December Month: நோட் பண்ணுங்க.. டிசம்பரின் முக்கிய விசேஷ தினங்கள் இதோ!

பொதுவாக மார்கழி மாதத்தில் எந்தவித விசேஷ காரியமும் செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏதேனும் நல்ல காரியம் செய்ய நினைத்தால் அதனை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் எதுவாக இருந்தாலும் செய்து முடித்து விடுவது நல்லது.

December Month: நோட் பண்ணுங்க.. டிசம்பரின் முக்கிய விசேஷ தினங்கள் இதோ!

கோப்பு புகைப்படம்

Published: 

29 Nov 2024 08:30 AM

டிசம்பர் மாத விசேஷ நாட்கள்: 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பருக்கு நாம் வந்து விட்டோம். இந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கலாம். பல விஷயங்களை நாம் மறந்து இருக்கலாம். சில விஷயங்கள் நம் காலத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு நடந்திருக்கலாம். ஆனால் ஓர் ஆண்டின் கடைசி மாதமாக வரும் டிசம்பர் வந்துவிட்டால் நாம் அனைவருக்கும் உள்ளுக்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாகும். காரணம் இந்த ஆண்டில் நம் ஏராளமான துன்பங்கள், சவால்கள் ஆகியவற்றை எதிர்கொண்டிருப்போம். இது எல்லாம் கடந்து 2025 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

ஆன்மீகத்தில் டிசம்பர் மாதம்

அதே சமயம் ஆன்மீக பாதையை எடுத்துக் கொண்டால் டிசம்பர் மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். கார்த்திகை 15 நாட்களும் மார்கழி மாதத்தின் 15 நாட்களும் டிசம்பர் மாதத்தில் வரும் நிலையில் சபரிமலை அறுபடை முருகன் கோயில்கள் என அனைத்திற்கும் பக்தர்கள் மாலை அணிந்து பிரதமிருந்து பாதுகாக்க சென்று சாமி வழிபாடு செய்வார்கள். நாம் இந்த தொகுப்பில் டிசம்பர் மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினம், சஷ்டி விரதம், திருக்கார்த்திகை, பௌர்ணமி, அமாவாசை, மார்கழி மாத பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, நவமி, கிறிஸ்மஸ் பண்டிகை, ஏகாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ நாட்கள் எப்போது வருகிறது என்பது பற்றி காணலாம்

Also Read: Sabarimala: ஐயப்பனுக்கு ஏன் நெய் தேங்காய் அடைக்கப்படுகிறது தெரியுமா?

கார்த்திகை மாத விசேஷ நாட்கள் (டிசம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை 

  • டிசம்பர் 2 – கார்த்திகை 17 – திங்கட்கிழமை – சந்திர தரிசனம், கரிநாள்
  • டிசம்பர் 5 – கார்த்திகை 20 – வியாழக்கிழமை – சுபமுகூர்த்த தினம், சதுர்த்தி விரதம், திருவோண விரதம்
  • டிசம்பர் 6 – கார்த்திகை 21 – வெள்ளிக்கிழமை – ஷஷ்டி விரதம்
  • டிசம்பர் 8 – கார்த்திகை 23 – ஞாயிற்றுக்கிழமை – வளர்பிறை அஷ்டமி, தேவமாதா கருவுற்ற நாள்
  • டிசம்பர் 9 – கார்த்திகை 24 – திங்கட்கிழமை – வளர்பிறை நவமி
  • டிசம்பர் 11 – கார்த்திகை 26 – புதன்கிழமை – பாரதியார் பிறந்த நாள், ஸர்வ ஏகாதசி
  • டிசம்பர் 12 – கார்த்திகை 27 – வியாழக்கிழமை – பரணி தீபம் ஏற்றும் நாள்
  • டிசம்பர் 13 – கார்த்திகை 28 – வெள்ளிக்கிழமை – திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம், பிரதோஷம்
  • டிசம்பர் 15 – கார்த்திகை 30 – ஞாயிற்றுக்கிழமை – பௌர்ணமி, பஞ்சாத்திர தீபம்

மார்கழி மாத விசேஷ நாட்கள் (டிசம்பர் 16 முதல் 31ஆம் தேதி வரை)

  • டிசம்பர் 16 – மார்கழி 1 – திங்கட்கிழமை – மார்கழி மாதப் பிறப்பு, பரசுராமர் ஜெயந்தி
  • டிசம்பர் 18 – மார்கழி 3 – புதன்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
  • டிசம்பர் 21 – மார்கழி 6 – சனிக்கிழமை – கரிநாள்
  • டிசம்பர் 23 – மார்கழி 8 – திங்கட்கிழமை – தேய்பிறை அஷ்டமி
  • டிசம்பர் 24 – மார்கழி 9 – செவ்வாய்க்கிழமை – தேய்பிறை நவமி, கரிநாள்
  • டிசம்பர் 25 – மார்கழி 10 – புதன்கிழமை – கிறிஸ்துமஸ் பண்டிகை
  • டிசம்பர் 26 – மார்கழி 11 – வியாழக்கிழமை – ஸர்வ ஏகாதசி, கரிநாள்
  • டிசம்பர் 28 – மார்கழி 13 – சனிக்கிழமை – பிரதோஷம்
  • டிசம்பர் 29 – மார்கழி 14 – ஞாயிற்றுக்கிழமை – மாத சிவராத்திரி
  • டிசம்பர் 30 – மார்கழி 15 – திங்கட்கிழமை – அனுமன் ஜெயந்தி, அமாவாசை
  • டிசம்பர் 31 – மார்கழி 16 – செவ்வாய்க்கிழமை – நியூ இயர் ஈவ்

Also Read: Astrology: மகர ராசியில் சுக்கிரன்.. இந்த 6 ராசிகளுக்கு யோகம் கொட்டும்!

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கார்த்திகை மாதத்தின் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படும் திருக்கார்த்திகை வரும் டிசம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. பொதுவாக மார்கழி மாதத்தில் எந்தவித விசேஷ காரியமும் செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏதேனும் நல்ல காரியம் செய்ய நினைத்தால் அதனை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் உங்களுடைய ஜாதக அடிப்படையில் ஆன நல்ல நாளை தேர்வு செய்து முடித்துக் கொள்ளலாம்.

மேலும் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் நடக்கும் பஜனை, விசேஷ நிகழ்வுகளில் கலந்துகொண்டு பெருமாளின் அருளை முழுவதுமாக பெறலாம். கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி வருகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்ட நிலையில் டிசம்பர் மாதம் முழுக்க தேவாலயங்கள், கிறிஸ்தவ மக்களின் இல்லங்களில் கிறிஸ்துமஸ் தொடர்பான  அலங்காரங்கள் செய்யப்பட்டு அழகுற காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்
பிங்க் பால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்..!