Dream Astrology: பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும் தெரியுமா? - Tamil News | Dream Astrology What does it mean if snake comes to your dream | TV9 Tamil

Dream Astrology: பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Published: 

10 Nov 2024 12:49 PM

Spiritual: கனவு அனைவரது வாழ்க்கையில் சகஜமான நிகழ்வுகளில் ஒன்று. சில நேரங்களில் நாம் கனவு காணும் சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெறும் அளவுக்கு அதற்கு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. நாம் காணும் கனவுகள் அனைத்து பாசிட்டிவாக இருக்கும் என சொல்ல முடியாது. சில நேரங்களில் நெகட்டிவாக இருக்கும்போது நாம் பயந்துபோவோம்.

1 / 6கனவுகள்

கனவுகள் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது வாழ்க்கையில் சகஜமான நிகழ்வுகளில் ஒன்று. சில நேரங்களில் நாம் கனவு காணும் சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெறும் அளவுக்கு அதற்கு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.

2 / 6

நாம் காணும் கனவுகள் அனைத்து பாசிட்டிவாக இருக்கும் என சொல்ல முடியாது. சில நேரங்களில் நெகட்டிவாக இருக்கும்போது நாம் பயந்துபோவோம். அந்த வகையில் உங்களுடைய கனவில் பாம்பு வந்தால், அல்லது பாம்பு தொடர்பான கனவுகளை கண்டால் என்ன அர்த்தம் என்பதை காணலாம்.

3 / 6

பாம்பு கனவில் வீட்டுக்கு வந்து பின்னர் வெளியே செல்வது போல நீங்கள் கனவு கண்டால் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து வழிபட வேண்டும் என உங்களுடைய குல தெய்வம் உத்தரவிடுகிறது என அர்த்தமாகும். நம் தலைமீது ஏறி செல்வது போல கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

4 / 6

உங்களுடைய வீட்டில் இருந்து பாம்பு வெளியேறுவது போல மட்டும் கனவு கண்டால் இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த அனைத்து விதமான கஷ்டஙகளும் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பது அர்த்தமாகும். பாம்பை அடிப்பதுபோல கனவு கண்டால் உங்களை சுற்றியிருக்கும் எதிரிகளை அடையாளம் காண்பீர்கள் என சொல்லப்படுகிறது.

5 / 6

பாம்பு வீட்டிற்கு வந்து யாரையாவது கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் யாரோ ஒருவரால் அதிகம் ஏமாற்றப்படுகிறீர்கள் என அர்த்தமாக சொல்லப்படுகிறது. நல்ல பாம்பு வீட்டில் இருப்பது போல கனவு கண்டால் நோய்வாய் படுவீர்கள்.

6 / 6

ஒருவேளை நல்ல பாம்பு வீட்டில் மறைந்து இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு நிச்சயம் வீட்டில் உள்ளவர்களால் பிரச்சினை ஏற்படும் என கனவு ஜோதிட பலன்களில் கணிக்கப்பட்டுள்ளது. (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்