5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளி நாளில் அசைவம் சாப்பிடலாமா? – சாஸ்திரம் சொல்வது என்ன?

Deepavali 2024: தீபாவளி என்றாலே நம் அனைவரின் மனதிலும் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாகும் என்பது நிச்சயம். காரணம் ஆண்டு முழுவதும் இந்த ஒருநாள் கொண்டாடப்படும் பண்டிகைக்காக பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படும். புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என ஒரே நாளில் அத்தனையும் கிடைக்கும் இந்த தீபாவளி திருநாளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்கவும், கடக்கவும் முடியாது.

Diwali 2024: தீபாவளி நாளில் அசைவம் சாப்பிடலாமா? – சாஸ்திரம் சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 18 Oct 2024 13:10 PM

தீபாவளி பண்டிகை: நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இன்னும் சரியாக இரண்டு வாரங்களே உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நம் அனைவரின் மனதிலும் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாகும் என்பது நிச்சயம். காரணம் ஆண்டு முழுவதும் இந்த ஒருநாள் கொண்டாடப்படும் பண்டிகைக்காக பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படும். புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என ஒரே நாளில் அத்தனையும் கிடைக்கும் இந்த தீபாவளி திருநாளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்கவும், கடக்கவும் முடியாது. பொதுவாக தீபாவளி திருவிழா கொண்டாடுவதற்காக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் நம் அனைவருக்கும் தெரிந்தது என்னவென்று கேட்டால்,  கிருஷ்ணர் நரகாசுரனை அளித்த நாள் தீபாவளி என்பதுதான்.

அதேசமயம் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாளை மக்கள் வரவேற்கும் விதமாக விளக்குகளை ஏற்றி தீபாவளி நாளில் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அதே சமயம் சமண மதத்தின் இறுதி தீர்த்தங்கரராக அழைக்கப்படும் மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளை தீபாவளியாக இந்த மதத்தினர் தீபங்கள் ஏற்றி வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷேச தினத்தில் அசைவ உணவு இல்லாமல் பலருக்கும் அன்றைய தினம் கடக்காது.

Also Read: Sabarimala: சபரிமலை மண்டல மகர விளக்கு பூஜை.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

வழக்கமாக விசேஷ நாட்களில் மதிய நேரத்தில் அசைவ உணவு வீடுகளில் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தீபாவளி தினத்தன்று காலையில் சுடச்சுட இட்லியுடன் அசைவ உணவு பரிமாறப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் சாஸ்திரப்படி தீபாவளி நாளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதற்கு காரணம் தீபாவளி ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியை கணக்கிட்டு கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசை என்பது முன்னோர்களின் வழிபடுவதற்கான நாள் என்பதால் அந்த நாளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

மேலும் அமாவாசை நாட்களில் ஒளியை கொடுக்கும் கிரகங்கள் பலம் குறைந்து இருள் கிரகங்கள் பலம் பெற்று காணப்படும் என கூறப்படுகிறது. அதனால்தான் தீபாவளி அன்று கிருஷ்ணர் சத்தியபாமா துணையுடன் நரகாசுரனை அழித்தார் என வரலாறு சொல்கிறது. இந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட்டு பல நன்மைகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபாவளி திருநாள் கொண்டாடுகிறோம்.

Also Read: Padaikatti Maha Mariamman: பாடை கட்டி ஊர்வலம்.. தீரா நோய்களை தீர்க்கும் மகாமாரியம்மன்!

மேலும் தீபாவளி நாள் மகாலட்சுமி வீட்டில் வாசம் புரியும் நாள் என சொல்லப்படுவதால் அன்றைய நாளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தீபாவளி நாளில் நரகாசுரனை வீழ்த்தியதை கொண்டாடும் வண்ணம் எண்ணெய் தேய்த்து குளித்து குளித்துவிட்டு புத்தாடை அணிய வேண்டும் என்பது மரபாக உள்ளது. அன்றைய நாளில் எண்ணெய் தீர்த்து குளிப்பதால் நம்மை சுற்றி இருந்த பீடைகள் விலகி புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதே சமயம் வெந்நீரில் கங்கை எழுந்தருளுகிறார் என்பதால் தான் தீபாவளி நாளில் அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாள் தீபாவளி என்பதால் இன்றைய நாளில் நாம் இறைவழிபாடு மேற்கொள்வதால் வாழ்க்கையில் உள்ள எல்லா தீமைகளும் நீங்கி ஆனந்தம் பெருகும் என சொல்லப்படுகிறது.தீபாவளி என்று அமாவாசை என்பதால் நாம் கண்டிப்பாக இறை வழிபாடு மேற்கொள்ளும் போது முன்னோர் வழிபாடு சேர்த்து மேற்கொள்ளலாம். கண்டிப்பாக அன்றைய நாள் காகங்களுக்கு உணவு கிடைக்காமல் நாம் உணவு சாப்பிடக்கூடாது. மேலும் வீட்டில் செய்த திண்பண்டங்களை சாமிக்கு நைவேத்தியமாக வைத்து புத்தாடைகள் மஞ்சள் வைத்து வழிபாடு நடத்திய பிறகு தான் அணிந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம் தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியினர் அந்நாளில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை நம்பிக்கை ஆகும். மேலும் தீபாவளியை வட இந்தியாவில் 3 நாட்கள் கொண்டாடுகிறார்கள். சில மாநிலங்களில் 5 நாட்கள் கூட தீபாவளி கொண்டாடப்படுவது உண்டு. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு நாளில் தீபாவளி முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News