5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது.. ஐதீக நம்பிக்கை சொல்வது இதுதான்!

Few things never do on a friday: வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக செய்யக்கூடாத விசயங்கள். எப்பொழுதும் போல் இல்லாமல் கோலத்தில் மஞ்சள் குங்குமம் வைப்பதில் தொடங்கி, பெண்கள் தலைகுளித்து விளக்கேற்றி வழிபடுதல் வரை வெள்ளிக்கிழமைக்கு என்று தனி சிறப்புகள் உண்டு. மகாலட்சுமிக்கு உகந்த நாளான இந்த நாளில் ஒவ்வொரு விசயங்களையும் கவனமாகவே செய்ய வேண்டும். இதில் சில விசயங்களை செய்யவே கூடாது. அப்படி மீறி செய்தால் மகாலட்சுமியின் அருளை நிச்சயம் நாம் பெற முடியாது.

வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது.. ஐதீக நம்பிக்கை சொல்வது இதுதான்!
மகாலட்சுமி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 17 May 2024 21:53 PM

எல்லா நாட்களை விடவும் வெள்ளிக்கிழமை மங்கலகரமான நாளாக பார்க்கப்படுகிறது. எப்பொழுதும் போல் இல்லாமல் கோலத்தில் மஞ்சள் குங்குமம் வைப்பதில் தொடங்கி, பெண்கள் தலைகுளித்து விளக்கேற்றி வழிபடுதல் வரை வெள்ளிக்கிழமைக்கு என்று தனி சிறப்புகள் உண்டு. மகாலட்சுமிக்கு உகந்த நாளான இந்த நாளில் ஒவ்வொரு விசயங்களையும் கவனமாகவே செய்ய வேண்டும். இதில் சில விசயங்களை செய்யவே கூடாது. அப்படி மீறி செய்தால் மகாலட்சுமியின் அருளை நிச்சயம் நாம் பெற முடியாது. பொதுவாக வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். செல்வம் செழித்தோங்கும், கடன் தொல்லைகள் அகலும், குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளோ, பிரச்சனைகளோ வரவே வராது. அப்படி மகாலட்சுமியின் அருளை பெற என்னனென்ன செய்யலாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இங்கு பார்ப்போம்.

செய்யக்கூடியவை:

வீட்டை சுத்தபத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து கோலமிட்டு, நிலைவாசலில் மஞ்சள் குங்குமம் வைக்கவேண்டும்.

செல்வ செழிப்பு மேம்பட மகாலட்சுமியை வெள்ளி தோறும் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபட வேண்டும்.

அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

மகாலட்சுமிக்கு வழிபாடு நடத்துகையில், அஸ்டோத்திரம் சொல்லி, செந்தாமரை மலர் கொண்டு வழிபடலாம். தனலாபம் பெருகும்.

இந்த நாளில் பசுவிற்கு மாலை நேரத்தில் உணவளித்தால் வீட்டின் செல்வம் பன்மடங்காகும்.

பெருமாள் கோவிலிலுள்ள பத்மாவதி தாயாருக்கு, பூஜைக்குத் தேவையான பாலை கொடுத்துவருவதன் மூலம் செல்வ செழிப்பை அதிகரிக்கலாம்.

மாலை கதவை திறந்துவைத்துவிட்டு சன்னல்களை அடைத்து சுத்தமான சாம்பிராணி புகையைக் காட்டினால், வீட்டில் எந்த துர் சக்திகளும் தங்காது.

Also read: உயர் இரத்த அழுத்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

குறிப்பாக அரசமர பிள்ளையாருக்கு 11 விளக்கேற்றி வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும்.

செல்வம் அதிகரிக்க வியாழக்கிழமை வடக்கு பார்த்து விளக்கேற்றிய குபேரருக்கு, வெள்ளிக்கிழமை தாமரை திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.

மகாலட்சுமி, சுக்கிரன், முருகன் என மூன்று தெய்வங்களின் அருளையும் ஒருசேர பெற வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்தால் போதும்.

பொதுவாக கல் உப்பு வாங்கினால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த கல் உப்பானது மகாலட்சுமிக்கு உகந்தது. இதை வெள்ளிக்கிழமைகளில் வாங்கி வீட்டில் வைக்கும்போது செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

செய்யக்கூடாதவை:

கண்ணாடி, குங்குமம் போன்ற பொருட்களை கவனமின்மையுடன் கையாளக்கூடாது.

இந்நாளில் தங்கம், பணம் போன்ற செல்வ சம்பந்தமான பொருட்களை கடனாகவோ, சும்மாவோ யாருக்கும் கொடுக்கக்கூடாது.

வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. அப்படி செய்வது வீட்டிலுள்ள மகாலட்சுமியை வெளயில் அனுப்புவதற்குச் சமம். எனவே முதல் நாளே சுத்தம் செய்யவேண்டும்.

தாலி, நகை போன்ற எந்த பொருளையும் பெண்கள் இந்நாளில் கழற்றி மாற்றக்கூடாது.

பெரும்பாலும் இந்நாளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, முகச்சவரம் செய்தல், முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்றவற்றை செய்யவே கூடாது.

முக்கியமா பூஜை சாமான்களை இந்நாளில் கழுவக்கூடாது. முதல்நாளே கழுவி வைத்துவிட வேண்டும்.

வெள்ளிக்கிழமையன்று கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும். வீட்டை இருட்டாக வைத்திருக்கக் கூடாது.

உப்பு, தயிர், ஊசி, பருப்பு போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் செய்வாள். எனவே அவற்றை கொடுக்கவோ வாங்கவோ கூடாது.

செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் விளக்குப் போடுவது நல்லது, ஆனால் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றாதீர்கள். இது குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அழுக்குத் துணிகளை சேர்த்துவைக்கக்கூடாது, கடன் அதிகரிக்கும். பழைய துணிகளை தைக்கவோ, பிரிக்கவோ கூடாது.

பகடைகளை உருட்டி விளையாடக் கூடாது.

(இந்தக் கட்டுரை ஆன்மீக மற்றும் ஐதீக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. TamilTV9 இதனை உறுதிப்படுத்தவில்லை)

Latest News