5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

November Month: கந்த சஷ்டி, கார்த்திகை மாத பிறப்பு.. நவம்பரின் முக்கிய விசேஷ தினங்கள்!

ஐப்பசி மாதம் சுபமுகூர்த்த தினம் நிறைந்த மாதமாகும். நவம்பர் 1 ஆம் தேதி அமாவாசை திதியுடன் தொடங்கும் மாதம் நவம்பர் 30ம் தேதி அதை அமாவாசை திதியில் தான் முடிவடைகிறது. நாம் இந்த நவம்பர் மாதத்தில் உள்ள அமாவாசை, கார்த்திகை விரதம், சுபமுகூர்த்த தினம், பிரதோஷம், வாஸ்து நாள், பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய தினங்கள் எந்த தேதி, கிழமையில் வருகிறது என பார்க்கலாம். 

November Month: கந்த சஷ்டி, கார்த்திகை மாத பிறப்பு.. நவம்பரின் முக்கிய விசேஷ தினங்கள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Oct 2024 15:45 PM

நவம்பர் மாதம்: 2024 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். ஆண்டின் 11 வது மாதமான நவம்பர் மாதம் என்பது ஆன்மீகத்தில் மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகிறது. ஐப்பசி மற்றும் கார்த்திகை ஆகிய தமிழ் மாதங்கள் கொண்ட நவம்பர் மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவார்கள். அதுமட்டுமல்லாமல் ஐப்பசி மாதம் சுபமுகூர்த்த தினம் நிறைந்த மாதமாகும். நவம்பர் 1 ஆம் தேதி அமாவாசை திதியுடன் தொடங்கும் மாதம் நவம்பர் 30ம் தேதி அதை அமாவாசை திதியில் தான் முடிவடைகிறது. நாம் இந்த நவம்பர் மாதத்தில் உள்ள அமாவாசை, கார்த்திகை விரதம், சுபமுகூர்த்த தினம், பிரதோஷம், வாஸ்து நாள், பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய தினங்கள் எந்த தேதி, கிழமையில் வருகிறது என பார்க்கலாம்.

நவம்பர் மாத விசேஷ தினங்கள்

  • நவம்பர் 1 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை – அமாவாசை
  • நவம்பர் 2 ஆம் தேதி – சனிக்கிழமை – கந்த சஷ்டி தொடக்கம்
  • நவம்பர் 3 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – சந்திர தரிசனம்
  • நவம்பர் 5 ஆம் தேதி – செவ்வாய் கிழமை – சங்கடஹர சதுர்த்தி / கரிநாள்
  • நவம்பர் 7 ஆம் தேதி – வியாழக்கிழமை – சஷ்டி சூரசம்ஹாரம் / சுபமுகூர்த்த தினம்
  • நவம்பர் 8 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை – சுபமுகூர்த்த தினம்
  • நவம்பர் 9 ஆம் தேதி – சனிக்கிழமை – அஷ்டமி
  • நவம்பர் 10 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – நவமி

Also Read: Train Service: சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை ரயில் சேவையில் மாற்றம்!

  • நவம்பர் 12 ஆம் தேதி – செவ்வாய்க்கிழமை – சர்வ ஏகாதசி
  • நவம்பர் 13 ஆம் தேதி – புதன்கிழமை – பிரதோஷம்
  • நவம்பர் 15 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை – பௌர்ணமி
  • நவம்பர் 16 ஆம் தேதி – சனிக்கிழமை – கார்த்திகை மாத பிறப்பு / ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் நாள்/ கரிநாள்/ கார்த்திகை விரதம்
  • நவம்பர் 17 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – சுபமுகூர்த்த தினம்
  • நவம்பர் 18 ஆம் தேதி – திங்கட்கிழமை – கரிநாள்
  • நவம்பர் 19 ஆம் தேதி – செவ்வாய்கிழமை – சங்கடஹர சதுர்த்தி / இந்திரா காந்தி பிறந்தநாள்
  • நவம்பர் 20 ஆம் தேதி – புதன் கிழமை – சுபமுகூர்த்த தினம்
  • நவம்பர் 21 ஆம் தேதி – வியாழக்கிழமை – சுபமுகூர்த்த தினம்

Also Read: Tamilnadu Weather Alert: தீபாவளில் நாளில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

  • நவம்பர் 23 ஆம் தேதி – சனிக்கிழமை – வாஸ்து நாள் / அஷ்டமி/ புட்டபுர்த்தி சாய்பாபா பிறந்தநாள்
  • நவம்பர் 24 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை – நவமி
  • நவம்பர் 25 ஆம் தேதி – திங்கட்கிழமை – கரிநாள்
  • நவம்பர் 26 ஆம் தேதி – செவ்வாய்கிழமை – சர்வ ஏகாதசி
  • நவம்பர் 27 ஆம் தேதி – புதன்கிழமை – சுபமுகூர்த்த தினம்
  • நவம்பர் 28 ஆம் தேதி – வியாழக்கிழமை – சுபமுகூர்த்த தினம்/ பிரதோஷம்
  • நவம்பர் 29 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை – சுபமுகூர்த்த தினம் / மாத சிவராத்திரி
  • நவம்பர் 30 ஆம் தேதி – சனிக்கிழமை – அமாவாசை

சஷ்டி விரதம் 

நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முருகப் பெருமானின் முக்கிய பண்டிகையான சஷ்டி திருவிழா தொடங்குகிறது . முருகன் சூரனை வதம் செய்த இந்நிகழ்வு அனைத்து முருகன் கோயில்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்வு மிகவும் பிரபலமானது. கடற்கரையில் நிகழும் இந்த சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் சஷ்டி வி,ழாவில் விரதம் இருந்தால் குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் திருமணம் ஆன பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் ஆகியோர் குழந்தை பேறு வேண்டி இந்த நாட்களில் விரதம் இருப்பார்கள்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம், குளிகை, கௌரி நல்ல நேரம், திசை சூலம் ஆகியவை பஞ்சாங்க கணிப்பின்படி நாள், கிழமை பார்த்து சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. அதேசமயம் நல்ல காரியங்கள் செய்வதற்கு முன் ஜோதிடர்களை கலந்தாலோசித்து உங்கள் ராசிக்கான, நாள் மாதமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.

Latest News