Aadi Amavasai: ஆடி அமாவாசை.. சமையலில் சேர்க்கக்கூடாத காய்கறிகள் என்னென்ன?

Aadi Month: அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபடுவது சிறந்தது. இதில் சிலர் மாதந்தோறும் வரும் அமாவாசை திதியில் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையை தவறாமல் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமாவாசை தினத்துக்கு முந்தைய நாள் வீட்டின் அனைத்து அறைகள், பூஜையறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். அதிகாலை எழுந்து குடும்பத்தினர் அனைவரும் நீராட வேண்டும்.

Aadi Amavasai: ஆடி அமாவாசை.. சமையலில் சேர்க்கக்கூடாத காய்கறிகள் என்னென்ன?

கோப்பு புகைப்படம்

Updated On: 

05 Aug 2024 15:44 PM

ஆடி அமாவாசை: பொதுவாக முன்னோர் வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் மிக முக்கியமானது. நம்மை காக்கும் கடவுள்கள் ஒருபுறமிருக்க, நம் தலைமுறையை படைத்த முன்னோர்களையும் கடவுளாக நினைத்து வழிபடுவது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் தினமும் முன்னோர்களை கும்பிட வேண்டும் என்பது இல்லை. ஆனால் அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபடுவது சிறந்தது. இதில் சிலர் மாதந்தோறும் வரும் அமாவாசை திதியில் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசையை தவறாமல் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த 3 நாட்களில் முன்னோர்களை வழிபாடு செய்து விரதம் இருந்தால் அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது ஐதீகம்.

Also Read: Aadi Amavasai: ஆடி அமாவாசை நாளில் இதெல்லாம் செய்யாதீங்க!

சமையலில் சேர்க்க வேண்டிய, கூடாத காய்கறிகள்

இப்படியான நிலையில் ஆடி அமாவாசை தினத்தில் நாம் சமையலில் என்ன செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் கீழ்கண்ட காய்கறிகளை உணவுகளில் பயன்படுத்தக்கூடாது. அந்த வகையில் வெண்டைக்காய், முட்டைகோஸ், நூக்கள், முள்ளங்கி, கீரைகள் (அகத்திக்கீரை தவிர), பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், காலிஃப்ளவர், கத்தரிக்காய், பட்டாணி, பூண்டு, தக்காளி, சௌ சௌ, பச்சை மிளகாய், கோவக்காய்,கேரட் உள்ளிட்ட காய்கறிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

அதேசமயம் வாழைக்காய், வாழைப்பூ, புடலங்காய், மாங்காய், இஞ்சி, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, முருங்கைக்காய், நெல்லிக்காய், பாகற்காய், பிரண்டை, வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி போன்ற காய்கறிகளை உணவுகளில் சேர்க்கலாம். மேலும் இந்த நாளில் உப்பு, அன்னம், கால்நடைகள், உடை, நெய் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம். இதனால் பல்வேறு விதமான பலன்கள் வந்து சேரும்.

Also Read: Oral Cancer: இதெல்லாம் இருந்தா வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.. உடனே ஹாஸ்பிட்டல் போங்க..!

படையலிடும் முறை

அமாவாசை தினத்துக்கு முந்தைய நாள் வீட்டின் அனைத்து அறைகள், பூஜையறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். அதிகாலை எழுந்து குடும்பத்தினர் அனைவரும் நீராட வேண்டும். தொடர்ந்து பெற்றவர்களை இழந்தவர்கள் ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் கோயில் குளத்தில் செய்யலாம். மேலும் அன்று முன்னோர்களின் புகைப்படங்களை ஒரே இடத்தில் வைத்து இரண்டு வாழை இலைகளை விரித்து அதில் பூ, பழம் ஆகியவை மட்டுமல்லாமல் படையல் செய்யப்பட்ட உணவை வைத்து வழிபட வேண்டும்.  இலையில் வைப்பதற்கு முன்னர் காகத்திற்கு உணவு வைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து படையல் போட்ட பின் விளக்கேற்றி வழிபட வேண்டும். பின்னர் அந்த படையல் சோற்றை வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே உண்ண வேண்டும். இந்த நாளில் யாரையும் வீட்டுக்கு அழைத்து உணவளிக்க கூடாது. ஆனால் வெளியில் தானம், தர்மம் செய்யலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்