை தினத்தில் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

Also Read: “ஆபிஸ் வரலைன்னா வேலையை விட்டு போயிடுங்க” ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமேசான்!

அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்னர் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்ற காரணம் பலருக்கும் தெரியாமல் உள்ளது.அதனைப் பற்றி நாம் காணலாம். இது இந்து, சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவை தாண்டி இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கூட தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையும் விடப்படுகிறது. புராணங்களின்படி தீபாவளி கொண்டாட பல வகையான காரணங்கள் சொல்லப்படுகிறது. தீபம் என்றால் ஒளி என்றும், ஆவளி என்றால் வரிசை என்றும் பொருள். தீபங்களின் வரிசை தீபாவளி என அழைக்கப்படுகிறது.

Also Read: Aippasi Month: ஐப்பசியில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாதா? – சாஸ்திரம் சொல்வது என்ன?

  • திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன். நரகாசுரன் தான் செய்த பாவத்திற்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு அவனுடைய தாய் தந்தையிடம் ஒரு வரம் கேட்கிறான். அதாவது தன்னுடைய மரணம் பெற்றோர்களால் தான் ஏற்பட வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி திருமாலின் கிருஷ்ணா அவதாரத்தில் பூமாதேவி சத்யாபாமாவாகப் பிறந்து நரகாசுரனை கொன்றதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் தன்னுடைய இறப்பை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும். யாரும் அழக்கூடாது, வருத்தப்படக்கூடாது, பதினாறு வகை பலகாரம் படைத்து கொண்டாட வேண்டும் என்று சத்யாபாமா மற்றும் கிருஷ்ணரிடம் நரகாசுரன் கேட்டுக் கொண்டதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளை பட்டாசு வெடித்தும் தீபம் ஏற்றும் வண்ணக் கோலமிட்டும் புத்தாடை அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்கள் சொல்லியும் நாம் கொண்டாடுகிறோம்.

Also Read: Murugan Temple: திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி… முன்பதிவு செய்வது எப்படி?

  • கந்த புராணத்தின்படி, சக்தியின் கேதார கௌரி விரதம் இருந்த 21 நாட்கள் முடிவுற்ற நாள் தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் முடிந்த நாளில் தான் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வராக  பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
  • சீக்கிய சமூகத்தில் 1577 ஆம் ஆண்டு பொற்கோயில் கட்டுமான பணிகள் தொடங்கிய நாளையே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.சமணர்கள் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்த தினத்தை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி நாளில் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து வெதுவெதுப்பான நீரில் புனித நீராட வேண்டும். பின்னர் புத்தாடைகள், இனிப்புகள் எல்லாம் வைத்து இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பின்னர் வெடி வெடித்து கொண்டாட வேண்டும்.  தீபாவளி தினத்தன்று அருகிலுள்ள கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும். தீபாவளி Festival of Lights என அழைக்கப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News