5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Number Numerology: நீங்கள் இந்தத் தேதியில் பிறந்தவரா? காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

Birthday Predictions: இன்னும் சில நாட்களில் 2024 நிறைவடைய இருக்கிறது. இந்த ஆண்டுகளில் பலரும் சில இன்பத் துன்பங்களை அனுபவித்து இருப்பார்கள். அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டு சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமிக்க ஆண்டாக இருக்கப் போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக இருக்கும்.

Number Numerology: நீங்கள் இந்தத் தேதியில் பிறந்தவரா? காத்திருக்கும் அதிர்ஷ்டம்!
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 00:32 AM

2024 ஆம் ஆண்டு அடுத்த சில தினங்களில் நிறைவடைய இருக்கிறது. இன்னும் சில நாள்களில் 2025 ஆம் ஆண்டை நாம் அடைய இருக்கிறோம். 2025 ஆம் ஆண்டு சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறதாக என் கணிதத்தில் படி கணிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2025 ஆம் ஆண்டின் கூட்டுத் தொகை 9 ஆகும். இந்த ஒன்பதாம் எண்ணின் அதிபதி செவ்வாய். எனவே வர இருக்கும் 2025 ஆம் ஆண்டு செவ்வாய் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செவ்வாயின் ஆதிக்கத்தால் 2025 ஆம் ஆண்டில் சில தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை மிக அதிர்ஷ்டமாகவும் சிறப்பாகவும் அமைய இருக்கிறது. மேலும் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே உள்ளன. அதன்படி ஒருவரது பிறந்த நாள் இரண்டு இலக்கங்களாக வந்தால் அவற்றின் கூட்டுத் தொகையை கொண்டு கணக்கிட வேண்டும். அதன்படி 2025 ஆம் ஆண்டு எந்தெந்த தேதியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தால் அதிர்ஷ்டம் பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எண் 4:

ஒரு மாதத்தில் 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை நான்கு. எனவே இந்த 4 என்பது இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரியது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டு மங்களகரமானதாக இருக்கும். எண் 4ன் அதிபதி ராகு. ராகுவால் இந்த தேதியில் பிறந்தவர்கள் சில சிக்கலை சந்தித்து அவதிப்பட்டு இருப்பார்கள். ஆனால் வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

Also Read: முருகனின் அறுபடை வீட்டிற்கு இலவசமாக செல்லலாம்.. விண்ணப்பிப்பது எப்படி?

தொழில் செய்து வருபவர்களுக்கு இரு மடங்காக லாபம் உயரும். மேலும் நினைத்ததெல்லாம் நடக்கும். கண்ட கனவெல்லாம் நனவாகும். உங்கள் வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதோடு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை நல்ல விதமாக செலவு செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் உறவு மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.

எண் 6:

ஒவ்வொரு மாதத்தின் 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை ஆறு ஆகும். எனவே ஆறு என்பது இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரியதாகும். வர இருக்கும் 2025 இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் ஈர்க்கும் சக்தியை கொண்டு இருப்பதால் இந்த ஆண்டு இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகப்பெரிய சாதனைகளை புரிய வாய்ப்பிருக்கிறது. வசதிகள் அதிகரிப்பதோடு புதிய வீடு, புதிய வாகனம் ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சில பிரச்சினைகள் உறவுகளில் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் சரியாகிவிடும்.

எண் 8:

ஒரு மாதத்தின் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டுத்தொகை 8 ஆகும். எனவே இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு 8 உரியதாகும்.‌ இந்த எண்ணிற்கான அதிபதி சனி ஆவார். எனவே இதுவரை சனியின் தாக்கத்தால் முழுமை அடையாத காரியங்கள் இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறும். எனினும் அந்த காரியங்கள் வெற்றி பெற கொஞ்சம் கடின உழைப்பும் தேவைப்படும். நிதி நிலைகள் வழக்கத்தை விட சிறப்பாக அமையும். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பொறுமை அவசியம் தேவை. பொறுமையாக இருந்தால் நிச்சயமாக பல வெற்றிகள் கிடைக்கும்.

எண் 9:

ஒரு மாதத்தில் 9,18,27 ஆகிய தேதிகளின் கூட்டுத்தொகை 9 ஆகும். எனவே இந்த தேதிகளின் பிறந்தவர்களுக்கு 9 உரித்தானதாகும். இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிக அற்புதமான ஆண்டாக இருக்கும். செவ்வாய் தைரியம் மற்றும் வீரத்தை கொடுக்கக் கூடியவர்.

Also Read: இராமேஸ்வரம் டூ காசி… இலவச ஆன்மீகப் பயணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

எனவே இதுவரை பூர்த்தி அடையாத வேலைகள் நிலுவையில் இருந்தால் இந்த ஆண்டு தைரியத்துடன் அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு செய்யும் வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிதிநிலை நல்ல நிலையில் இருப்பதோடு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News