வாராகி அம்மன் வழிபாடு.. தஞ்சை பெருவுடையார் கோயில் கட்ட இடம் காட்டிய கடவுள்!
Varahi Amman History: சமீப காலமாக வாராகி அம்மன் வழிபாடு பற்றி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பெண் தெய்வ வழிபாடு என்பது பழங்காலம் தொட்டு அதன் நாட்டில் பரவலாக இருந்து வருகிறது. இப்பொழுது பலரும் விரும்பி வழிபடும் தெய்வமாக வாராஹி அம்மன் திகழ்கிறார். இந்த வாராஹி அம்மன் வழிபாடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்
பெண் தெய்வ வழிபாடு என்பது பழங்காலம் தொட்டு நமது நாட்டில் பரவலாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சக்தி வழிபாடு பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகின்ற ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகும். தற்காலத்தில் பலரும் விரும்பி வழிபடும் தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். இந்து மத புராணங்களின்படி வாராகி அம்மன் என்பவர் அன்னை துர்க்கை தேவியின் ஒரு அம்சம் ஆவார். ஒரு சமயம் ரத்த பீஜம் என்கின்ற அரக்கனுடன் மகா துர்கா தேவி போரிட்ட பொழுது தன்னிடம் உள்ள மகா சக்தியை ஏழு பாகங்களாக பிரித்து ஏழு சப்த கன்னியர்களாக தோற்றுவித்து அவர்களை ரத்த பீஜடன் போர் செய்ய அனுப்பியதாக புராணங்கள் கூறுகின்றது.
அதேபோல திருமால் வராக அவதாரம் எடுத்த பொழுது அவரின் துணை அவதார சக்தியாக லட்சுமி தாயார் எடுத்த வடிவம் தான் வராகி அம்மன் வடிவம் எனவும் கூறப்படுகின்றது.
யார் இந்த வாராகி அம்மன்?
வாராகி அம்மன் காட்டுப் பன்றியின் தலையையும் மனிதப் பெண் உடலையும் கொண்ட வடிவமான பெண் தெய்வம் இந்த வாராகி அம்மன் என்பவர் கருப்பு நிற ஆடை அணிந்து நீலம் நிற மேனியில் மூன்று கண்களுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுப்பவள். இவருக்கு எட்டு திருக்கரங்கள் உண்டு. அவற்றில் ஒரு கரத்தில் ஏர் கலப்பை, ஒரு கையில் சூலம், மற்றொரு கையில் சக்கரம், ஒரு கையில் கடாயுதம், மற்றொரு கையில் சங்கு, ஒரு கையில் அங்குசம், மற்ற இரு கரங்களில் அபயம் மற்றும் வரத முத்திரைகளுடன் திகழ்கிறார். இந்த அம்மனுடைய வழிபாடு மிகப் பழங்காலம் தொட்டு பாரத நாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
தஞ்சை பெருவுடையார் கோயில் கட்ட இடம் காட்டிய வாராகி அம்மன்:
தமிழ்நாட்டை ஆண்ட சோழ அரச பரம்பரையின் வெற்றி தெய்வமாக வாராகி அம்மனை வழிபடப்பட்டுள்ளார். ராஜராஜ சோழன் தான் கட்ட விரும்பிய பெருவுடையார் கோவிலுக்கான தகுந்த இடத்தை வாராகி அம்மனே காட்டுப் பன்றி வடிவத்தில் வந்து காட்டியதாகவும் அதன்படியே அந்த இடத்தில் ராஜராஜ சோழன் பெருவுடையார் கோவிலை கட்டியதாகவும் அதற்கு காரணமாக இருந்த வாராஹி அம்மனுக்கு கோவிலில் ஒரு பக்கத்தில் ராஜ ராஜ சோழன் தனி சன்னதி அமைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வாராகி அம்மனின் பெருமைகள்:
வாராகி என்றாலே வரம் என்று பொருள் இனிமேல் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை இதோடு நம் வாழ்க்கை முடிந்தது என்ற ஒரு சூழ்நிலை கட்டாயமாக மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வரும். பிரச்சனைக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். அந்த சூழ்நிலையில் நம்பிக்கையோடு வாராகி அம்மன் வழிபாடு நமக்கு கை கொடுக்கும. அன்னை நம்மை கை கொடுத்து தூக்கி விடுவார்.
ராஜராஜேஸ்வரி அம்பிகையின் படைத்தலைவி. சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். சப்த கன்னிகளில் அதிக வீரியமும் சக்தி வாய்ந்த ஐந்தாம் தேவதை. இவர் தீயவற்றை அழித்து தர்மத்தை நிலை நிறுத்தும் செயல்கள் செய்பவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அம்பாள் அருள்வார். அபய நாயகி என்று தான் வாராகியை கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
கவலை, துக்கம், பயம், குழப்பம், எதிர்ப்பு, பகை என்று கலங்கி கொண்டு இருப்பவர்களின் கண்ணீரை துடைப்பவள் வாராகி. நல்ல எண்ணம் உடையவர்களை தீயவர்களிடமிருந்து காக்க கோபத்தின் உச்சம் தொடுபவர் வராகி அம்மன். ஆனால் நம்பியவர்களுக்கு அன்பிலும் ஆதரவிலும் அன்னைக்கு நிகரானவர்.
Also Read: 6 ராசிகளுக்கு செம அதிர்ஷ்டம்.. சுப காரியங்களுக்கு கைகொடுக்கும் சுக்கிரன்!
வாராகி அம்மன் மொத்தம் 64 வடிவங்கள் எடுத்துள்ளார். அந்த வடிவங்களில் எட்டுவாராகி தேவிகள் மட்டுமே இன்று அறியப்படுகிறார்கள். அவர்கள் மகா வாராகி, ஆதி வாராகி, ஸ்வப்ன வாராகி, இலகு வாராகி, உன்மத்த வாராகி, சிம்ஹாருட வாராகி, மகிஷாருடா வாராகி, அஷ்ட வாராகி, அஸ்வருட வாராஹி என்று அழைக்கப்படுகிறார்கள்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. )