5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. களைகட்டும் சூரசம்ஹாரம்.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

Kandha Shasti: முருகனின் இரண்டாம் படை வீரான திருச்செந்தூரில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தினமும் திருச்செந்தூருக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. களைகட்டும் சூரசம்ஹாரம்.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
கந்த சஷ்டி திருவிழா
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Nov 2024 09:26 AM

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாள் அதாவது பிரதமை திதியில் இருந்து சஷ்டி திதி வரை உள்ள ஆறு தினங்கள் கடைபிடிக்கக்கூடிய விரதம் தான் இந்த கந்த சஷ்டி விரதம் ஆகும். முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடான திருத்தணி கோவிலை தவிர மற்ற கோவில்களில் இந்த திருவிழா வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படும்.

களைகட்டும் சூரசம்ஹாரம்

அந்த வகையில், முருகனின் இரண்டாம் படை வீரான திருச்செந்தூரில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.  தினமும் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கிரிவீதிவலம் வருதல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தினமும் திருச்செந்தூருக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்பரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சகால அபிஷேகம், பிற்பகல் 1 மணி சாயரட்சை தீபாரதனை நடைபெறுகிறது.

Also Read : கார்த்திகை ஏகாதசி வழிபாடு எப்படி செய்யணும் தெரியுமா? ஆன்மிகம் சொல்லும் முறை!

அதைத் தொடர்ந்து, மாலை 4.39 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி, ஏற்கனவே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் விரதம் இருந்து வரும் நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதனால் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்கள் சிறப்பு ஏற்பாடு:

இதனிடையே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுகாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காவல் உதவி மையங்கள், முதலுதவி சிகிச்சை நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள்/வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ள க்யூ ஆர் கோடு (QR Code) மற்றும் லிங்க் (link) மூலம் பெறும் தகவல் பெறும் வசதியை  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

சூரசம்ஹாரம் நிகழ்விற்கு சுமார் 4500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

18 இடங்களில் மொத்தம் சுமார் 20,000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே 4 காவல் உதவி மையங்கள் பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், 4 இடங்களில் அவசர மருத்துவ உதவி மையம், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கை.. ஆன்மிக வரலாறு இதுதான்!

நாளை திருக்கல்யாணம்:

திருக்கல்யாண வைபவம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்மான் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

Latest News