சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.. பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

Rules for Sabarimalai Fasting: சபரிமலை ஆன்மீக சீசன் தொடங்கிவிட்டது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.. பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

ஐயப்பன்‌ (Photo Credit: Pinterest)

Published: 

15 Nov 2024 08:58 AM

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் துவங்கியதும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பக்தியில் மூழ்கி ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்தியுடன் ஐயப்பன் நாமத்தை சொல்லி விரதம் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது சுவாமி ஐயப்பனின் பரிபூரண அருள் கிரகம் பெற்று கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப்பிடிக்கும் ஐயப்ப பக்தனை மற்றவர்கள் ஐயப்பனின் அவதாரமாகவே மதிக்கிறார்கள். எனவே மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வோர் கட்டாயம் தெரிந்து கொண்டு மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

  • சபரிமலை செல்ல இருப்பவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் அல்லது 19 ஆம் தேதிக்குள் ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை ஆனால் அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும் எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
  • மாலையில் ருத்ராட்ச மணி 54 உள்ளது அல்லது துளசி மணி 108 கொண்டது வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலரை இணைத்து அணிய வேண்டும்.
  • தாய் தந்தையின் நல்லாசி பெற்று குருசாமி கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயிலுக்கு சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு ஐயப்பனை குருவாக நினைத்து மாலையை அணிய வேண்டும்.
  • மாலை அணிந்த பின்பு கோபம், வன்மம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை வீட்டாருடன் பகை மறந்து நட்பு பாராட்டி பழக வேண்டும்.

Also Read: sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

  • காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையில் சூரிய மறைவின் போதும் குளிர்ந்த நீரில் நீராடி விட்டு ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வேண்டும்.
  • நீலம்,காவி, பச்சை, கருப்பு, நிற வேட்டி சட்டை அணிய வேண்டும்.
  • பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
  • உறவினர்கள் மரணித்தால் குருசாமியிடம் சென்று மாலையை கழட்டிய பிறகு தான் துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  • தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்தினால் மாலையை கழட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லக்கூடாது.
  • குழந்தை பிறந்த வீட்டிற்கோ பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ செல்லக்கூடாது.
  • மாமிசம், மது, புகைப்பிடித்தலை விட்டு விட வேண்டும்.
  • மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். ஆனால் மற்றவர்கள் வீட்டில் பால்,பழம் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
  • வீட்டுப் பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், அவர்கள் சமைத்த உணவை ஏழு நாட்களுக்கு பின்பு தான் உண்ண வேண்டும்.
  • காலணிகள் பயன்படுத்தக்கூடாது.
  • மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை சவரம், முடிவெட்டுதல் செய்தல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
  • மெத்தை, தலையணை, போன்றவற்றை தவிர்த்துவிட்டு தரையில் விரிப்பு விரித்து படுக்க வேண்டும்.
  • பேச்சை குறைத்து மௌனம் காப்பது சிறந்தது.
  • மற்றவர்களிடம் நல்ல முறையில் பழக வேண்டும். பிறர் மனம் நோகும்படி பேசக்கூடாது.
  • ஒருவேளை நாம் அணிந்திருக்கும் மாலை தவறுதலாக அறுந்து போக நேரிட்டால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதனால் வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியது இல்லை.
  • கன்னிச்சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி அன்னதானம் செய்யலாம்.
  • எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை சகோதரிகளாகவும் கருதி பழக வேண்டும்.
  • மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் என்று தொடங்கி விடைபெறும் பொழுதும் சாமி சரணம் என கூற வேண்டும்.
  • இருமுடி கட்டு பூஜையை வீட்டிலோ குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.
  • சபரிமலை பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.
  • பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த முன்னோர்களுக்கு ஈமக்கடன்களை செய்து நீராட வேண்டும்.

Also Read: Thulasi Malai: ஐயப்பனுக்கு பிரியமான துளசி மாலை.. யாரெல்லாம் அணியலாம் தெரியுமா?

  • பயணம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஐயப்பனின் அருள்மிகுந்த பிரசாதத்தை தலையில் ஏந்திய படியே வீட்டு வாசலில் விடலை தேங்காய் உடைத்து பின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
  • கொண்டு வந்த பிரசாதங்களை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பின்னர் அதை விநியோகம் செய்ய வேண்டும்.
  • சபரிமலை சென்று திரும்பிய‌ பக்தர்கள் தாயார் அல்லது குருசாமியின் மூலம் மாலை கழட்ட வேண்டும். அப்பொழுது குருசாமி சொல்லும் மந்திரத்தை கூறிவிட்டு மாலையை கழற்றி சந்தனத்தில் நினைத்து அதை ஐயப்பனின் திருவுருவப்படத்திற்கு முன்னால் வைத்துவிட்டு தீப ஆராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?