Dream Astrology: இரண்டு மாதத்தில் இந்த 6 ராசிக்கு நினைத்தது நடக்கும்..! - Tamil News | dream-astrology these 6 zodiac signs That will happen in next 2 months | TV9 Tamil

Dream Astrology: இரண்டு மாதத்தில் இந்த 6 ராசிக்கு நினைத்தது நடக்கும்..!

சிலருக்கு கனவு பலன்கள் மீது நாட்டம் இருக்கும். நாம் காணும் கனவுகள் நல்லபடியாக இருக்க வேண்டும் என நினைப்போம். சில சமயங்களில் அசுபமான கனவுகளும் வரும். இதில் சில ராசிக்காரர்கள் மட்டும் விதிவிலக்காக இருப்பார்கள். அவர்கள் கனவு காண்பது மட்டுமின்றி அவற்றை அடைவதிலும் அசாத்திய திறமை கொண்டவர்கள். இன்னும் இரண்டு மாதங்களில் 2024 ஆம் ஆண்டு முடியவுள்ளது. இந்த ராசிகளின் அதிபதிகளின் அனுகூலமான இயக்கத்தைப் பொறுத்து இந்த ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dream Astrology: இரண்டு மாதத்தில் இந்த 6 ராசிக்கு நினைத்தது நடக்கும்..!

கோப்பு புகைப்படம்

Published: 

24 Oct 2024 18:56 PM

கனவுப்பலன்: பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மேல் அளவுக்கடந்த நம்பிக்கை இருக்கும். அதில் இருக்கும் கிரகங்களின் பலன்கள் நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சிலருக்கு கனவு பலன்கள் மீது நாட்டம் இருக்கும். நாம் காணும் கனவுகள் நல்லபடியாக இருக்க வேண்டும் என நினைப்போம். சில சமயங்களில் அசுபமான கனவுகளும் வரும். இதில் சில ராசிக்காரர்கள் மட்டும் விதிவிலக்காக இருப்பார்கள். அவர்கள் கனவு காண்பது மட்டுமின்றி அவற்றை அடைவதிலும் அசாத்திய திறமை கொண்டவர்கள். இன்னும் இரண்டு மாதங்களில் 2024 ஆம் ஆண்டு முடியவுள்ள நிலையில், ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளை நனவாக்குவதில் மற்ற ராசிக்காரர்களை விட முன்னிலையில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராசிகளின் அதிபதிகளின் அனுகூலமான இயக்கத்தைப் பொறுத்து இந்த ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

Also Read: Vastu Tips: நிதி பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் ஏலக்காய்! – வாஸ்து டிப்ஸ் இதோ!

  1. ரிஷபம்: இந்த ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கைகளுக்கும் ஆசைகளுக்கும் முடிவே இருக்காது. குறிப்பாக இவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற எந்த ரிஸ்கான முயற்சியும்  எடுக்க தயங்க மாட்டார்கள்.  ஆனால் இவர்களின் தளராத ஆளுமையால், அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற அதிக வாய்ப்புள்ளது. சுக்கிரனின் அனுகூலத்தால் அடுத்த இரண்டு மாதங்களில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
  2. சிம்மம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் மீது அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். இந்த ராசிக்கு அதிபதியான சூரியனுக்கு தன்னம்பிக்கையும், படைப்பாற்றலும் அதிகமாக இருக்கும். கனவு கண்டால் அது நிறைவேறும் வரை தூங்க மாட்டார்கள். இவர்களுக்குள் அதிகார மோகம் அதிகமாக உண்டு. இந்த ராசிக்கு தற்சமயம் சூரியன் மிகவும் சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் அதிகாரம், தொழில், வியாபாரத்தில் ஆதிக்கம், அங்கீகாரம் ஆகியவற்றுக்காக முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
  3. தனுசு: பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு லட்சியம் அதிகமாக இருக்கும். இந்த ராசி அதிபதியான வியாழனும் அதிர்ஷ்டம் மற்றும் விரிவாக்கம் தரும் கிரகமாக இருக்கும். இது கொஞ்சம் அனுகூலம் இருப்பதால் இந்த ராசியின் கனவுகள் அனைத்தும் நனவாகும். அவர்களிடம் நேர்மறையான அணுகுமுறையும் ஓரளவு அதிகமாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் கனவு காண்பது மட்டுமல்லாமல், அவற்றை அடைய கடுமையாக பாடுபடவும் செய்வார்கள். அவர்களின் கனவுகள் நனவாகி செல்வம் பெருகும்.
  4. கும்பம்: புதிய யோசனைகள் மற்றும் புதிய மாற்றங்களுக்கு செல்லப் பெயர் பெற்ற ராசியான கும்பம், எதிர்காலத்தின் மீது உங்கள் பார்வையை வைத்திருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் சமகால சூழ்நிலைகளுக்கு அப்பால் சிந்திப்பதில் வல்லவர்கள். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருப்பார்கள். ஆட்சி, மக்கள் தொடர்பு மற்றும் சேவைத் துறைகளில் உயர் பதவிகளை அடைய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கும். தற்போது ராசி அதிபதியான சனி பகவான் இந்த லக்னத்தில் இருப்பதால் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு நம்பிக்கை, லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
  5. மீனம்: இந்த ராசிகாரர்கள் பொதுவாகவே அதிக கனவு காண்பவராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் கனவுகள், ஆசைகள் மற்றும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். பொதுவாக, பணம் சம்பாதிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக திகழ்வார்கள். தற்சமயம் ராசி அதிபதியான வியாழன் மூன்றாம் பட்ச ஸ்தானத்தில் அதாவது முயற்சி சம்பந்தப்பட்ட ஸ்தானத்தில் இருப்பதால் அவர்களின் கனவை நனவாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே எந்த வாய்ப்பையும் தவற விடாமல் இந்த ராசிக்காரர்கள் விரும்பியதை அடைகிறார்கள்.

Also Read: Diwali: இந்தியா தோத்துரும்.. உலக நாடுகளில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டங்கள்!

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!