5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருவண்ணாமலை மகா தீபத்தை நேரில் காண ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

Karthigai Deepam Festival: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின் போது ஏற்றப்படும் மகா தீபம் மிகவும் புனிதம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.‌ பத்து நாட்களுக்கு எரியும் இந்த தீபத்தை பக்தர்கள் வணங்கி வழிபடுவார்கள். மகா தீபம் ஏற்றும் காட்சியை நேரில் காண இணையத்தின் மூலமாக டிக்கெட் பெறுவது எப்படி?

திருவண்ணாமலை மகா தீபத்தை நேரில் காண ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
கார்த்திகை மகா தீபம்
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 21 Nov 2024 17:12 PM

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை நட்சத்திரம் டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:50 மணிக்கு தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை 5:48 மணிக்கு முடிவடைகிறது. இந்த வருடம் பிரதோஷமும் சேர்ந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு பெற்றது.

Also Read: திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை நிகழ்ச்சிகள்:

திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பே கொடியேற்றம் செய்யப்படும். இந்த வருடம் டிசம்பர் 4ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றம் நடைபெறும். இந்த கார்த்திகை திருவிழா 17 நாட்கள் நடைபெறும்

  • டிசம்பர் 1 ஆம் தேதி துர்க்கை அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றப்படும்.
  • டிசம்பர் 2ஆம் தேதி பிடாரி அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றப்படும்.
  • டிசம்பர் 3ஆம் தேதி விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதியில் தீபம் ஏற்றப்படும்.
  • டிசம்பர் 4ஆம் தேதி கோ பூஜை, வெள்ளி ரதத்தின் ஊர்வலம் மற்றும் சிம்ம வாகனம் நடைபெறும்.
  • டிசம்பர் 5ஆம் தேதி தங்க ரிஷப தேர் மற்றும் தங்க இந்திர விமான ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 6ஆம் தேதி தங்க சிம்ம வாகனம் மற்றும் வெள்ளித்தேர் ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 7ஆம் தேதி தங்க காமதேனு வாகனத்தின் ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 8ஆம் தேதி தங்க ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 9ஆம் தேதி வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாரதம் நடைபெறும்.
  • டிசம்பர் 11ஆம் தேதி பிச்சாண்டவர் சன்னதியில் தீபமேற்றி குதிரை வாகன ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 12ஆம் தேதி கலச வாகனம் மற்றும் காமதேனு வாகன ஊர்வலம் நடைபெறும்.
  • டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை அண்ணாமலையார் சந்ததிக்கு எதிரே பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு மாலை 6 மணிக்கு மலை மேல் அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
  • 14ஆம் தேதி நெபல் சன்னதி மற்றும் சண்டிகேஸ்வராவில் தீபம் ஏற்றப்படும்.
  • டிசம்பர் 15ஆம் தேதி நெபல் சன்னதி மற்றும் அண்ணாமலையில் தீபம் டிசம்பர் 16ஆம் தேதி நெபல் சன்னதி மற்றும் சப்த்திரிசியில் தீபம் ஏற்றப்படும்.
  • இறுதி நாளான டிசம்பர் 17ஆம் தேதி சண்டிகேஸ்வரருக்கு தீபம் ஏற்றுவதோடு இந்த நிகழ்வு முடிவு பெறும்.

அனுமதிக்கப்படும் பக்தர்கள்:

டிசம்பர் 13ஆம் தேதி ஏற்றப்படும் பரணி தீபத்தை தரிசிக்க 7500 பக்தர்களுக்கும், மாலையில் மகா தீபத்து தரிசிக்க 11,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண 2000 பக்தர்களுக்கு மட்டுமே உடல் பரிசோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

ஆன்லைன் டிக்கெட் பெறுவது எப்படி?

பரணி தீபத்தை தரிசிக்க 500 பக்தர்களுக்கும் மகா தீபத்தை தரிசிக்க 1100 பக்தர்களுக்கும் இணையத்தில் அனுமதி வழங்கப்படும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால் ஆன்லைனில் டிக்கெட் பெறுவதற்கு ஆதார் அட்டை, அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். டிக்கெட் பெற பதிவு செய்யும் மின்னஞ்சலில் உங்களுக்கான டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேரில் காண விரும்புபவர்கள் https://annamalaiyar.hrce.tn.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

Also Read: Karthigai Deepam: திருக்கார்த்திகை எப்போது? வீட்டில் தீபமேற்றும் வழிமுறைகள் இதோ!

எப்பொழுது அனுமதிக்கப்படுவார்கள்:

இணையத்தின் மூலமாக டிக்கெட் பெற்று பரணி தீபத்தை காண வரும் பக்தர்கள் அன்று காலை 6:00 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இணையத்தில் டிக்கெட் பெற்ற மகா தீபம் தரிசனத்தை காண வரும் பக்தர்கள் 2.30 முதல் 3:30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள் தவறாமல் டிக்கெட் மற்றும் தங்களின் ஆதார் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இந்த பக்தர்கள் அனைவரும் கிழக்கு ராஜகோபுரம் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்

 

Latest News