5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளி திருநாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் மற்றும் வழிபடும் முறை!

Deepavali oil Bath: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் 14ஆம் தேதி (அக்டோபர் 31ஆம் தேதி) வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. சில வருடம் அமாவாசை அன்று தீபாவளி வரும். ஒரு சில ஆண்டுகள் அமாவாசைக்கு முதல் நாள் தீபாவளி வரும்.

Diwali 2024: தீபாவளி திருநாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் மற்றும் வழிபடும் முறை!
தீபாவளி எண்ணெய் குளியல்
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 17 Oct 2024 19:39 PM

தீபாவளிக்கு ஆன்மிக நம்பிக்கை கதையுண்டு. அதன்படி இந்த நாளில்தான் நரகாசுரன் கொல்லப்பட்டார் என்பது நம்பிக்கை. ஆகவே கிருஷ்ண பரமாத்மாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த தீபாவளியை நாம் கொண்டாடி வருகிறோம். கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை சதுர்தசி என்பார்கள். அதாவது அமாவாசை தினத்திற்கு முன்பு வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்டத்தின் தென் இந்தியாவில் சதுர்தசி திதியும் அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது. மற்ற விரத தினங்களை போல் தீபாவளி நன்னாளிலும் விரதம் இருந்து பகவான் கிருஷ்ணரை நினைத்தும் மகாலட்சுமி,குபேரரை வணங்கி பூஜை செய்தால் நல்லது.

எண்ணெய் குளியல் முறை மற்றும் நேரம்:

தீபாவளி அன்று காலை 3 மணி முதல் 4:30 மணிக்குள் தலையில் எண்ணெய் தேய்த்து சிகக்காய் கொண்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். கங்கையில் சென்று குளிக்க முடியாதவர்கள் கூட செய்த பாவங்களை கழிக்க தீபாவளி அன்று காலை இந்த கங்கா ஸ்தானத்தை மேற்கொண்டால் கங்கையில் போய் குளித்த பலனை பெறலாம் என்பது ஐதீகம். பொதுவாக வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.‌

தீபாவளி அன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம் வீட்டில் இருக்கும் சுடுதண்ணீரில் அந்த கங்கா தேவியும் வாசம் செய்வார்கள். சீகக்காய் தூளில் வாயு பகவானும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. 4:30 மணிக்குள் குளித்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு வீட்டையும் பூஜை அறையையும் அலங்காரம் செய்ய வேண்டும்.

Also Read: Diwali: தீபாவளி நாளில் சனீஸ்வர பகவானை வழிபட்டால் செல்வம் பெருகும்!

பூஜை: வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் என்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். படம் வைத்து பூஜை செய்பவர்கள் என்றால் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி சேர்ந்த திருவுருவப்படத்தை துடைத்து, பொட்டு வைத்து, அலங்காரம் செய்து பூஜைக்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

திருவுருவப்படமும் இல்லை என்றால் தீப ஒளியில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜை அறையில் நமஸ்காரம் செய்து குடும்பத்தோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்களால் முடிந்த அளவிற்கு மண் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் வைக்கலாம். இதில் எந்த ஒரு குறிப்பிட்ட கணக்கும் கிடையாது.

அதில் ஒரே ஒரு தீபம் நெய் தீபமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த தீப ஒளியில் சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள். அதாவது வீட்டில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு தீபாவளி திருநாளான அன்றைய தினம் தீப ஒளியில் சிவ பெருமானை தரிசனம் செய்து குடும்பத்தோடு வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.

நெய்வேத்தியம்: துணி படைத்து வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் துணி படைக்கலாம். நெய்வேத்தியமாக வீட்டில் செய்த பலகாரங்கள்,முறுக்கு சுவியம், அதிரசம், இனிப்பு வகைகள், இட்லி, தோசை என்று எல்லாவற்றையும் மூன்று இலைகள் போட்டு வைத்து சிறிதளவு பட்டாசும் வைத்து தேங்காய் பழம் வெற்றிலை, பாக்கு சமர்ப்பித்து தீப தூப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.

Also Read: Diwali 2024: பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

வழிபாடு செய்துவிட்டு பிரசாதமாக படைக்கப்பட்ட இனிப்புகளை உண்டு விட்டு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்கள். இந்த வழிபாடு எல்லாம் காலை சூரிய உதயத்திற்கு முன்பு நிறைவு செய்ய வேண்டும். அதாவது காலை 6 மணிக்கு முன்பு இந்த வழிபாடு எல்லாம் முடிக்க வேண்டும்.‌

பிறகு வீட்டிற்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்று இரு‌‌ தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தீபாவளி வழிபாட்டை எல்லாம் நிறைவு செய்துவிட்டு அமாவாசை திதி மாலை துவங்குவதால் அன்றைய தினம் நோன்பு எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் மாலை நோன்பெடுக்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News