5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளி பண்டிகைக்கு மட்டும் திறக்கப்படும் சிவன் கோயில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?

400 சதுர மீட்டரில் ராணிபோக்காரி என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலில் தான் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சிவபெருமானுக்கு மாத்திரிகேஸ்வரர் மகாதேவ் என்ற பெயர் சூடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலானது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே திறக்கப்படும். அன்றைய தினம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சிவ பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

Diwali 2024: தீபாவளி பண்டிகைக்கு மட்டும் திறக்கப்படும் சிவன் கோயில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Oct 2024 13:25 PM

தீபாவளி பண்டிகை: அனைவரும் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகிறோம். இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் ஆகியவை வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் தீபாவளி தினத்தன்று வீட்டில் நடைபெறும் கடவுள் வழிபாடு என்பது மிக முக்கியமானது. தீபாவளி பண்டிகை உருவாவதற்கு வரலாற்று ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த நாளில் வீட்டில் கடவுள் வழிபாடு முடித்தவுடன் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று கடவுளை வணங்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி தினத்துக்கு மட்டுமே பிரபலமான பல கோயில்களும் உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையின் போது மட்டும் திறக்கப்படும் ஒரு கோயிலைப் பற்றி நாம் இக்கட்டுரையில் காண்போம்.

Also Read: Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

மாத்திரிகேஸ்வரர் கோயில்

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள தொழிற்பேட்டைக்கு அருகில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது. அங்கு 400 சதுர மீட்டரில் ராணிபோக்காரி என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலில் தான் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சிவபெருமானுக்கு மாத்திரிகேஸ்வரர் மகாதேவ் என்ற பெயர் சூடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலானது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே திறக்கப்படும். அன்றைய தினம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சிவ பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

நேபாள நாட்டைப் பொறுத்தவரை 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது அந்த ஊரில் திஹார் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் தீபாவளி சமயத்தில் நம்முடைய ஊரைப் போலவே வீட்டின் வாசலில் பெரிய பெரிய கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர். அதே சமயம் விதவிதமான இனிப்பு காரங்கள் போன்ற பட்சணங்களும் செய்து விழாவை சிறப்பிக்கின்றனர்.

Also Read:Diwali 2024: தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

கோயில் உருவான வரலாறு

புராணக் கதையின்படி இந்த கோயில் உருவானதற்கு வரலாறு ஒன்று உள்ளது. அதன்படி, ஓய்வறியாது தனது கடமையை செய்யும் எமதர்மனுக்கு மகாவிஷ்ணு ஐந்து நாட்கள் ஓய்வு கொடுக்கிறார். அந்த ஓய்வு நாளில் தனது சகோதரி யமுனாவை காண எமன் வீட்டுக்கு செல்கிறான். அப்போது அவனை வரவேற்று நெற்றியில் திலகமிட்டு விதவிதமாக விருந்து வைத்து சகோதரி யமுனா சிறப்பிக்கிறாள். இதனால் மகிழ்ந்து போன எமன் தங்கையை ஆசீர்வதிக்கிறான். அதோடு மட்டுமல்லாமல் இதேநாளில் இது போன்று நடந்து கொள்ளும் சகோதர, சகோதரிகள் யாவரும் நீண்ட நாட்கள் எம பயம் இல்லாமல் வாழ்வார்கள் என வரம் தந்து விட்டு எமதர்மன் செல்கிறான்.

இதனை அடிப்படையாகக் கொண்டு 5 நாட்கள் நேபாளத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் 5 ஆம் நாள் தான் இந்த கோயில் திறக்கப்படும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மாத்திரிகேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தின் வழியாக செல்ல சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வாயிலில் அழகிய வெள்ளை யானை சிற்பம் நம்மை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறிய கோவிலில் அதன் கோபுரம் நேபாளத்துக்குரிய இரண்டு அடுக்கு மாடத்துடன் அமைக்கப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கருவறையில் சிவபெருமான் அருள் பாலிக்கும் நிலையில் கோயிலுக்கு சகோதரி இல்லாத சகோதரர்கள் வந்தால் சகோதரி சார்பாக அவர்களுக்கு அர்ச்சகர் திலகமிட்டு வாழ்த்துகிறார். இதைப்போல் சகோதரர்கள் இல்லாத சகோதரிகள் வந்தாலும் சுவாமியை வழிபட வந்த ஒருவரை அந்த பெண்ணுக்கு சகோதரனாக மாற்றி அவனுக்கு திலகமிட்டு அந்த பெண்ணை வாழ்த்த சொல்லி மகிழ்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு  ஒரு நாள் மட்டும் இந்த கோயிலில் சிறப்பு நைவேத்தியமாக ஏராளமான இனிப்புகள் படைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பூஜைக்கு பிறகு அவற்றை கோயிலுக்கு வரும் சகோதர, சகோதரிகளுக்கு அர்ச்சகர் வழங்குகிறார். மேலும் அன்று இரவே கோயில் நடை சாத்தப்பட்டு அடுத்த வருடம் தீபாவளி 5 ஆம் நாள் தான் கோவில் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News