5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

Deepavali Festival: ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியை மையப்படுத்தி கொண்டாடப்படும் தீபாவளி நடப்பாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு சிறப்பு விடுமுறை அளித்துள்ளது. ஆக மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இப்படியான நிலையில் பலருக்கும் தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது.

Diwali 2024: தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Oct 2024 11:30 AM

தீபாவளி பண்டிகை: இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சில பண்டிகைகள் மட்டும் தான் ஒட்டுமொத்த மாநில மக்களாலும் இனம், மதம், மொழி, கலாச்சாரம் கடந்து வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதில் ஒன்று தான் தீபாவளி. ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியை மையப்படுத்தி கொண்டாடப்படும் தீபாவளி நடப்பாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு சிறப்பு விடுமுறை அளித்துள்ளது. ஆக மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இப்படியான நிலையில் பலருக்கும் தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது. காரணம் காலம் காலமாக ஒரு முறை பின்பற்றப்பட்டு வரும். ஆனால் தலைமுறைகள் மாறும்போது அந்த கொண்டாட்ட முறையில் சந்தேகம் உண்டாகும். இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறையைப் பற்றி நாம் காணலாம்.

Also Read: Diwali 2024: தீபாவளிக்கு விநாயகர், லட்சுமி சிலை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மற்ற பண்டிகைகளை காட்டிலும் தீபாவளி பண்டிகை ஒரு மாதம் முன்னாடியே கொண்டாட தொடங்கி விடுவோம். பட்டாசுகளை வாங்கி வெடிக்க தொடங்கினாலே பண்டிகை வந்து விட்டது என அர்த்தம். பொங்கலை விட தீபாவளிக்கு தான் மவுசு அதிகம். பலரும் புதுத்துணிகள் எடுப்பதும் தீபாவளிக்கு தான். தீபாவளிக்கு பல்வேறு விதமான வரலாற்று காரணங்கள் சொல்லப்படுகிறது. மேலும் இந்து, சீக்கியம், சமணம், பௌத்தம் ஆகிய மதத்தினரும் தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

தீபாவளி பண்டிகை நாளில் எண்ணெய் குளியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாளில் மட்டும் நாம் குளிக்கும் நீரில் கங்கையும், தலைக்கு வைக்கும் நல்லெண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால் தான் அந்த எண்ணெய் குளியல் கங்கா ஸ்நானம் என சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறது. எனவே எழுந்ததும் முதலில் எண்ணெய் குளியலை முடித்துவிட்டு தான் தீபாவளி பண்டிகை தொடங்க வேண்டும்.

மேலும் முதல் நாள் நாம் பூஜை செய்யும் இடத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முடிந்தவர்கள் வீடு முழுவதையும் கழுவி விடலாம். பின்னர் ஈரமான அல்லது சுத்தமான துணிகளைக் கொண்டு சாமி படங்களை துடைக்க வேண்டும். விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களையும் கழுவி வைக்க வேண்டும். பின்னர் முடிந்தால் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையன்று குளித்துவிட்டு நேராக பூஜை அறைக்கு வந்து விளக்கேற்ற வேண்டும்.

சாஸ்திரப்படி வீட்டில் இருக்கும் அனைவரும் எண்ணெய் குளியல் எடுத்த பிறகுதான் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது. குளித்து விட்டு வந்ததும் வாசலில் வண்ணப் பொடிகளால் கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும்.பின்னர் புது துணிகளை ஒரு தாம்பாளத்தில் வைத்து அதனுடன் தீபாவளி பலகாரம், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றையும் வைத்து தீபம் மற்றும் தூப ஆதாரனைகளைக் காட்டி வழிபட வேண்டும்.

Also Read: Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!

வழிபாடு முடிந்த பின்னர் புதுத் துணிகளில் சந்தனம் அல்லது மஞ்சள் தடவிய பின்பு தான் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் கடவுளை வணங்கி விட்டு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் தான் காலை உணவு சாப்பிட வேண்டும். பெரும்பாலான வீடுகளில் தீபாவளியன்று காலை உணவாக இட்லி செய்யப்படுவது வழக்கம். அதனுடன் சைவம் அல்லது அசைவம் சேர்த்து பரிமாறப்படுவது வழக்கம்.

பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டுகளுக்கு தீபாவளி பலகாரங்களை அளித்து வாழ்த்துக்களை சொல்லி மகிழ வேண்டும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் தீபாவளி கொண்டாடும் அவசரத்தில் காலை உணவை தவிர்க்க முயற்சிக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் செய்யக்கூடாது. மேலும் தீபாவளி அன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். பாரம்பரிய தீபாவளி வழக்கமாக அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வணங்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News