Saraswathy Pooja: சரஸ்வதி பூஜையின் நோக்கமும் வழிபாட்டு முறையும்..!
Saraswathy Pooja: தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை கொண்டாடுவது மட்டுமல்லாமல், ஆயுதங்களை வழிபாடு செய்யும் பண்டிகையாக சரஸ்வதி/ ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் கொண்டாட்டத்தின் 9வது நாளில் வரும் இந்த பண்டிகை ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. கலை, ஞானம் மற்றும் இலக்கியத்தின் தெய்வமான சரஸ்வதி இந்த நாளில் வணங்கப்படுகிறார். இன்று பல்வேறு நபர்களால் பயன்படுத்தப்படும் கருவிகளின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது.
பொதுவாக அரக்கர்களை அழிக்கின்ற போது எதற்கு வாணிக்கு (சரஸ்வதி) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நவராத்திரியில் இறுதியாக வாணியை நாம் ஆராதிப்பதற்கான காரணம் அரக்கனை நாயகிகள் ஊசி முனையில் தவம் இருந்து வதைத்தனர் என்ற பொதுவான கருத்தை நாம் அறிந்ததே. ஆனால் வாணி இறுதியாக தவம் மேற்கொள்வதற்கான காரணம் போர்க்களத்தில் சக்தி தேவை. அந்த சக்தியோடு சேர்ந்து புத்தியும் தேவை. அதுபோன்றே சரஸ்வதி பூஜை அன்று எவ்வாறு நம் வீட்டில் வழிபடுவது போன்றவற்றை நம் முன்னோர்கள் நமக்கு அழகாக சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஏன் கொண்டாடப்படுகிறது?
மகாபாரதத்தில் நாடு இழந்து, வீடு இழந்து, மக்கள் இழந்து, பெற்ற செல்வங்கள் அனைத்தையுமே இழந்து நிர்கதி அற்றவர்களாய் இருந்த பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் தங்களுடைய அஞ்ஞான வாசம், தவ வாசம், வனவாசம் போன்ற எல்லா வாசங்களையும் இருந்துவிட்டு இறுதியாக அவர்கள் தங்களுடைய நாட்டிற்கு செல்கின்றனர் என்ற செய்தியை நாம் அறிவோம். ஆனால் இவர்கள் இருந்த அத்தனை தவ வாழ்க்கை வாழ்ந்த போதிலும் வன்னி மரத்தில் மனித பிணங்கள் போல கட்டி தொங்கவிட்டு சென்றனர்.
அதற்கு காரணம் அந்த ஆயுதங்களை அவ்வழியே வரும் வழிப்போக்கர்களும் கள்வர்களும் இது ஒரு பேய் என்று நினைத்து கொள்ளும்படி அந்த ஆயுதங்களை எடுக்காத படி கட்டி விட்டு சென்றனர். அதேப் போல் இதை பார்த்த காட்டுவாசிகளும் அந்த வழியாக சென்றவர்களும் ஏதோ பேய் தொங்குகின்றது என்று நினைத்தார்கள்.
Also Read: Spiritual: வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும்? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கடைசியாக தங்களுடைய அஞ்ஞான வாசத்தை முடித்துக் கொண்ட பஞ்சபாண்டவர்கள் அந்த ஆயுதங்களை எல்லாம் கழட்டி அதற்கு பொட்டிட்டு பூஜை செய்த நாளையே நாம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று வழிபாடு செய்கின்றோம். அப்படி இருக்க நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அத்தனை பாட புத்தகங்களையும் வேத மந்திர நூல்களையும் நம் வாழ்க்கைக்கு உதவக்கூடிய இந்திர அஸ்திர புத்தகங்களையும் வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய இயந்திரப் பொருட்களையும் உழவுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களையும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை செய்யக்கூடிய வாகனங்களையும் நன்கு கழுவி அவற்றிற்கு பொட்டிட்டு அவற்றையும் நம்முடைய தெய்வமாக வழிபடுகின்ற முறையை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ளலாம்.
உழவுக்கு பயன்படும் மாட்டிற்கும் வயலுக்கும் எப்படி மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறதோ அப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு துணையாக இருக்கின்றவற்றிற்கு நாம் மரியாதை செய்யும் நிமத்தமாக இந்த சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
வழிபடும் நேரம் மற்றும் நெய்வேத்தியம்:
சரஸ்வதி பூஜை அன்று அம்பிகைக்கு பெண் பட்டு சாத்தப்பட்டு வெண்பூக்கள் நெய்து அந்த பூக்களை மாலையாக ஆராதனை செய்து அம்பிகைக்கு நாம் வழிபாடு செய்து வந்தால் அம்பிகை மனம் குளிர்ந்து பக்தர்களின் மனங்களையும் வெள்ளையாக்கி அவர்களின் வாழ்க்கையை வண்ணமாக ஆக்குவாள் என்பது அம்பிகையின் அருளாக இருந்து வருகிறது.
சரஸ்வதி பூஜை கொண்டாட உகந்த நேரம் மாலை பொழுது பொதுவாக அம்பிகை காலையில் துயில் எழுந்து இரவில் பள்ளி கொள்வாள் என்பது நாம் அறிந்ததே ஆனால் இந்த நவராத்திரிகளில் காலையிலிருந்து மாலை வரை அம்பிகை தவமிருந்து மாலை கண் விழித்து பக்தர்களின் உடைய அமுது பிரசாதங்களை அன்போடு ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் தவத்திற்கு செல்கின்றாள். எனவே அம்பிகைக்கு பூஜை செய்வதற்கான ஏற்ற நேரம் மாலை பொழுது.
அம்பிகைக்கு பிரத்தியேகமான நெய்வேத்தியங்களாக புளிப்பு நிறைந்த பிரசாதங்களை நாம் வைக்கலாம் எடுத்துக்காட்டாக புளி சாதம் எலுமிச்சை பழ சாதம் போன்றவற்றையும் பால் பொருட்களாக இருக்கக்கூடிய பாயாசம் பால் பொங்கல் போன்றவற்றை அம்பிகைக்கு நெய்வேத்தியங்களாக வைக்கலாம். மேலும் அதிக இனிப்பு நிறைந்தவற்றை அம்பிகை அன்னை வாணிதேவி மிகவும் அன்போடு ஏற்றுக் கொள்வாள்.
அவளுக்கு அக்காறு அடிசல் என்று சொல்லப்படுகின்ற சர்க்கரை பொங்கலின் அதிக ருசி கொண்ட உணவு பதார்த்தத்தையும் நாம் வைத்து அம்பிகையை வழிபடுகின்ற போது அம்பிகை மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார் என்பது ஐதீகம். எதுவுமே இல்லையென்றால் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய உலர் திராட்சை பழங்களை கூட அம்பிகைக்கு தானமாக வைத்து அவளின் மனம் குளிரலாம் என்பது அம்பிகையின் உடைய அன்பு அருளில் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
Also Read: புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு செய்வது எப்படி? முழு விவரங்கள்!