5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளிக்கு விநாயகர், லட்சுமி சிலை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Ganesh & Lakshmi Idol: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை தொடங்கியுள்ளது. இவ்விழா சில இடங்களில் ஐந்து நாட்களும், மற்ற இடங்களில் இரண்டு நாட்களும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமாவாசை திதி அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி இரவு கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று வீட்டில் விநாயகப் பெருமானையும் லட்சுமி தேவியையும் வழிபடுவது வழக்கம். லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். லட்சுமி தேவி வசிக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் பஞ்சமில்லை என்பது நம்பிக்கை. ஆனால் லட்சுமி தேவிக்கு நிலையற்ற குணம் உண்டு.அதனால் அவள் ஒரு இடத்தில் அதிக நேரம் தங்குவதில்லை. அனால் விநாயக பெருமானையும் இணைத்து வணங்க வேண்டும்

Diwali 2024: தீபாவளிக்கு விநாயகர், லட்சுமி சிலை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
லட்சுமி விநாயகர் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 22 Oct 2024 22:59 PM

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை தொடங்கியுள்ளது. இவ்விழா சில இடங்களில் ஐந்து நாட்களும், மற்ற இடங்களில் இரண்டு நாட்களும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமாவாசை திதி அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி இரவு கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று வீட்டில் விநாயகப் பெருமானையும் லட்சுமி தேவியையும் வழிபடுவது வழக்கம். லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். லட்சுமி தேவி வசிக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் பஞ்சமில்லை என்பது நம்பிக்கை. ஆனால் லட்சுமி தேவிக்கு நிலையற்ற குணம் உண்டு. அதனால் அவள் ஒரு இடத்தில் அதிக நேரம் தங்குவதில்லை.

லட்சுமி தேவியின் வீட்டில் நிரந்தரமாக இருக்க லட்சுமி தேவியுடன் கணபதியையும் வழிபட வேண்டும். ஏனெனில் விநாயகர் ஒரு மங்கள சின்னமாக கருதப்படுகிறது. ஐஸ்வர்யம் வீட்டில் இருக்கும் போதுதான் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அதனால்தான் தீபாவளி நாளில் லட்சுமி தேவியுடன் கூடிய விநாயகப் பெருமானின் சிலை அல்லது படத்தைக் கொண்டு வழிப்படுவார்கள். இந்த சிலைகள் மனித வாழ்வில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த சிலைகளை மிகவும் கவனமாக வாங்க வேண்டும். சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விநாயகர் சிலை வாங்க வேண்டிய முறை:

விநாயகர் சிலையைப் பொறுத்தவரை விநாயகர் சிலையை வாங்கும் போது விநாயகர் வாகனத்தில் எலி இருப்பது மிகவும் அவசியம். விநாயகரின் கையில் லட்டு அல்லது மோதகம் இருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அத்தகைய சிலை செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே தீபாவளிக்கு இந்த அம்சங்களுடன் கூடிய விநாயகர் சிலையை வாங்குங்கள்.சந்தையில் பல வகையான லட்சுமி விநாயகர் சிலைகள் கிடைக்கின்றன. இந்த விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலைகளை ஒன்றாக வணங்க வேண்டும் அல்லது தனி தனியாக வாங்கி ஒன்றாக வைத்து வணங்க வேண்டும். விநாயகர் சிலையை வாங்கும் போது, விநாயகரின் தும்பிக்கை இடதுபுறம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Also Read: Vastu Tips: தாமிர சூரியனை வீட்டில் மாட்டினால் இவ்வளவு நன்மைகளா?

லட்சிமி சிலை வாங்க வேண்டிய முறை:

லட்சுமி சிலை வைக்க, வீட்டில் எப்போதும் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் சிலையை கொண்டு வர வேண்டும். லட்சுமியின் நிற்கும் சிலை அசைவது போல் உணரப்படுகிறது. நிலையான லட்சுமிக்காக அமர்ந்திருக்கும் லட்சுமியை மட்டும் வீட்டிற்கு வாங்கி வாருங்கள். அதனால் அவள் எப்போதும் வீட்டில் தங்கி இருப்பாள். லட்சுமி தேவி ஆந்தையின் மீது அமர்ந்திருப்பது அசுபமானது. எனவே தாமரை அல்லது யானை மீது அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் படத்தை கொண்டு வாருங்கள்.லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். எனவே செல்வத்தை பொழியும் லட்சுமி தேவியின் படத்தையோ அல்லது அதுபோன்ற சிலையையோ கொண்டு வந்தால் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை தீரும் என்பது நம்பிக்கை.

மேலும் நீங்கள் களிமண் சிலையை கொண்டு வருகிறீர்கள் என்றால் புதிய சிலையை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு  பழைய சிலையை தண்ணீரில் அல்லது களிமண்ணில் கரைக்க மறக்காதீர்கள். அல்லது பித்தளை, தங்கம், வெள்ளி போன்ற உலோகச் சிலைகளை ஒருவர் கொண்டு வந்தால் அவற்றை அகற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்களை எப்போதும் வணங்கலாம்.

Also Read: Diwali 2024: வடமாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி.. ஏன் தெரியுமா?

பலன்கள்:

லட்சுமி மற்றும் விநாயகர் இருவரையும் ஒன்றாக வழிபடுவதால் செல்வமும் ஞானமும் சமமாக கிடைக்கப்படுகிறது. புத்திசாலித்தனம் இல்லாமல் செல்வம் வைத்திருப்பதும் அறிவு இருந்து செல்வம் இல்லாமல் இருப்பதும் ‌ வாழ்க்கைக்கு பலன் அளிக்காது. எனவே விநாயகர் லட்சுமி ஆகியோரை ஒரு சேர வழிப்படுவதன் மூலமாக இரண்டையும் பெற முடியும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News