5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati: திருப்பதியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Rules for Pilgrimage: உலகின் புகழ்பெற்ற கோயிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் வேண்டுதலுக்காக பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள். அவ்வாறு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதால் சில முக்கிய விதிகளை திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே திருப்பதிக்கு நடந்து செல்லும் பக்தர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 28 Oct 2024 07:29 AM
அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி படிகளில் இருந்து திருமலைக்கு நடந்து செல்ல வேண்டுமானால், சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திருமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், நடந்து செல்லும் பக்தர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டதால் இந்த முடிவினை திருமலை தேவஸ்தானம் எடுத்துள்ளது.

1 / 5
ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமலை தேவஸ்தானம் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது.  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு மற்றும் மூட்டு நோய்கள் உள்ளவர்கள் திருமலைக்கு பாதயாத்திரையாக வருவது நல்லதல்ல. உடல் பருமனால் அவதிப்படும் பக்தர்களும், இதயம் தொடர்பான நோய் உள்ளவர்களும் திருமலை மலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல என்று திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

2 / 5
கடல் மட்டத்திலிருந்து திருமலை மலை உயரத்தில் இருப்பதால் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது.‌ இதனால் நடைபயிற்சி மிகவும் மன அழுத்தத்தை தருவதாகவும், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமாவை மோசமாக்குவதாகவும் தேவஸ்தானம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

3 / 5
அதற்கேற்றவாறு பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் தங்கள் அன்றாட மருந்துகளை எடுத்துச் செல்வதன் மூலம் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், அலிபிரி பாதையில் உள்ள 1500 படி, காளி கோபுரம் மற்றும் பாஷ்யகாரர்களில் மருத்துவ உதவியை நாடலாம் என்று திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்துகிறது.

4 / 5
மேலும் திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவ வசதியைப் பெறலாம் என்று பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர காலங்களில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி உள்ளதாக தெரிவித்துள்ளது. திருமலைக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

5 / 5
Latest Stories