5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: வடமாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி.. ஏன் தெரியுமா?

Deepavali 2024: ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசை திதியை கணக்கில் கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 3.52 மணி முதல் நவம்பர் 1 மாலை 6.16 வரை அமாவாசை திதி உள்ளது. அக்டோபர் 29,30,31 மற்றும் நவம்பர் 2,3 ஆகிய 5 நாட்கள் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 5 நாட்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை மிகவும் பிரபலமானது.

Diwali 2024: வடமாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி.. ஏன் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 20 Oct 2024 16:00 PM

தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே தீபங்களின் ஒளியும், பட்டாசுகளின் சத்தமும், அதை வெடிக்கும் மக்களின் மகிழ்ச்சியும் அந்நாளின் அடையாளமாக அமைகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வெளியூரில் உள்ள மக்கள் இந்நாளை குடும்பத்தினருடன் செலவிடும் பொருட்டு நவம்பர் 1 ஆம் தேதி அரசு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கொண்டாடும் பண்டிகைக்காக 4 நாட்கள் விடுமுறை என நினைக்கலாம். ஆனால் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றி காணலாம்.

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை திதியை கணக்கில் கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 3.52 மணி முதல் நவம்பர் 1 மாலை 6.16 வரை அமாவாசை திதி உள்ளது. அக்டோபர் 29,30,31 மற்றும் நவம்பர் 2,3 ஆகிய 5 நாட்கள் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 5 நாட்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை மிகவும் பிரபலமானது.

Also Read: TN Govt Hospital Jobs: மாதம் ரூ.25,000 சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

5 நாட்கள் என்ன நடக்கும்?

அக்டோபர் 29ஆம் தேதி  மாலை 5.14 மணி முதல் 6.29 மணி வரை எம தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் அகால மரணத்திலிருந்து விடுபட வேண்டும் என்று எமனுக்கு கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதனைத் தொடர்ந்து மாலை 6.31 மணி முதல் இரவு 8.13 வரை வரை தியோதசி திதி உள்ளது. இந்நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தந்தேரோஸ் என அழைக்கப்படுகிறது. இது உலோகத்திருவிழா என தமிழில் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் மக்கள் லட்சுமி தேவியையும் குபேரரையும் வணங்கி செல்வம், செழிப்பு தங்கள் வாழ்க்கையில் நிலைத்திருக்க பிரார்த்தனை செய்வார்கள். முடிந்தவரை அன்றைய நாளில் தங்கம், வெள்ளி, புதிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி மகிழ்வார்கள்.

அக்டோபர் 30 ஆம் தேதி மாலை முதல் 31 ஆம் தேதி காலை வரை சோட்டி தீபாவளி கொண்டாடப்படும். இந்நாளில் கிருஷ்ணர் நரகாசுரனை கொன்றதை கொண்டாடும் வகையில் மக்கள் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து இந்நாளை கொண்டாடுவார்கள். அதாவது அதிகாலையில் எண்ணெய் சடங்கு, கடவுள் வழிபாடு என அனைத்து வழக்கமான நிகழ்வுகளும் தீபாவளி அன்று காலை நடைபெறும். இதனை தொடர்ந்து அக்டோபர் 31ஆம் தேதி மாலையில் அமாவாசை திதி தொடங்கியவுடன் லட்சுமி தேவிக்கு பிரார்த்தனை செய்கின்றனர். குடும்பங்கள் ஒன்று கூடி இந்த வழிபாட்டில் ஈடுபடும்போது செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அனைத்து லட்சுமிகளின் அருளும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

Also Read: Tamilnadu Weather Alert: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

அதே சமயம் 31ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம்தேதி வரை ராமர், சீதை, இலட்சுமணன் ஆகியோர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்புவதை கொண்டாடும் வகையில் வீடு முழுவதும் வட மாநில மக்கள் வண்ணமயமான ரங்கோலி கோலம் இட்டு விளக்குகளை ஏற்றி அலங்கரிக்கின்றனர். நவம்பர் 2 ஆம் தேதி கோவர்தன் பூஜை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகள் அல்லது அக்கம் பக்கம் உள்ள பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து வழிபடுகிறார்கள். இந்நாளில் வணிகம் செய்பவர்கள் புது கணக்கு தொடங்குகிறார்கள்.

நவம்பர் 3 ஆம் தேதி பையாதோஜ் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவை சிறப்பிக்கும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்பாடுகிறது. தங்கள் சகோதரர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனைகள் செய்வது வழக்கமாக உள்ளது. மேலும் அந்த அன்பிற்கு சகோதரர்கள் ஈடாக சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்குகின்றனர். மேலும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் பார்த்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர். இதனால் பையாதோஜ்நாளன்று சாலைகளில் கூட்டம் கூட்டமாக பெண்கள் செல்வதை பார்க்க முடியும். சில மாநிலங்களில் தீபாவளி பண்டிகை 3 நாட்கள் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News