5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali: தீபாவளி வந்தாச்சு… கங்கா ஸ்நானம் செய்ய, புத்தாடை அணிய, பூஜை செய்ய உகந்த நேரம் எது?

Auspicious Time od Diwali: சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பலகாரம், பட்டாசு, புத்தாடை, வழிபாடு என இந்த தீபாவளி பண்டிகை கோலாலமாக கொண்டாடப்படும். இந்த நாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம், புத்தாண்டு அணிய உகந்த நேரம் மற்றும் தீபாவளி பூஜை செய்ய உகந்த நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Diwali: தீபாவளி வந்தாச்சு… கங்கா ஸ்நானம் செய்ய, புத்தாடை அணிய, பூஜை செய்ய உகந்த நேரம் எது?
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 30 Oct 2024 23:04 PM

இந்தியா முழுவதும் கோலாலமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி கொண்டாட்டம் காலையில் கங்கா ஸ்நானத்துடன் தொடங்குகிறது.

கங்கா ஸ்நானம் செய்யும் நேரம்:

கங்கா ஸ்நானத்தை அதிகாலை 3 மணி முதல் 5:30 முடித்து விட வேண்டும். கங்கா ஸ்நானம் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அனைவராலும் கங்கைக்கு சென்று நீராட முடியாது. ஆனால் தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கங்கையில் குளித்த அதே நன்மை கிடைக்கப்படும். தீபாவளி அன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி எழுந்து அருள்வதாக ஐதீகம். இந்த நாளில் கங்கையில் நீராடினால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாவங்கள் கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் தான் தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் என்பது முக்கியமாக கருதப்படுகிறது. நல்லெண்ணெயில் இரண்டு மிளகு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நல்லெண்ணையை பெரியவர்கள் கையில் கொடுத்து அவர்கள் காலில் விழுந்த ஆசிர்வாதம் வாங்கி பின்பு அவர்கள் கையால் எண்ணையை தலையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நாளில் ஷாம்பு பயன்படுத்துவது கூடாது. எனவே கண்டிப்பாக சீகக்காய் மட்டுமே தேய்த்து குளிக்க வேண்டும். அதேபோல் குளிர்ந்த நீரில் நீராடக் கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில் மட்டுமே கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். குளிக்கும் பொழுது கங்காதேவியை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை பின்பற்றும் பொழுது புனித கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

Also Read: Diwali : தீபாவளி தினத்தில் குபேர லட்சுமி பூஜை செய்வது எப்படி? கிடைக்கும் பலன்கள்!

பூஜை நேரம் மற்றும் புத்தாண்டை அணியும் நேரம்:

காலை 6:00 மணிக்குள் முடிந்த அளவு பூஜைகளை செய்து முடித்து விட வேண்டும். முதல் நாள் இரவே தீபாவளியன்று அணிய இருக்கும் இருக்கும் புத்தாடைகளை தனித் தனியாக தாம்பூலத்தில் எடுத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பின்பு தீபாவளி அன்று காலையில் கங்கா ஸ்நானம் செய்து முடித்த பிறகு பலகாரம், பட்டாசு, புத்தாடை ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். பின்பு கடவுளுக்கு தீப தூப ஆராதனை காட்டிவிட்டு புத்தாடைகளை அணிந்து கொள்ளலாம். முடிந்தவரை இதை காலை 6:00 மணிக்குள் செய்து முடித்து விடுங்கள்.

ஒருவேளை இந்த நேரத்தை தவறவிட்டால் காலை 7:45 முதல் 8:45 வரையிலும், காலை 10:45 முதல் 11:45 வரையிலும் பூஜை செய்து புத்தாடை அணிந்து கொள்ளலாம். சாமிக்கு படைத்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வது நல்லது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை மற்றும் 9:00 மணி முதல் 10:30 ‌ மணி வரை நல்ல நேரம் இல்லை. எனவே அந்த நேரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இந்த நாளில் செய்ய வேண்டியவை:

தீபாவளியன்று காலையில் முதல் செலவாக உப்பும் மஞ்சளும் புதிதாக வாங்கி வந்து வைத்து விடுங்கள். மாலை வீட்டில் விளக்கு ஏற்றும் முன் பூஜை அறையில் சாமி படத்திற்கு முன் இந்த மஞ்சளும் உப்பும் வைத்த பெரும் விளக்கேற்றி வணங்கிக் கொள்ளுங்கள். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதுபோல மஞ்சளும் பல மங்களகரமான விஷயங்களில் முதல் எனது இந்த நாளில் வீட்டில் மங்கலமும் செல்வமும் நிறைந்திருக்க இந்த இரண்டு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Also Read: கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்? தீபாவளி தின கனவு பலன்கள் இதுதான்!

முடிந்த அளவு வீடு முழுவதும் தீபங்களால் அலங்காரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் குறைந்தது தலை வாசலில் இரண்டு தீபங்களாவது ஏற்றி வைத்து விட வேண்டும். காலை மாலை வேலைகளில் லட்சுமி குபேர பூஜைகள் செய்வது மிக மிக நல்லது. ‌ பூஜை அறையில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரிசையாக தீபங்கள் ஏற்ற வேண்டும் . நாணயத்தின் சப்தங்கள் குபேரனுக்கு பிடித்தது என்பதால் நாணய சப்தங்களை அந்த நாளில் எழுப்பலாம். மாலை நேரத்தில் நெய் விளக்கு ஒன்றாவது கண்டிப்பாக ஏற்ற வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் நமக்கு சகல செல்வமும் சகல ஆரோக்கியமும் கிடைக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News