5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sabarimala: சபரிமலை மண்டல மகர விளக்கு பூஜை.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

மண்டல, மகர விளக்கு காலத்தில் சரியாக 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அதன்படி நடப்பாண்டு நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. கார்த்திகை 1 ஆம் தேதியான நவம்பர் 16 முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை இருக்கும். சரியாக 41 நாட்கள் கணக்கிடப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல விளக்கு பூஜை நடைபெற்று நடை அடைக்கப்படும்.

Sabarimala: சபரிமலை மண்டல மகர விளக்கு பூஜை.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 24 Oct 2024 11:54 AM

சபரிமலை: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவானது தொடங்கியுள்ளது. கேரள மாநிலம் பத்தினாம்திட்டாவில் உள்ள சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் தொடங்கி மார்கழி மாதம் முடிய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பக்தர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் சபரிமலை கோயிலுக்கான தேவசம் போர்டு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முன்பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் இது நல்ல பலனைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவானது தொடங்கியுள்ளது. சரியாக இன்னும் ஒரு மாதம் காலம் மட்டுமே உள்ள நிலையில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களை முன்பதிவு வாயிலாக அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் குறிப்பிட்ட நாளில் எந்த நேரத்தில் மலையேற வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டு விடும்.

Also Read: Diwali 2024: தீபாவளி நாளில் இந்த விஷயத்தில் கவனம் தேவை.. இது உங்களுக்கு பிரச்சனையாக மாறலாம்..!

மண்டல, மகர விளக்கு காலத்தில் சரியாக 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அதன்படி நடப்பாண்டு நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. கார்த்திகை 1 ஆம் தேதியான நவம்பர் 16 முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை இருக்கும். சரியாக 41 நாட்கள் கணக்கிடப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல விளக்கு பூஜை நடைபெற்று நடை அடைக்கப்படும். அதன்பிற்கு மகர விளக்கு பூஜைக்கான டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று மகரவிளக்கு ஜோதி தரிசனம் நிகழும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

  • https://sabarimalaonline.org/#/login என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஏற்கனவே உறுப்பினராக இருந்தால் உங்கள் இ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் போட்டு உள்நுழையலாம்.
  • இல்லாவிட்டால் New User என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் மற்றொரு பக்கத்துக்கு செல்லும்.
  • அதில் உங்களுடைய முதல் பெயர், கடைசி பெயர், புகைப்படம், பிறந்ததேதி, மொபைல் எண், பாலினம், முகவரி, பின்கோடு, அடையாள அட்டை நகல், இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை பதிவிட்டு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் மீண்டும் https://sabarimalaonline.org/#/login என்ற பக்கத்துக்கு சென்று உங்கள் இ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவை பதிவிட்டால் ஓடிபி வரும். அதை சரியாக கொடுக்கும்போது தரிசனம் என்றைக்கு மேற்கொள்ள வேண்டும் என்ற தேதி கேட்கப்படும். அதை கிளிக் செய்தால் நீங்கள் தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தை காட்டும்.

Also Read: Diwali 2024: தீபாவளி திருநாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் மற்றும் வழிபடும் முறை!

அவ்வளவு தான். ஆன்லைன் வழியாக சபரிமலை முன்பதிவு செய்யும் பணி நிறைவடைந்து விடும். இந்த தரிசன முன்பதிவுக்கான நகல், உங்களுடைய ஆதார் அட்டை உள்ளிட்டவைகளையும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும். சரிபார்ப்பு பணிகள் முடிந்த பிறகே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம் முன்பதிவு செய்யாமல் தரிசனம் வரும் பக்தர்கள் வசதிக்காக பம்பை, நிலக்கல், எரிமேலி ஆகிய இடங்களிலும் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் சரியான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல விளக்கு,  மகர ஜோதி தரிசனம், ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதைத்தவிர ஒவ்வொரு தமிழ்மாதமும் முதல் 5 தினங்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News