Ganesh Chaturthi: எந்த விநாயகர் வீட்டில் செல்வத்தை அள்ளித்தருவார் தெரியுமா? - Tamil News | Do you know which Vinayagar idol brings wealth to the house? | TV9 Tamil

Ganesh Chaturthi: எந்த விநாயகர் வீட்டில் செல்வத்தை அள்ளித்தருவார் தெரியுமா?

Published: 

06 Sep 2024 10:40 AM

நாம் நம்முடைய இல்லங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவோம். பிற இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்தால் எப்படி வழிபாடு செய்து கரைப்பார்களோ, அதேபோல நாமும் வீடுகளில் வைத்திருக்கும் விநாயகர் சிலைகளை கையாள வேண்டும். இதனிடையே வீடுகளில் அன்றாடம் வழிபடுவதற்காக வாங்கப்படும் சிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி காணலாம்.

Ganesh Chaturthi: எந்த விநாயகர் வீட்டில் செல்வத்தை அள்ளித்தருவார் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Follow Us On

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் முழுமுதற்கடவுள், ஆனைமுகன் விநாயகரை நாம் வணங்கினால் மிகப்பெரிய பலன்களைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாம் நம்முடைய இல்லங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவோம். பிற இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்தால் எப்படி வழிபாடு செய்து கரைப்பார்களோ, அதேபோல நாமும் வீடுகளில் வைத்திருக்கும் விநாயகர் சிலைகளை கையாள வேண்டும். இதனிடையே வீடுகளில் அன்றாடம் வழிபடுவதற்காக வாங்கப்படும் சிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி காணலாம்.

லலிதாசனம் முறை

நீங்கள் வீட்டில் வழிபட வாங்கும் விநாயகர் சிலை லலிதாசனம் முறையில் இருந்தால் நல்லது. அதாவது விநாயகர் ஒரு காலை மடித்தும், இன்னொரு காலை தொங்க விட்டநிலையிலும் அமர்ந்த கோலத்தில் இருப்பது லலிதாசனம் முறையாகும். இப்படியான விநாயகரை வழிபட்டால் செல்வ வளம் மற்றும் அமைதி வீட்டில் நிலவும். சில விநாயகர் சாய்ந்த நிலையில் இருப்பதை காணலாம். அதனையும் வாங்கி வீட்டில் வழிபடலாம். இது அதிர்ஷ்டம், செல்வ வளம், வசதியான வாழ்வின் அடையாளமாக கருதப்படுகிறது.

தும்பிக்கை ரொம்ப முக்கியம்

விநாயகர் சிலையில் நாம் கண்டிப்பாக அவரின் துதிக்கை எந்த திசையை நோக்கி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரங்களின்படி,விநாயகரின் துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருந்தால் செல்வ வளம் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகமாகும். அதே சமயம் வலதுபுறமாக திருப்பியபடி துதிக்கை இருந்தால் அதனால் குடும்பம் மற்றும் தனிப்பட்ட முறையில் சிரமமான நிலை உண்டாகும்.

வெள்ளை நிறம்

வெள்ளை நிற விநாயகரை மிகவும் சக்திவாய்ந்தவர். திருநீர் அல்லது வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட விநாயகரை வைத்து வழிபட்டால் குடும்பத்தில் நீண்டகாலமாக இருந்த பிரச்னை தீர்ந்து அமைதி நிலவும். மேலும் செல்வ வளம் அதிகரிக்கவும் இந்த விநாயகரை வழிபடலாம். தொழில் அல்லது வேலையில் முன்னேற்றம் பெற வேண்டுபவர்கள் மண் நிறத்திலான விநாயகர் சிலையை வீட்டில் வைக்கலாம். ஆனால் தாகும். விநாயகப் பெருமானின் சிலையின் பின்புறம் எப்போதும் வீட்டின் வாசலை நோக்கி இருக்குமாறு வைத்து வழிபட வேண்டும்.

நீங்கள் விநாயகர் சிலை அல்லது படம் வாங்கி வழிபடும்போது அது சேதமடையாமல் இருக்கிறதா என்பதை நன்கு கவனித்து வாங்க வேண்டும். அதேபோல் வீட்டிற்கு எடுத்து வரும் போதும் எவ்வித சேதமும் ஏற்படாமல் எடுத்து வருவது அவசியம்.வீட்டில் விநாயகர் சிலையை மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளில் வைத்து பிரதிஷ்டை செய்யலாம். காரணம் வடக்கு திசை விநாயகரின் தந்தையான சிவனுக்குரிய திசையாகும். இப்படியான வடக்கு திசையில் சிவன் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் விநாயகர் சிலையை ஒரு போதும் தெற்கு திசையில் பிரதிஷ்டை வைக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version