5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sabarimala: விமானம் மூலம் சபரிமலை எப்படி செல்லலாம் தெரியுமா?

Ayyappan Temple: நாளொன்றுக்கு சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக இந்தாண்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sabarimala: விமானம் மூலம் சபரிமலை எப்படி செல்லலாம் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Nov 2024 08:30 AM

சபரிமலை: கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் சபரிமலையில் சீசன் காலமாகும். கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மதம், இனம், மொழி கடந்தும் மக்கள் சபரிமலை ஐயனை நாடி வருகை தருகின்றனர். நவம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வரையும், டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரையும் என நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக இந்தாண்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் செல்ல நினைக்கிறீர்களா?

விமான மூலம் சபரிமலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்தியாவில் எங்கு இருந்தாலும் முதலில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு பயணிக்க வேண்டும். கொச்சிக்கு வரும் பக்தர்கள் சுமார் 120 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக சபரிமலைக்கு பயணிக்க வேண்டும். அதேபோல் திருவனந்தபுரம் சென்று சபரிமலை வர நினைப்பவர்கள் சாலை வழியாக 170 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்து அங்கிருந்து கரிப்போர் வழியாக வரலாம்.

Also Read:  சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

ஒருவேளை தமிழ்நாடு வருகை தந்து இங்குள்ள கோயில்களுக்கு எல்லாம் சென்று விட்டு சபரிமலை பயணிக்க நினைப்பவர்கள் மதுரை, தூத்துக்குடி அல்லது கோயம்புத்தூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலம் சபரிமலைக்கு பயணப்படலாம். சபரிமலையில் விரைவில் விமான தளம் அமைய உள்ள நிலையில் தற்போது விமானத்தில் சபரிமலைக்கு உலகமெங்கும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் இவையெல்லாம் தரிசனத்தின் முதல் படி மட்டும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் சபரிமலைக்கு எந்த பாதையில் இருந்து நீங்கள் விமானத்தில் வந்து இறங்கினாலும் அங்கு இருந்து கார் அல்லது ரயில் மூலமாகத்தான் செல்ல வேண்டும்.

கோழிக்கோட்டில் இருந்து சபரிமலை 330 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதே போல் மதுரையிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும் கோவையிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும் சபரிமலை அமைந்துள்ளது. கடந்தாண்டு முதல் விமானத்தில் இருமுடிப்பையை சபரிமலை பக்தர்கள் கொண்டு செல்லலாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது. விமானத்தில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் பட்டியலில் தேங்காய் உள்ளது. இதனால் அனுமதி கிடைக்காமல் இருந்தது.

இதன் காரணமாக பலர் ரயில் மூலமாக சபரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கேரளா, தமிழ்நாட்டுக்கு விமானத்தில் சென்று அங்கிருக்கும் குருசாமிகளிடம் நெய்தேங்காய் அடைத்து இருமுடிக்கட்டி சாமி தரிசனம் செய்து வந்தார்கள்.

Also Read: Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு

சபரிமலையில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரை மண்டல பூஜைக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று நடை அடைக்கப்படும். அதன் பிறகு  டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகரஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் பொன்னம்பலமேட்டில் நடைபெறும்.

சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் உள்ளது. ஆகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை திருவாங்கூர் தேவசம் போர்டு எடுத்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் நாம் சாமி தரிசனம் செய்ய நினைக்கும் தேதி மற்றும் நேரம் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். அதனை குறிப்பிட்டு தேர்வு செய்யலாம்.

அதுமட்டுமல்லாமல் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் சாமி தரிசனம் அந்த நாளில் செல்ல முடியாது என நினைத்தால் உடனடியாக தரிசனம் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மறுபடியும் நீங்கள் முன்பதிவு செய்து சபரிமலை செல்ல முடியாது.

Latest News