5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Margazhi Month: மார்கழி மாதத்தின் முக்கிய மற்றும் விசேஷ தினங்கள்

Important Days in Margazhi: தமிழ் மாதத்தின் ஏழாவது மாதம் மார்கழி இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் வரக்கூடிய முக்கியமான பண்டிகைகள் மற்றும் விசேஷ தினங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Margazhi Month: மார்கழி மாதத்தின் முக்கிய மற்றும் விசேஷ தினங்கள்
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 10:46 AM

மாதங்களில் மிக உயர்வான மாதமாகவும் ஆன்மீக மாதமாகவும் மார்கழி மாதம் திகழ்கிறது. சூரிய பகவான் தனுசு ராசியில் தன் பயணத்தை துவங்கும் புனித மாதமாகும். இது தேவர்களின் விடியற்காலை நேரமான பிரம்ம முகூர்த்த நேரமாக கருதப்படுவதால் இந்த மாதத்தில் நிறைய பலன்களையும் மோட்சத்தையும் இந்த மாதம் வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்த மாதம் சிவன் மற்றும் பெருமாள் ஆகிய இரு தெய்வங்களையும் வழி விடுவதற்கு ஏற்ற மாதமாகும். இந்த ஆன்மீக மாதம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி காலை 6:57 மணியிலிருந்து தொடங்குகிறது. டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கும் இந்த மார்கழி மாதம் ஜனவரி 13ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ நாட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மார்கழி 2024 முக்கிய பண்டிகை நாட்கள் :

  1. ஆங்கில மாதம் – தமிழ் மாதம் – பண்டிகை
  2. டிசம்பர் 25 – மார்கழி 10 – கிறிஸ்துமஸ் பண்டிகை
  3. டிசம்பர் 30 – மார்கழி 15 – அனுமன் ஜெயந்தி
  4. ஜனவரி 01 – ஜனவரி 01 – ஆங்கில புத்தாண்டு
  5. ஜனவரி 10 – மார்கழி 26 – வைகுண்ட ஏகாதசி
  6. ஜனவரி 11 – மார்கழி 27 – கூடாரவல்லி
  7. ஜனவரி 13 – மார்கழி 29 – போகிப் பண்டிகை,ஆருத்ரா தரிசனம்

கிறிஸ்துமஸ்:

உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக இந்த உலகில் அவதரித்த தினம் டிசம்பர் 25. இந்த தினத்தில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை தமிழ் மாதமான மார்கழியில் வருகிறது.

Also Read: வீடு செழிக்க தினமும் செய்ய வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!

அனுமன் ஜெயந்தி:

ராமாயணத்தில் ராமருக்கு உதவி புரிந்த அனுமனின் பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் வைணவ கோயில்களிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று பக்தர்கள் அனுமருக்கு வடை மாலை துளசி, மாலை, வெற்றிலை மாலை ஆகியவற்றை சாற்றி வழிபடுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி:

பெருமாள் தான் தங்கி இருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்பப்படுகிறது. பெருமாள் கோயில்களில் விடிய விடிய பெருமாளின் புகழ் பாடுவார்கள். இந்த நாளும் மார்கழி மாதத்தில் வருகிறது.

கூடாரவல்லி:

ஆண்டாள் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டு திருமாலின் திருவடியை அடைந்த நாளை கூடார வழி என்று ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம்:

சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் மார்கழி மாதம் எல்லா சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

மார்கழி 2024 விரத நாட்கள் :

  1. விரதங்கள் – ஆங்கில மாதம் – தமிழ் மாதம்
  2. அமாவாசை – டிசம்பர் 30 – மார்கழி 15
  3. பெளர்ணமி – ஜனவரி 13 – மார்கழி 29
  4. கிருத்திகை – ஜனவரி 09 – மார்கழி 25
  5. திருவோணம் – ஜனவரி 02 – மார்கழி 18
  6. ஏகாதசி – டிசம்பர் 26, ஜனவரி 10 – மார்கழி 11, மார்கழி 26
  7. சஷ்டி – டிசம்பர் 21,ஜனவரி 5 – மார்கழி 6, மார்கழி 21
  8. சங்கடஹர சதுர்த்தி – டிசம்பர் 18 – மார்கழி 3
  9. சிவராத்திரி – டிசம்பர் 29 – மார்கழி 14
  10. பிரதோஷம் – டிசம்பர் 28, ஜனவரி 11 – மார்கழி 13, மார்கழி 27
  11. சதுர்த்தி – ஜனவரி 3 – மார்கழி 19

Also Read: Margazhi Month: மார்கழி மாதத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்

மார்கழி 2024 அஷ்டமி, நவமி, கரிநாட்கள் :

  1. திதி ஆங்கில மாதம் – தமிழ் மாதம்
  2. அஷ்டமி – டிசம்பர் 23, ஜனவரி 6 – மார்கழி 8, மார்கழி 22
  3. நவமி – டிசம்பர் 24, ஜனவரி 7 – மார்கழி 9, மார்கழி 23
  4. கரி நாட்கள் – டிசம்பர் 21, டிசம்பர் 24, டிசம்பர் 26 – மார்கழி 06, மார்கழி 09, மார்கழி 11

இந்த மாதத்தில் சுப முகூர்த்த நாட்கள், வாஸ்து நாள் மற்றும் நேரம் எதுவும் கிடையாது

Latest News