5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரம் வந்தது எப்படி தெரியுமா?

History of Christmas Tree: கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிக முக்கியமானதாக கிறிஸ்துமஸ் மரம் கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி சேர்க்கப்பட்டது தெரியுமா?

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரம் வந்தது எப்படி தெரியுமா?
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 21 Nov 2024 09:14 AM

கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்ற பெருமையை ஜெர்மனி நாடு பெறுகிறது. கிபி 10 நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த போனிப்பேஸ் என்கிற பாதிரியார் ஒருவர் ஒரு ஜெபக் கூட்டத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் ஓக்கு மரத்தை வழிபட்டுக் கொண்டிருப்பதை கண்டார். இயேசுவை நம்பிய போதும், மக்கள் இப்படி ஓக் மரத்தை வழிபடுவதை கண்டு கோபம் கொண்ட பாதிரியார், அதை வேரோடு பிடுங்கி எறிந்து விடுகிறார். வேரோடு பிடுங்கி எறிந்த பிறகும் சில நாட்களிலேயே அதே இடத்தில் ஓர் மரக்கன்று முளைக்கத் தொடங்கிவிட்டது.

மீண்டும் மரம் முளைக்கத் தொடங்கியதால் அதை வைத்து வேறு முறையில் மக்களுக்கு போதிக்க நினைத்தார். அந்த மரம் மறுபடியும் முளைத்த செயலை இயேசுவின் உயிர்த்தெழுதலோடு தொடர்பு படுத்தி தன்னுடைய கிறிஸ்தவ போதனையை மும்முரப்படுத்தினார் இந்த பாதிரியார்.

கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்திய ஜெர்மனியர்:

ஆனாலும் அந்த மரம் அப்போதெல்லாம் அலங்கார பொருளாகவோ கிறிஸ்துவின் பிறப்பு கொண்டாட்டங்களிலோ பயன்படுத்தப்படவில்லை. காலங்கள் சென்ற பின்பு ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்துமஸ் மரம் என்று சொல்லி தங்கள் வீட்டுக்குள் இதை வைத்தனர். 12ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டது. இதன்பிறகு கிறிஸ்து பிறந்தநாளின் போது இந்த கிறிஸ்துமஸ் மரம் இடம்பெற துவங்கியது. அங்கிருந்து உலக நாடுகள் முழுவதும் இந்த கிறிஸ்துமஸ் மர கலாச்சாரம் பரவியதாக கூறப்படுகின்றது.

Also Read: Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படும் காரணம் தெரியுமா?

சுமார் கிபி 1500 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் ஒரு கிறிஸ்துமஸ் கால பனி நாளில் பனி படர்ந்த சாலை வழியாக நடந்து செல்லும்‌‌போது சிறு சிறு ஃபிர்‌வகை பச்சை மரங்களை மீது படர்ந்து இருந்த பணி வெளிச்சத்தில் பிரம்மிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்ந்து மின்னியதை கண்டார். இதன் அழகால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் உடனே அந்த ஃபிர் மரத்தை எடுத்து கிறிஸ்துமஸ் நாளில் மரத்தின் நுனியை வெட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரித்து அதை கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார்.இந்த சமயத்தில் தான் கிறிஸ்துமஸ் மரம் அலங்காரங்களுடன் கிறிஸ்துமஸ் விழாக்களில் நுழைந்தது.

இளவரசிகளால் பரவிய கிறிஸ்துமஸ் மரம்:

1521 ஆம் ஆண்டு பிரான்ஸ் இளவரசி ஹெலனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை ஜெர்மனியில் இருந்து பாரிஸிற்கு கொண்டுவந்து ஒரு விழா கொண்டாடினார். இளவரசி விழா கொண்டாடிய பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததாக அந்நாட்டு வரலாறு கூறுகின்றது. 18 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா,ஜெர்மனி போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்காரம் செய்யப்படும் பழக்கம் அதிகமாக பரவியது.

இங்கிலாந்து இளவரசி விக்டோரியா ஜெர்மன் நாட்டு இளவரசர் ஆல்பர்டை காதல் திருமணம் செய்து கொண்டார். 1841 இல் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்யப்பட்ட மிகப் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரத்தை இங்கிலாந்து வின்ஸ்டார் அரண்மனை மாளிகையில் வைத்தார்.

இதன் பின்பு‌ கிறிஸ்துமஸ் மரத்தின் கலாச்சாரம் இங்கிலாந்து நாட்டில் தீவிரமாக பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 1841 ஆண்டு நிகழ்விற்கு பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் இந்த கிறிஸ்துமஸ் மரமும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது. தற்போது கிறிஸ்துமஸ் என்றாலே இந்த கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல் பூர்த்தி அடையாது.

இந்த கிறிஸ்துமஸ் மரம் ஒவ்வொரு நாடுகளிலும் வேறுபடுகின்றது. அந்தந்த நாடுகளில் முக்கோண வடிவில் வளரக்கூடிய மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Also Read: Christmas: கிறிஸ்துமஸ் பண்டிகை.. முதன்முதலில் குடில் வைத்தவர் யார் தெரியுமா?

ஒவ்வொரு நாடுகளிலும் வேறுபடும் கிறிஸ்துமஸ் மரம்:

ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் மரம் என்பது ஃபிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்தப்படுகின்றது. இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் மரம் என்பது நார்வே ஸ்ப்ரூஸ் என்கிற மர வகைகள் இந்த வகை மரங்கள். இங்கிலாந்து தேசத்தில் கிறிஸ்துமஸ் மரங்களாக பயன்படுத்தப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் நியூட்சியா என்கிற மஞ்சள் நிற இலைகள் கொண்ட மரம்.

கிறிஸ்துமஸ் மரமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்த வகை மரங்களை பயன்படுத்தப்படுகின்றது.இந்திய கிறிஸ்துமஸ் மரமாக அரௌகாரியா கோலமேரிஸ் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வகை மரங்கள் சற்று விலை மதிப்பு அதிகம்.‌இந்த மரம் கிடைக்காதவர்கள் கேசுவரினா மரம்‌ எனப்படும் சவுக்கு மரத்தை கிறிஸ்துமஸ் மரமாக இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றன.

உலக அளவில் 16 வகையான கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளன. இவற்றில் அதிகமாக ஃபிர் வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

Latest News