Karthigai Viratham: பலன்களை அள்ளித்தரும் ஐப்பசி கார்த்திகை விரதம் மேற்கொள்வது எப்படி? - Tamil News | Highlights and procedures of Aippasi month Karthigai Viratham for Lord Murugan. | TV9 Tamil

Karthigai Viratham: பலன்களை அள்ளித்தரும் ஐப்பசி கார்த்திகை விரதம் மேற்கொள்வது எப்படி?

வாரத்தின் 7 நாட்கள் தொடங்கி ஒவ்வொரு தமிழ் மாதமும், நட்சத்திரங்களும் ஒவ்வொரு கடவுளுக்குரியதாக பார்க்கப்படுகிறது. இப்படியான தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்தது.  இந்த முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு பல விரத முறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Karthigai Viratham: பலன்களை அள்ளித்தரும் ஐப்பசி கார்த்திகை விரதம் மேற்கொள்வது எப்படி?

கோப்பு புகைப்படம்

Published: 

18 Oct 2024 14:15 PM

கார்த்திகை விரதம்: இந்து சமயத்தைப் பொறுத்தவரை ஏராளமான கடவுள்களும், அவர்களுக்கென தனித்தனியான வழிபாட்டு முறைகளும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான விஷேச தினங்களும் கடைபிடிக்கப்படுகிறது. வாரத்தின் 7 நாட்கள் தொடங்கி ஒவ்வொரு தமிழ் மாதமும், நட்சத்திரங்களும் ஒவ்வொரு கடவுளுக்குரியதாக பார்க்கப்படுகிறது. இப்படியான தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்தது.  இந்த முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு பல விரத முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றின் ஒன்றுதான் கார்த்திகை விரதம். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த விரதத்தை நாம் மேற்கொள்ளலாம். குறிப்பாக கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று விரதம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டால் முருகனின் அருள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லது உங்களுடைய குடும்பத்தினருக்கும் எதிர்கால தலைமுறைக்கும் பரிபூரணமாக கிடைக்கும் என்பதை ஐதீகமாகும்.

Also Read:  Diwali 2024: தீபாவளி நாளில் அசைவம் சாப்பிடலாமா? – சாஸ்திரம் சொல்வது என்ன?

எந்த தமிழ் மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் குறிப்பிட்ட நாளில் மாலை 5 மணிக்கு மேல் இருந்தால் மட்டுமே அன்றைய நாள் கார்த்திகை நட்சத்திர நாளாக கருதப்படும். சில நேரங்களில் நட்சத்திரங்கள் அன்று காலையில் நிறைவடையும் அல்லது மதியம், மாலை 4 மணிக்கு முன்னதாக நிறைவடையும். அப்படி இருக்கும் பட்சத்தில் முந்தைய நாளை கார்த்திகை விரதத்திற்குரிய நாளாக நாம் கருத வேண்டும். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் கார்த்திகை விரதம் நாளை (அக்டோபர் 19) மேற்கொள்ளப்படுகிறது.

அக்டோபர் 20ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரம் வரும் நிலையில் அன்றைய நாளில் மதியம் 1.23 மணிக்கு நட்சத்திர திதி முடிவடைகிறது. இதனால் அக்டோபர் 19 ஆம் தேதியை கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் கடைபிடிக்கலாம். அதன்படி கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருக்கும் பக்தர்கள் முந்தைய நாளான நாளை பரணி நட்சத்திர தினத்தில் மதியம் வரை உணவு உட்கொள்ளலாம். பின்னர் மாலையில்  தொடங்கி மறுநாள் காலை வரை எந்தவித உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் அக்டோபர் 20 ஆம் தேதி காலையில் எழுந்து புனித நீராடி அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

Also Read: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!

முடியாதவர்கள் வீட்டில் முருகன் படம் அல்லது சிலைகளை வைத்து வழிபாடு மேற்கொள்ளலாம். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் விரதத்தின்போது பால், பழம் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்நாளில் முருகனின் அறுபடை கோயிலுக்கு சென்றும் வழிபடலாம். வீட்டில் வழிபடுபவர்கள் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகனின் துதி பாடல்களை பாடி பாராயணம் செய்யலாம். மேலும் கோயில் அல்லது வீட்டில் உள்ள முருகன் செவ்வரளி மாலை சாற்றி வழிபட வேண்டும். அதே சமயம் சர்க்கரை பொங்கல், கலவை சாதம், பஞ்சாமிர்தம், பழங்கள் ஏன்னா ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து வணங்கி விட்டு அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை ஆகும். கார்த்திகை நட்சத்திர தினத்தன்று அன்று மாலை பால், பழம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

Also Read: Padaikatti Maha Mariamman: பாடை கட்டி ஊர்வலம்.. தீரா நோய்களை தீர்க்கும் மகாமாரியம்மன்!

ஐப்பசி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று விரதம் இருப்பவர்கள் அன்னதானம் செய்தால் பலன் மிகுந்த புண்ணியங்களை பெறலாம் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் கார்த்திகை நட்சத்திர விரதம் மேற்கொள்பவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளில் இருந்து பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலம் , குழந்தைப்பேறு,  செழிப்பான பொருளாதார நிலை ஆகியவை முருகன் அருளால் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் மேற்கொள்பவர்களுக்கு தங்களுடைய மரணம் குறித்த பயங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முக்தி நிலை கிடைக்கும் பலனை பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?