5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kandha Sasti 2024: கந்த சஷ்டி முதல் நாளில் வாங்க வேண்டிய முக்கிய பொருள்கள்…

Things should buy on kandha sasti: ஒவ்வொரு வருட ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய பிரதமை திதியில் இருந்து சஷ்டி விரதம் தொடங்கும். முருக பக்தர்கள் அனைவருக்கும் இந்த சஷ்டி விரத ஆறு நாட்களையும் திருவிழா போல் கொண்டாடுவார்கள். ஏழாவது நாள் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த கந்த சஷ்டி முதல் நாளில் வாங்கக்கூடிய முக்கிய பொருள்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Kandha Sasti 2024: கந்த சஷ்டி முதல் நாளில் வாங்க வேண்டிய முக்கிய பொருள்கள்…
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 02 Nov 2024 07:21 AM

ஒவ்வொரு வேண்டுதலுக்கும் தனித்தனி கடவுளை வேண்டுவதற்கு பதிலாக நம்முடைய ஒட்டுமொத்த வேண்டுதலுக்கும் ஒரே ஒரே கடவுளாக முருகப்பெருமானை வணங்கலாம் என்பது மிகப்பெரிய நம்பிக்கை. எளிமையான கடவுள்களில் முருகப்பெருமானும் ஒருவர். உங்களிடம் இருக்கும் பொருளை நெய்வேத்தியமாக வைத்து முருகா என்று அழைத்தாலே ஓடி வந்து உதவுவார். அத்தகைய முருக64 பெருமாளுக்கு இந்த ஆறு நாட்கள் அவருக்கு பிடித்தமானவை செய்யலாம். கந்த சஷ்டி முதல் நாளில் குறிப்பிடப்படும் பொருளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். முடிந்தால் குறிப்பிடப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்தால் நல்லது.

மயில் தோகை:

முக்கியமான முதல் பொருள் முருகப்பெருமானின் அடையாளமாக‌ திகழக் கூடியது மயில். மயில்வாகனன் என்று அழைக்கக்கூடிய முருகனின் வாகனமான மயிலின் தோகை ஒன்று கிடைத்தால் கூட அதை வாங்கி விட வேண்டும். மயில் இறகை வீட்டுக்குள் வைப்பதின் மூலமாக வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். எதிர்மறை சக்திகள் விரட்டி அடிக்கப்படும். வீட்டில் துர் சக்தி மற்றும் கெட்ட சக்திகளில் நடமாட்டம் இருந்தால் விரட்டி அடிக்கப்படும். குறிப்பாக கண் திருஷ்டி பில்லி சூனியம் இதுபோன்ற விஷயங்களை விரட்டியடிக்க கூடிய சக்தி மயில் இறகிற்கு உண்டு.

வேல்:

பொதுவாக பெரும்பாலானோர் வீட்டில் வேல் வைத்து வழிபடும் வழக்கம் உண்டு. ஆனால் சிலர் வேல் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள். அவர்கள் கந்தசஷ்டியின் முதல் நாளான நவம்பர் 2ஆம் தேதி வாங்கி வீட்டில் வைத்தால் சிறப்பு. கந்த சஷ்டி முதல் நாள் வாங்க முடியாவிட்டால் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்குள் வாங்கி விட வேண்டும்.

Also Read: Lord Murugan: வாழ்வை மாற்றும் முருகனின் 48 நாள் விரதம்.. எப்படி இருக்க வேண்டும்?

கருங்காலி பொருள்கள்:

முருகரின் வேல், முருகர் சிலை போன்ற முருகன் சம்பந்தப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் கருங்காலியில் செய்யப்பட்டது வாங்க வேண்டும். கருங்காலி மாலை கருங்காலி காப்பு கருங்காலி விநாயகர் போன்றவற்றையும் வாங்கி வைக்கலாம். கருங்காலி பொருள் வீட்டில் இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக ஏற்படும். மேலும் வசியம் ஏற்படும். எனவே கந்தசஷ்டி முதல் நாளில் முருகர் சம்பந்தப்பட்ட கருங்காலி பொருள்கள் வாங்குவது கூடுதல் சிறப்பு.

துவரம் பருப்பு:

செவ்வாய் பகவானுடைய அதிபதி முருகன். செவ்வாய் பகவானுக்கு உகந்த தானியம் துவரை. கந்த சஷ்டி முதல் நாளான நவம்பர் 2ஆம் தேதி ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பையாவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். இதன் மூலமாக கடன் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுத்தப்படும்.

சந்தனம் மற்றும் குங்குமம்:

முருகன் என்றாலே அழகு என்று அர்த்தம். முருகப்பெருமான் ஒரு அலங்கார பிரியர். தன்னைத் தானே அழகுபடுத்திக்க கூடிய முக்கியமான கடவுள். அத்தகைய முருகப் பெருமான் சந்தனம் மற்றும் குங்குமம் இல்லாமல் இருக்க மாட்டார். எனவே கந்த சஷ்டி விரதத்தின் முதல் முதல் நாளில் வெள்ளை சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றை வாங்கி முருகப்பெருமானின் காலடியில் வைக்க வேண்டும். அதன் பிறகு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை செய்வது மூலமாக இந்த ஆறு நாட்கள் மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் முருகப்பெருமாள் உங்கள் இல்லங்களில் தங்கி இருக்கிறார்.

பன்னீர்:

முருகப்பெருமான் ஒரு அபிஷேகப் பிரியரும் கூட. எனவே அவருக்கு அபிஷேகம் சம்பந்தப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் நிச்சயம் பிடிக்கும். அதில் ஒரு முக்கியமான பொருள் பன்னீர். எனது இந்த நாளில் பன்னீர் வாங்குவது சிறந்தது. சந்தனத்துடன் சிறிது பன்னீர் கலந்து தினமும் நெற்றியில் இட்டு வந்தால் ஒருவித வசியமும் அழகும் ஏற்படும். உங்கள் முகத்தை பார்க்கும் மற்றவருக்கு ஒருவித நம்பிக்கை ஏற்படும். இதன் காரணமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Also Read: கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை… வழிபாடு செய்வது எப்படி?

பஞ்சாமிர்தம்:

பஞ்சாமிர்தம் செய்யக்கூடிய எல்லா பொருள்களையும் தனித்தனியாக வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவிட்டு பின் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பின்பு அதை எடுத்து பிரசாதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News