5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: குட்டி ஜப்பான் சிவகாசியில் பட்டாசு பிறந்த கதை தெரியுமா?

Deepavali 2024: தீபாவளி பட்டாசு என்றால் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஊர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி தான். பட்டாசு என்றாலே சிவகாசி தான் என சொல்லும் அளவுக்கு இந்த ஊர் உலகளவில் பிரசித்தி பெற்றது. தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.

Diwali 2024: குட்டி ஜப்பான் சிவகாசியில் பட்டாசு பிறந்த கதை தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 23 Oct 2024 17:12 PM

பட்டாசு பிறந்த கதை: தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராக வருகிறது. தீப விளக்குகள், புத்தாடைகள் பலகாரங்கள், தீபாவளி வாழ்த்துக்கள் ஆகியவற்றோடு பட்டாசுகள் வெடிக்காமல் அன்றைய நாள் ஓயாது என்று சொல்லலாம். தீபாவளி என்றாலே காதை கிழிக்கும் பட்டாசுகளும், வாயைப் பிளக்க வைக்கும் வண்ணமயமான வாண வேடிக்கை வெடிகளும் தான் நம் நினைவுக்கு வரும்.நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விதவிதமான பட்டாசுகள் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

அத்தகைய 2கரிசல் பூமியாக இருக்கும் சிவகாசியை கந்தக பூமியாக மாற்றி வர்த்தகத்தில் தனக்கென தனி இடம் பிடிக்க வைத்த பங்கு இருவருக்கு உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Also Read: Tasmac: குடிமகன்களுக்கு ஷாக்.. தீபாவளிக்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

நாம் இந்த தொகுப்பில் சிவகாசியில் பட்டாசு பிறந்த கதையையும், அந்த ஊரின் அடையாளம் மாறிய கதையையும் பற்றி காணலாம். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டத்தில் விவசாயம் செய்வது, கயிறு திரிப்பது, மண்பானை செய்வது, மாடு வளர்ப்பது போன்ற சின்ன சின்ன தொழில்களை செய்து தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இதில் சிவகாசியும் விதிவிலக்கு அல்ல. 1922 ஆம் ஆண்டு அந்த ஊரில் வசிக்கும் ஒருவர் அய்யன் நாடார் மற்றும் அவரது உறவினர் சண்முக நாடார் இருவருக்கும் ஒரு பத்திரிக்கை செய்தி ஒன்றை காட்டியுள்ளார்.

அதில் தீப்பெட்டி தயாரிப்பது எப்படி என்பது பற்றியும், அதில் பயன்படுத்தப்படும் வேதியியல் தொழில்நுட்பம் பற்றியும், எதிர்காலத்தில் தீப்பெட்டியின் பயன்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை காட்டி நீங்கள் இருவரும் கொல்கத்தாவுக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை கற்றுக் கொண்டு வரலாம் என அந்த நபர் ஐடியா கொடுக்க அதன் பின்னர் எழுதப்பட்டது புதிய வரலாறு.

Also Read: Diwali Special Train: தீபாவளி விடுமுறை.. நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

17 வயதான அய்யன் நாடாரும், 19 வயதான சண்முக நாடாரும்  இருவரும் கொல்கத்தா செல்ல முடிவு செய்தனர். அப்போது ரயில் வசதிகள் பெரிதாக கிடையாது. அதேபோல் கொல்கத்தாவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அங்கு பேசப்படும் வங்கமொழியும் தெரியாது. அப்படி ஏராளமான தடைகள் இருந்தும் தயங்காமல் இருவரும் கொல்கத்தா சென்றனர். சென்னை சென்று அங்கிருந்து கொல்கத்தாவை அடைந்த இருவரும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டனர்.

பின்னர் 1923 ஆம் ஆண்டு சிவகாசிக்கு மீண்டும் வந்தனர். அங்கு ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கியதால சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண மக்களுக்கு வேலை கிடைத்தது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும் உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அதே வேதியியல் முறையை பயன்படுத்தி 1925 ஆம் ஆண்டில் முதன் முதலாக தேசிய பட்டாசுகள் என்று பெயரில் பட்டாசுகளை விற்பனைச் செய்ய தொடங்கினர்.

மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அய்யன் நாடார் அணில் பட்டாசுகள் என்ற பெயரிலும், சண்முக நாடார் சேவல் பட்டாசுகள் என்ற பெயரிலும் தனித்தனியாக பட்டாசுகளை விற்பனை செய்தனர். இது 1984 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டு அய்யன் பட்டாசுகள் என்ற பெயரில் பட்டாசு ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்றக் கம்பெனிகளும் பட்டாசு விற்பனையைத் தொடங்கி தொழிலில் கொடிக்கட்டி பறந்து வருகின்றனர்.

1952 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரை சண்முக நாடார் சிவகாசி நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார். அதேபோல் 1955ஆம் ஆண்டு முதல்  1963 ஆம் ஆண்டு வரை சிவகாசி நகராட்சி தலைவராக அய்ய நாடார் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் சிவகாசியில் கல்லூரிகளை தொடங்கி கல்வி சேவையிலும் ஈடுபட்டனர்.

சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்ட நிலையில் அதனைப் பேக்கிங் செய்யும் நிலை ஏற்பட்டது. இப்படித்தான் சிவகாசியில் அச்சக தொழிலும் விரிவாக்கம் அடைந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நூறாண்டுகளை கொண்டாடும் சிவகாசி பட்டாசுகள் செய்யும் முறை மிகவும் ஆபத்து நிறைந்தது. வருடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக உள்ளூர் தொடங்கி உலகம் வரை ஏற்றுமதி செய்ய 365 நாட்களும் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்பட்டவையாக உள்ளது. பசுமை பட்டாசுகள், சீனப் பட்டாசுகள் வந்தாலும் சிவகாசி பட்டாசுகளுக்கு இருக்கும் மவுசு தனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News