வைகுண்ட ஏகாதசியின் வரலாறு மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?
History of Vaikunda Ekadasi: ஆண்டுதோறும் மார்கழி மாதம் 26ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் இராப்பகல் இராபத்து என்று பத்து பத்து நாட்கள் 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்படும். இது பத்தாவது நாள் மிக சிறப்பாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை திருமங்கை ஆழ்வார் திருச்சியில் எழுந்தருளி இருக்கும் பெருமானிடம் கார்த்திகை திருநாள் அன்று மனம் உருகி கண்ணீர் மல்கி வேண்டினார். திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களுக்கு மனமிரங்கி பெருமாள் அவருக்கு காட்சி கொடுத்தார். இத்தனை தூரம் என் மீது அளவு கடந்த அன்பு வைத்து என்னிடம் மன்றாடி வேண்டி உள்ளாய். உனக்கு வரம் தருவதற்கு நான் காட்சி தந்துள்ளேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமங்கை ஆழ்வாரிடம் பெருமாள் கேட்டார்.
இதனைக் கேட்ட ஆழ்வார் தனக்காக எதுவும் கேட்காமல் நம்மாழ்வார் பாடிய ஆயிரம் பாசுரங்களை நீ அனுதினமும் கேட்க வேண்டும் என்று பெருமாளிடம் கோரிக்கை வைத்தார் திருமங்கை ஆழ்வார்.
அதனை ஏற்ற பெருமாள் நான் எந்த நாட்களில் பாசுரங்களை கேட்க வேண்டும் என்று நீயே முடிவு செய் என்று திருமங்கை ஆழ்வாரிடம் கூறுகிறார். இதனைக் கேட்ட திருமங்கை ஆழ்வார் மார்கழி மாதத்தில் ஏகாதசி நாளிலிருந்து பத்து நாட்கள் நூறு நூறு பாடல்களாக 10 நாட்களுக்கு ஆயிரம் பாடல்களையும் பாடி உனக்கு செவியுற செய்கிறோம். இதனால் பாசுரம் படிப்பவர்களுக்கும் கஷ்டம் இருக்காது என்று முடிவெடுத்தார். இதற்கு இராபத்து என்று பெயரிடப்பட்டது.
Also Read: பூஜை அறையில் வைக்கக் கூடாத கடவுள் படங்கள்!
பகல்பத்து:
அதனைத் தொடர்ந்து இராபத்து நிகழ்வு நடைபெற்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நாதமுனிகள் பெருமாளிடம் அதே கார்த்திகை தினத்தன்று மீண்டும் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நீ ஆயிரம் பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறாய். மீதி இருக்கும் பாடல்களையும் நீ கேட்டு மகிழ வேண்டும் என்று விண்ணப்பத்தை பெருமாளிடம் நாதமுனிகள் வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட பெருமாள் நீயே எந்த நாளில் மீதம் இருக்கும் பாடல்களை பாட வேண்டும் என்று முடிவு செய் என கூறிவிடுகிறார்.
ஏற்கனவே ஏகாதசி நாளிலிருந்து பத்து நாட்கள் இராபத்து என்ற பெயரில் பாசுரங்கள் படித்து வந்த வேலையில் ஏகாதசிக்கு முன்னர் இருக்கக்கூடிய 10 நாட்களை தேர்ந்தெடுத்தார். அந்த பத்து நாட்களுக்கு பகல்பத்து என்று பெயரிடுகிறார். இப்படியாக தான் இராபத்தும் பகல் பத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பக்தனின் அன்புக்காக இறங்கி வந்த பெருமாள்:
பராசரப்பட்டர் என்ற பக்தர் பெருமாள் மீது கொண்ட பயத்தினால் பெருமாளின் பக்கமே செல்லாமல் இருந்தார். எப்பொழுதும் தாயாரின் சன்னதியிலேயே சேவை செய்து கொண்டிருந்தார். சாமி எந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் எந்த நேரத்தில் கோபமாக இருப்பார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. எனவே கோவமான நேரத்தில் தான் சென்று விட்டால் அவர் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற அச்சத்தில் தான் பராசரப்பட்டர் பெருமாளின் பக்கம் செல்லாமல் இருந்தார்.
பாராசரனின் தொண்டை அனுபவிக்க நினைத்த பெருமாள் தாயாரின் ரூபத்தில் செல்கிறார். ஒரு பக்தனின் அன்பை பெறவேண்டும் என்பதற்காக எம்பெருமான் இறங்கி வருகிறார். தாயாரின் ரூபத்தில் இருக்கும் பெருமானின் அழகிய அழகிய அலங்காரத்தை கண்டு மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தால் பாராசரப்பட்டர். அந்த வேளையில் அழகை ரசித்துக்கொண்டு வரும் வேளையில் கண்ணை பார்த்து இது தாயாரின் கண்ணில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.
பின் தாயாரின் கோலத்தில் பெருமாள் இருப்பதை உணர்ந்து பெருமாளின் திருவடிகளை பிடித்து அழ தொடங்கினார். அப்பொழுது காட்சி கொடுத்த பெருமாள் உன்னுடைய சேவையை பெற வேண்டிய நான் அம்பாளின் ரூபத்தில் வந்தேன் என்பதை தெரிவித்தார். இந்த நிகழ்வு ஏகாதசி வைகுண்ட தினத்தில் மிக விமர்சனையாக கொண்டாடப்படுகிறது.
Also Read: வீடு செழிக்க தினமும் செய்ய வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!
வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு:
ஆழ்வார்களின் பாசுரங்களில் சொல்லப்பட்டது போல மனதில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கி, யாருக்கும் துன்பம் செய்யாமல், யார் மனதையும் புண்படுத்தாமல், யாருக்கும் தீங்கு நினைக்காமல், மற்றவன் அழிய வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்த ஆன்மாவானது வைகுண்ட வாசல் திறக்கும் பொழுது உள்ளே செல்லும்போது நேரடியாக சொர்க்கம் செல்லலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)