5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mangala Gowri Viratham: திருமணம் தடைபடுகிறதா? – பெண்களே இந்த விரதம் இருங்க!

Aadi Masam: ஒருபுறம் பொருளாதாரம் , வெளிப்புற சூழல் தடையாக அமையும். மறுபக்கம் ஜாதகம், கிரகப்பலன்கள் ஆகியவை பிரச்னையாக மாறும். அப்படிப்பட்ட நிலையில் மங்கள கௌரி விரதத்தை மேற்கொண்டால் பெண்கள் திருமணத் தடையில் இருந்து விலக்குப் பெறலாம் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

Mangala Gowri Viratham: திருமணம் தடைபடுகிறதா? – பெண்களே இந்த விரதம் இருங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 05 Aug 2024 15:42 PM

மங்கள கௌரி விரதம்: ஆண், பெண் இருவருக்கும் திருமணம் என்பது மிகப்பெரிய கனவாகும். இத்தகைய கனவை எளிதாக அடைவது மிகச்சிரமம். ஒருபுறம் பொருளாதாரம் , வெளிப்புற சூழல் தடையாக அமையும். மறுபக்கம் ஜாதகம், கிரகப்பலன்கள் ஆகியவை பிரச்னையாக மாறும். அப்படிப்பட்ட நிலையில் மங்கள கௌரி விரதத்தை மேற்கொண்டால் பெண்கள் திருமணத் தடையில் இருந்து விலக்குப் பெறலாம் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த விரதம் ஆடி மாதம் 3ஆம் செவ்வாய் கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதற்கான திதி தொடங்கினாலும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தான் மங்கள கௌரி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இதில் திருமணமான பெண்களும் பங்கேற்கலாம். இந்த விரதத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் காணலாம்.

Also Read: Vastu Tips: அதிகாலையில் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்யலாம்?

பொதுவாக திருமணமான பெண்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய மங்கள கௌரி விரதத்தை மேற்கொள்கிறார்கள். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் ஏற்படும். மேலும் கணவன்-மனைவி இடையே உள்ள உறவு இனிமையாகிறது. அதுமட்டுமின்றி குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணத்தில் தடைகளை எதிர்கொண்டாலும்,  யாருடைய ஜாதகத்திலும் தோஷம் இருந்தாலும் அந்த இளம்பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சுப பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதேசமயம் குழந்தைப் பேறு விரும்பும் பெண்களுக்கும் இந்த மங்கள கௌரி விரதம் மற்றும் விரதம் முக்கியமானது.

மங்கள கௌரி விரதம் பூஜை முறை

மங்களகௌரி விரதம் அன்று, அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் இருக்கப்போவதாக பூஜையறையில் கடவுள் முன்பு நின்று வாக்குறுதி கொடுங்கள். பிறகு அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கு பன்னீர் அபிஷேகம் செய்யவும். பார்வதி தேவியின் முன் நெய்  தீபம் ஏற்றவும். விதிகள் மற்றும் சடங்குகளின்படி சிவன் மற்றும் பார்வதியை மனதார வணங்குங்கள். பூஜையின் போது அம்மனுக்கு சிவப்பு பூக்கள் மற்றும் அலங்கார பொருட்களை சமர்பிக்கவும். இதனுடன்  வில்வ இலைகள், சந்தனம், பால் போன்றவற்றையும் வழங்கலாம். விருப்பப்பட்டவர்கள் பழங்கள், இனிப்புகளை வழங்கவும். அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை உச்சரிக்கவும்.

Also Read: Amavasai: அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைப்பது எப்படி?

திருமணத்தடை நீங்க இந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அதாவது, “ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோக பயகரி மம வாசம் ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ்..ஓம் பார்வதி பத்யே நம: ஓம் பார்வதி பத்யே நம” என சொல்ல வேண்டும்,

நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்ய விரும்பினால், “ஹே கௌரி சங்கரர்தாங்கி, யதத்வம் சங்கரப்ரியா தத்தமம், குரு கல்யாணி, காந்த காண்டம் சுதுர்லபம்” என உச்சரியுங்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News