5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali: இந்தியா தோத்துரும்.. உலக நாடுகளில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டங்கள்!

Deepavali 2024: இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து விதமான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் கலாச்சாரத்தை பல உலக நாடுகளும் பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது அந்நாட்டு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Diwali: இந்தியா தோத்துரும்.. உலக நாடுகளில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டங்கள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Oct 2024 17:12 PM

உலக நாடுகளில் தீபாவளி: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து விதமான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் கலாச்சாரத்தை பல உலக நாடுகளும் பின்பற்றி வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது அந்நாட்டு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

நேபாளம்

நேபாளம் நாட்டில் வாழும் மக்களுக்கு இயற்கையாகவே கடவுள் பக்தி அதிகம். அவர்கள் திகார் என்ற பெயரில் தீபாவளியை 5 நாள் திருவிழாவாக கொண்டாடுவார்கள். திகார் என்றால் பண்டிகை என்று அர்த்தமாகும். இந்த ஐந்து நாட்களில் முதல் நாள் பசுவுக்கு அர்பணிக்கப்படுகிறது. பசு, லட்சுமி தேவியின் உருவமாக இருப்பதாக எண்ணி அன்றைய நாளில் அரிசி உணவு சமைத்து பசுக்களுக்கு தானமாக வழங்குகிறார்கள். இரண்டாவது நாளில் பைரவரின் வாகனமான நாய்கள் சிறப்பிக்கப்படுகிறது. இந்த மாதிரியான  விசேஷ நாட்களில் நேபாளத்தில் சிறியவர்கள் பெரியவர்களிடம் டீக்கா எனப்படும் ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அதாவது  தயிரில் அரிசியை ஊற வைத்து அதனுடன் குங்குமம் சேர்க்கும் போது அது கெட்டியான கலவையாக மாறுகிறது.  இதனை நெற்றியில் வைத்துக் கொள்வதால் பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைத்து வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பானில் தீபாவளி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று பூக்களை வாங்கி வீட்டை அலங்கரிக்கின்றனர். மேலும் தொங்கும் விளக்குகள் மற்றும் பேப்பரில் ஆன கலைப் பொருட்கள் எல்லாம் தயாரித்து வீட்டில் உள்ள மரங்களில் தொங்க விட்டு உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். புத்தாடை அணிந்து இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமான நிகழ்ச்சிகளும் உண்டு.

சீனா

சீனாவில் தீபாவளி பைடெங்க் ஜியே எனப்படும் தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. மக்கள் வீட்டின் உள்ளேயும்,  வெளியேயும் பூக்களால் அலங்கரிக்கின்றனர். மேலும் ரங்கோலி கோலமிட்டு அமர்க்களமாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். வீடுகளில் விளக்கேற்றி பாரம்பரிய முறைப்படி இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

 இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் விமரிசையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதேபோல் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டு தீபாவளியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நாள் விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வாசலில் வண்ணமயமான கோலங்களை விட்டு இது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் தீபாவளியையொட்டிவெள்ளை மாளிகையில்  நடைபெற்ற விருந்து உலகமெங்கும் பேசும் பொருளாக மாறியது.

Also Read: Airtel : ப்ரீபெய்டு திட்டங்களுக்கு காப்பீட்டு பலன்களை வழங்கும் ஏர்டெல்.. அந்த 3 திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் தீபாவளி தினம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது இந்த நாளில் பெரிய அளவில் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது. தீபாவளியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து இந்த நாள் கொண்டாடப்படுவதாக தென்னாப்பிரிக்கா அதிபர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

பிஜூ தீவு 

பிஜூ தீவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நிலையில் இந்த தீபாவளி நாளை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர். மேலும் நண்பர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்படுகிறது.

மலேசியா

மலேசியாவில் தீபாவளி இந்தியாவில் கொண்டாடுவதை போன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளியல், கோவில்களில் சிறப்பு பூஜை என தொடங்குகிறது. ஆனால் அந்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது என்பதால் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி இந்த நாளை கொண்டாடுகின்றனர்.

Also Read:Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபிகள்.. மைசூர் பாக், முறுக்கு செய்வது எப்படி..?

இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் தீபாவளி அன்று இரவு வீடுகளில் மக்கள் விளக்கேற்றி வழிபடுவதோடு பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகளை வெடித்து உற்சாகமடைகிறார்கள். இதேபோல் இலங்கையில் தீபாவளி தினத்துக்காக பிரத்தியேகமாக இனிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அங்கும் இந்தியாவைப் போல் வெகு விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரை பொறுத்தவரை அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் ஒரு மாதம் முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கும். தசராவும் அதனை தொடர்ந்து வரும் தீபாவளியும் அந்நாட்டில் அதிகமான இந்தியர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். இந்நாட்களில் இந்தியாவை போன்று தீபாவளிக்கு என ஸ்பெஷலான சந்தைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

Latest News