Kula Deivam: வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி? - Tamil News | how to make Kula Deivam worship in our home | TV9 Tamil

Kula Deivam: வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?

Published: 

09 Sep 2024 18:00 PM

எத்தகைய தெய்வத்தை வழிபட்டாலும் எக்காரணம் கொண்டும் குலதெய்வம் வழிபாட்டை மட்டும் கைவிடக்கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. குலத்தை காக்கின்ற தெய்வமாக விளங்கும் அத்தகைய கடவுளை கிடைக்கும் நேரமெல்லாம் சென்று பார்க்க வேண்டும். ஒருவேளை முடியாவிட்டால் வருடத்திற்கு ஒருமுறையாவது நிச்சயம் வழிபட வேண்டும். ஆனால் நிறைய பேர் குடும்பங்களில் தொலைதூரம் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு வேண்டியும் பயணம் செல்ல முடிவதில்லை என கலங்கி நிற்போம்.

Kula Deivam: வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?

கோப்பு புகைப்படம்

Follow Us On

குலதெய்வ வழிபாடு: கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் மாறுபடும். பல்வேறு வகையான தெய்வங்கள் உள்ள நிலையில், தங்களுக்கு ஏற்றவாறு வழிபாடு செய்கிறார்கள். ஆனால் எத்தகைய தெய்வத்தை வழிபட்டாலும் எக்காரணம் கொண்டும் குலதெய்வம் வழிபாட்டை மட்டும் கைவிடக்கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. குலத்தை காக்கின்ற தெய்வமாக விளங்கும் அத்தகைய கடவுளை கிடைக்கும் நேரமெல்லாம் சென்று பார்க்க வேண்டும். ஒருவேளை முடியாவிட்டால் வருடத்திற்கு ஒருமுறையாவது நிச்சயம் வழிபட வேண்டும். ஆனால் நிறைய பேர் குடும்பங்களில் தொலைதூரம் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு வேண்டியும் பயணம் செல்ல முடிவதில்லை என கலங்கி நிற்போம். அப்படியிருப்பவர்கள் என்ன மாதிரியான செயல்கள், பரிகாரம் செய்து அதனை சரி செய்யலாம் என பார்க்கலாம்.

Also Read: Spiritual Tips: வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமா? – இதை ஃபாலோ பண்ணுங்க!

சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, நம் முன்னோர்கள் அல்லது நாம் பிறந்து வளர்ந்த பூர்வீகத்தை கொண்டவர்களை நாம் குலதெய்வமாக வணங்கி வருகிறோம். அதற்கான பரிகாரம் தொடங்கி வேண்டுதல் வரை செய்வதால் எல்லாம் நிவர்த்தியாவதோடு மனமும் திருப்தியடையும். வீட்டில் குலதெய்வம் படம் இருந்தால் பூஜை செய்யலாம். சில இடங்களில் குலதெய்வத்திற்கு உருவம் இல்லாமல் இருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த தெய்வத்தை மனதில் நினைத்து வீட்டில் தனியாக விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு நெய் தீபமாக இருந்தால் இன்னும் புண்ணியமாகும். வெளிமாநிலங்களில் இருக்கக்கூடிய கோயிலில் வேண்டி இருந்தால் ஒரு மஞ்சள் துணி எடுத்துக்கொள்ளுங்கள். அது பட்டுத்துணியாக இருந்தால் விசேஷம். அப்படியிருக்கும் நிலையில் அந்த துணியில் பணத்தை வைத்து கடவுளிடம் மனதார மன்னிப்பு கேட்டு நேரம் அமையும் பட்சத்தில் வருகிறேன் என உறுதியளித்து அதை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

Also Read:Crime: காதல் பிரச்சனையால் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. அதிர்ச்சியில் மக்கள்..

ஒருவேளை குலதெய்வ கோயிலுக்கு வழக்கமாக செல்பவர்கள் சூழல் காரணமாக செல்ல முடியாவிட்டால், அவர்கள் குலதெய்வ படத்துக்கு முன்னால் குலதெய்வ கோயில் வழிபாட்டை மனதில் வைத்து வழிபட்டால் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும். கோயிலில் அன்னதானம் அல்லது வழிபாட்டில் செய்யக்கூடிய பணத்தை சரியான நேரத்தில் செய்ய முடியாவிட்டால் வீட்டில் பணம் சேர்த்து வைக்கலாம். வீட்டில் சுவாமியை வழிபட்டாலே போதும். கடவுளின் அனுக்கிரகம் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து சூழலிலும் துணை நிற்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version