5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sankatahara Chaturthi: சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி..விநாயகரை வழிபடுவது எப்படி?

Vinayagar: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி திசைக்கு ஒருவராய் இருக்கும் விநாயகப்பெருமானை நேரில் சென்று வழிபடலாம். இன்று நடக்கும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சிறப்பு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் விநாயகரின் உருவமாக பார்க்கப்படும் யானைக்கு உணவுகள் வாங்கி கொடுத்து ஆசி பெறலாம்.

Sankatahara Chaturthi:  சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி..விநாயகரை வழிபடுவது எப்படி?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 24 Jul 2024 17:53 PM

சங்கடஹர சதுர்த்தி நாள்: நாம் எந்த விஷயம் செய்தாலும் விநாயகரை வணங்கி விட்டு தான் செய்வோம். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி உள்ளது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த 4வது நாளில் வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.இப்படியாக தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவது நற்பலன்கள் தரும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தொல்லைகள், பிரச்சினைகள், கவலைகள் உள்ளிட்ட பல சங்கடங்களை நீக்கும் “ஹர” தான் சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் செவ்வாய்கிழமை வரும்போது மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் அதுகுறித்த முக்கிய தகவல்களை காணலாம்.

Also Read: Siruvapuri: சொந்த வீடு கனவை நனவாக்கும் சிறுவாபுரி முருகன் கோயில்!

எப்படி வழிபடலாம்?

 

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி திசைக்கு ஒருவராய் இருக்கும் விநாயகப்பெருமானை நேரில் சென்று வழிபடலாம். இன்று நடக்கும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சிறப்பு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் விநாயகரின் உருவமாக பார்க்கப்படும் யானைக்கு உணவுகள் வாங்கி கொடுத்து ஆசி பெறலாம்.

இன்றைய நாளில் காலை முதல் இரவு வரை விநாயகருக்கு விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் நிலையில் மாலையில் வழிபாட்டில் படைக்கும் நைவேத்தியத்தை மட்டும் உண்டு தனிமையில் தூங்க வேண்டும்.

அதேபோல் விநாயகர் சதுர்த்திக்குப் பின் வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மாசி மாதம் செவ்வாய்கிழமை வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வரை தொடர் விரதம் கடைபிடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இதனால் நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் நோய் பாதிப்பு குறையும். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் குறையும். கல்வி, மகப்பேறு, தொழில் வளர்ச்சி, நீண்ட ஆயுள் போன்ற பல கோரிக்கைகளையும் விநாயக பெருமான் நிறைவேற்றி வைப்பார் என்பது தீராத நம்பிக்கையாகும்.

Also Read: Anthili Narasimhar: தீராத கடன் பிரச்னைகளை தீர்க்கும் அந்திலி நரசிம்மர்!

கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு!

 

இன்று கோயிலுக்கு செல்வோர் விநாயகர் சன்னதியை 11 முறை சுற்றி வலம் வர வேண்டும். அறுகம்புல்,பழம், தேங்காய் போன்றவை படைத்து அர்ச்சனை செய்யலாம். விநாயகரை எப்போதும் தோப்புக்கரணம் போட்டு தான் வணங்க வேண்டும். சங்கடஹர சதுர்த்திக்கு என பசும்பால் வழங்கலாம். அதுமட்டுமல்லாமல் கோயில் வழிபாட்டுக்குப் பின் பச்சரியை ஊறவைத்து அதில் வெல்லம் கலந்து வாழைப்பழம் சேர்த்து பிசைந்து பசுவுக்கு கொடுத்து வழிபட்டால் சிறப்பாக இருக்கும்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் மாலையில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட மிகவும் விசேஷமானது. பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். இதனால் கடன் பிரச்னை நீங்கி செல்வ வளம் பெருகும்.

Latest News