October Events: நவராத்திரி முதல் தீபாவளி வரை.. அக்டோபரின் முக்கிய விசேஷ தினங்கள்!

Festival Events: ஒரு ஆண்டின் கடைசி காலாண்டு மாதத்தின் முதல் மாதமாக வரும் அக்டோபரில் தான் புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரி, தீபாவளி பண்டிகை, காந்தி ஜெயந்தி, மஹாளய அமாவாசை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, அப்துல்கலாம் பிறந்தநாள், வள்ளலார் பிறந்தநாள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, ஐப்பசி மாத தொடக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளது.

October Events: நவராத்திரி முதல் தீபாவளி வரை.. அக்டோபரின் முக்கிய விசேஷ தினங்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

30 Sep 2024 14:15 PM

அக்டோபர் மாதம்: 2024 ஆம் ஆண்டின் 10வது மாதமாக அக்டோபர் மாதம் மிகுந்த விஷேச தினங்கள் நிறைந்ததாகும். ஒரு ஆண்டின் கடைசி காலாண்டு மாதத்தின் முதல் மாதமாக வரும் அக்டோபரில் தான் புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரி, தீபாவளி பண்டிகை, காந்தி ஜெயந்தி, மஹாளய அமாவாசை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, அப்துல்கலாம் பிறந்தநாள், வள்ளலார் பிறந்தநாள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, ஐப்பசி மாத தொடக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்கள் இந்த மாதத்தில் பல்வேறு ஆன்மிக தலங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் நடக்கவுள்ளது.  அப்படியாக அக்டோபர் மாதத்தில் இருக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள், அமாவாசை, பௌர்ணமி, சுபமுகூர்த்தம் ஆகிய பல நிகழ்வுகள் என்னென்ன என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இதையும் படிங்க:Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..

முக்கிய விஷேச தினங்கள்

  • அக்டோபர் 2 ஆம் தேதி (புதன் கிழமை) – மஹாளய அமாவாசை / காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 3 ஆம் தேதி (வியாழக்கிழமை) – நவராத்திரி ஆரம்பம்
  • அக்டோபர் 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – சந்திர தரிசனம்
  • அக்டோபர் 5 ஆம் தேதி ( சனிக்கிழமை) – வள்ளலார் பிறந்தநாள்
  • அக்டோபர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – சதுர்த்தி விரதம்
  • அக்டோபர் 8 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) – ஷஷ்டி விரதம்
  • அக்டோபர் 10 ஆம் தேதி ( வியாழக்கிழமை) – அஷ்டமி
  • அக்டோபர் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – மஹா நவமி/ சரஸ்வதி பூஜை
  • அக்டோபர் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) – விஜய தசமி/ திருவோண விரதம்
  • அக்டோபர் 13 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) – சர்வ ஏகாதசி
  • அக்டோபர் 15 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) – கரிநாள் / பிரதோஷம்
  • அக்டோபர் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) – பௌர்ணமி

இதையும் படிங்க: Housewarming: கிரகப்பிரவேஷம் செய்தால் கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டியவை!

  • அக்டோபர் 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – ஐப்பதி மாத தொடக்கம்
  • அக்டோபர் 19 ஆம் தேதி ( சனிக்கிழமை) – கார்த்திகை விரதம்
  • அக்டோபர் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) – சங்கடஹர சதுர்த்தி
  • அக்டோபர் 21 ஆம் தேதி (திங்கட் கிழமை) – சுபமுகூர்த்தம்
  • அக்டோபர் 22 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) – கரிநாள்
  • அக்டோபர் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) – அஷ்டமி
  • அக்டோபர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – நவமி
  • அக்டோபர் 28 ஆம் தேதி (திங்கட் கிழமை) – சர்வ ஏகாதசி / வாஸ்து நாள்
  • அக்டோபர் 29 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) – பிரதோஷம்
  • அக்டோபர் 30 ஆம் தேதி (புதன் கிழமை) – மாத சிவராத்திரி
  • அக்டோபர் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) – சுபமுகூர்த்தம்/ தீபாவளி பண்டிகை

நல்ல நேரம்

திங்கட்கிழமை: காலை : 6.15 மணி முதல் 7.15 மணி வரை
மாலை: 3.15 மணி முதல் 4.15 மணி வரை

செவ்வாய்கிழமை: காலை: 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை: 4.45 மணி முதல் 5.45 மணி வரை

புதன்கிழமை: காலை: 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை: 4.45 மணி முதல் 5.45 மணி வரை

வியாழக்கிழமை: காலை: 10.45 மணி முதல் 11.45 மணி வரை
மாலை: –

வெள்ளிக்கிழமை: காலை: 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை: 4.45 மணி முதல் 5.45 மணி வரை

சனிக்கிழமை: காலை: 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை: 4.45 மணி முதல் 5.45 மணி வரை

ஞாயிற்றுக்கிழமை: காலை: 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை: 3.15 மணி முதல் 4.15 மணி வரை

கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

  • நல்ல காரியம் செய்வதற்கு முன் நாள், நட்சத்திரம், கிழமை, திதி உள்ளிட்ட பல விஷயங்களை பார்த்து விட்டு செய்ய வேண்டும்.
  • மேலும் நல்ல நேரத்தில் ஆரம்பித்து முடிவதற்குள் எந்த காரியமும் செய்து முடிப்பது கடினமான செயல். எனவே நல்ல நேரம் என குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் குறைந்தப்பட்சம் தொடங்கவாவது செய்திருக்க வேண்டும்.
  • ஜோதிட ரீதியான கிரகப்பெயர்ச்சி உள்ளிட்ட மாற்றங்கள் நிகழும்போது அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிகார பூஜை, இறை வழிபாடு ஆகியவை மேற்கொள்வது சிறந்தது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!