5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual: சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம்… வழிபடும் முறையும் பலன்களும்..!

Annabishegam: அன்னம் பரபிரம்மம் எனக் கூறி அன்னத்தை இறைவனாக வணங்குவது நம் இந்து தர்மம். கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பவர் சிவபெருமான். அதை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு நடைபெறும். பௌர்ணமி அன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

Spiritual: சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம்… வழிபடும் முறையும் பலன்களும்..!
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 30 Oct 2024 20:04 PM

ஐப்பசி பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும் ஆலய வழிபாட்டில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு:

பிரம்ம தேவர் தானும் சிவபெருமானை போல் ஐந்து தலைகளைக் கொண்டவர். அதனால் நானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என கர்வம் கொண்டார். இதனால் சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை தனது கைகளால் கொய்தார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையை பற்றி கொண்டது. ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையை பற்றி கொண்ட கபாலம் பிச்சை பாத்திரம் ஆக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும்போதுதான் சிவபெருமானின் கையை விட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம்.

சிவபெருமான் காசிக்கு சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தினார். அப்போது அவருக்கு அன்னை அன்னபூரணி அன்னமிட்டார். அன்னபூரணியின் அன்பால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு சிவபெருமானை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாதம் பௌர்ணமி ஆகும். எனவே அன்றைய தினம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்று வரலாறு சொல்லப்படுகிறது.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:

இந்த வருடம் மகா அன்னாபிஷேகம் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பௌர்ணமி திதி நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3:53 மணிக்கு தொடங்கி நவம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3:42 மணிக்கு முடிவடைகிறது.

Also Read: அமாவாசை தினத்தில் வரும் அபூர்வ யோகங்கள்… இந்த ராசிகளுக்கு ராஜயோகம்!

சிவபெருமான் அபிஷேக பிரியர். பொதுவாக சிவலிங்க திரு மேனிக்கு அன்னா அபிஷேகமும் அன்னத்தால் அலங்காரமும் செய்வது வழக்கம். அதே சமயம் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறிகள் பல வகைகளை கொண்டும் அலங்காரம் செய்யலாம். சிவலிங்கத் திருமேனியில் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். கீழ்பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணு பாகம், மேற்பகுதி சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியில் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாக செய்யப்படுகிறது.

முதலில் ஐந்து வகைப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகம் மட்டும்தான் ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அன்னத்தை அகற்றி விடுவர். இந்த ஒவ்வொரு அன்னப் பருகையும் சிவலிங்கம் என்கிறது சிவபுராணம். இந்த அன்னப் பருக்கையில் ஒன்றை மட்டும் உட்கொண்டாலே தீராத நோயும் தீரும், ஆரோக்கியம் கூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் பிரசாதத்தை ஒரு பகுதியை கோவில் நிலத்தில் போடப்படுகிறது. இதன் மூலம் நீரில் வாழும் புழு, பூச்சிகள் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்திற்கும் உணவு கிடைக்கிறது.

சாஸ்திரப்படி வெறும் அன்னத்தை சாப்பிடக்கூடாது என்பதால் அந்த சாதத்துடன் தயிர் அல்லது சாம்பார் சேர்த்து பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படும்

Also Read: கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்? தீபாவளி தின கனவு பலன்கள் இதுதான்!

பலன்கள்:

அன்னாபிஷேகம் பிரசாதத்தை உண்டால் தீராத நோயும் தீரும். தொழில் வியாபார பிரச்சனைகள் தீரும். வாழ்க்கையில் உணவு பஞ்சமே இருக்காது. நிதிநிலை எப்போதும் சீராகவே இருக்கும். மங்காத தோற்றப்‌‌ பொழிவு கிடைக்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தின் போது உங்களால் முடிந்த அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் என எதை வேண்டுமானாலும் கோயிலுக்கு தானமாக வழங்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News