5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kanda Sashti 2024: வடமாநிலங்களில் கந்த சஷ்டி எப்படி கொண்டாடுவார்கள் தெரியுமா?

Lord Murugan: முருகன் சூரனை அழித்த நாளே கந்த சஷ்டி விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. சஷ்டி என்றால் 6 என அர்த்தம். முருகப்பெருமானுக்கும் 6 முகங்கள் உள்ள நிலையில் பிரதமை தொடங்கி சஷ்டி வரையிலான தினங்கள் விசேஷ நாட்களாக கணக்கிடப்படுகிறது. 6ஆம் நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறும். ஆன்மாவை துன்புறுத்தும் ஆணவத்தின் பலத்தை குறைத்து அதனை தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை வெளிக்காட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

Kanda Sashti 2024: வடமாநிலங்களில் கந்த சஷ்டி எப்படி கொண்டாடுவார்கள் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Oct 2024 12:05 PM

கந்த சஷ்டி: தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் கடவுளுக்கு விசேஷ தினங்களாக கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஆன்மிக நிகழ்வுகள் நம்மை மன மகிழ்ச்சியையும், மனதுக்கு நிறைவையையும் ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. இந்த விசேஷ நாட்கள் பக்தர்கள் தங்கள் விருப்பமாக கடவுளுக்கு விரதம், நேர்த்திக்கடன் உள்ளிட்ட பல வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் பிறந்தாலே முதலில் தீபாவளி பண்டிகை வரும். அம்மாதத்தில் வரும் அமாவாசை திதியை கணக்கில் கொண்டு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேசமயம் அமாவாசை திதிக்கு அடுத்த நாள் வளர்பிறை பிரதமையில் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இந்த விழா முருகப்பெருமானின் முக்கிய விசேஷ தினங்களில் முதன்மையானதாகும்.

முருகன் சூரனை அழித்த நாளே கந்த சஷ்டி விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. சஷ்டி என்றால் 6 என அர்த்தம். முருகப்பெருமானுக்கும் 6 முகங்கள் உள்ள நிலையில் பிரதமை தொடங்கி சஷ்டி வரையிலான தினங்கள் விசேஷ நாட்களாக கணக்கிடப்படுகிறது. 6ஆம் நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறும். ஆன்மாவை துன்புறுத்தும் ஆணவத்தின் பலத்தை குறைத்து அதனை தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை வெளிக்காட்டுவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். சஷ்டி காலத்தில் விரதம் கடைபிடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. அதனால் சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்பபையில் வரும் என்ற பழமொழி சொல்லப்படுகிறது. இது காலப்போக்கில் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என மாறிவிட்டது. நம்மில் பலருக்கும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா பற்றி தெரியும். வடமாநிலங்களில் இப்பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என பார்க்கலாம்.

Also Read: Poco M6 Pro 5G : வெறும் ரூ.10,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட போகோ எம்6 ப்ரோ 5ஜி.. பட்ஜெட் விலையில் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன்!

துலா சஷ்டி திருவிழா

வட மாநிலங்களில் கந்த சஷ்டி விழா சத்விரத பூஜை, சூரிய சஷ்டி, துலா சஷ்டி என அழைக்கப்படுகிறது. பீகார், ஜார்கண்ட் , உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் இப்பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றாலும் மக்களால் கந்த சஷ்டி பண்டிகை அந்தந்த இடங்களில் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

இந்த சஷ்டி நாட்களில் விரதம் இருக்கும் பெண்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். புது விறகு அடுப்பு, மாமரத்தின் குச்சிகள் போன்றவற்றை தான் சமையலுக்கு உபயோகிப்பார்கள். சமையல் செய்வதற்கு என்று தனிப்பட்ட பாத்திரங்களும் இடம்பெறும். இலைகளிலேயே உணவு படைப்பதும், உண்பதும் என இருக்கும் பெண்கள் படையல் பொருள்களில் கருப்பட்டி அல்லது வெல்லம் மட்டுமே இனிப்புக்காக சேர்ப்பார்கள்.

Also Read: ”மனோரமாவிற்கு பிறகு இவங்கதான்” – சசிகுமார் புகழ்ந்த நடிகை யார் தெரியுமா?

மேலும் தங்களுடைய கணவர் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நோய் நொடியின்றி ஆரோக்கியம் நீண்ட நாள் வாழ, குடும்பத்தில் செல்வ செழிப்பு மேலோங்க, காலையில் சூரியன் உதயமாகும் போதும், மாலையில் அஸ்தமனமாகும் போதும் சூரிய பகவானை வழிபடுவார்கள். அதேபோல் அக்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்களுக்காக அவர்களது மனைவி தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த துலா சஷ்டி விரதத்தை கடைபிடித்து வழி அனுப்பி விடுவார்கள் என்பது வரலாறு தெரிவிக்கிறது.

வட இந்தியாவில் சில சமூக பெண்கள் ஐப்பசி மாதம் வரும் சதுர்த்தி திதியில் இருந்து சப்தமி வரை நான்கு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். இந்த நாட்களில் இயற்கை சக்தியான சூரியனையும், சக்தி ரூபமாய் விளங்கும் பார்வதி தேவியையும் பிரார்த்தனை செய்வார்கள். இதில் பஞ்சமி அன்று பெண்கள் பகலில் கடவுள் வழிபாடு முடித்து மாலையில் பார்வதிக்கு படையலிட்ட பழங்கள்,  இனிப்புகளை உண்டு 36 மணி நேரம் கடும் நோன்பு மேற்கொள்வார்கள்.

சஷ்டி திதி என்று அருகில் உள்ள நீர் நிலைக்கு சென்று சூரியன் அஸ்தமிக்கும்போது ஆரத்தி எடுத்து பணியாரம், மஞ்சள், இஞ்சி கொத்து, வாழைத்தார், பழ வகைகள், தேங்காய், கரும்புகள் ஆகியவற்றை மஞ்சள் துணியில் கட்டி படைத்து வணங்குவர். பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து கரும்புகளைக் கொண்டு கூம்பு போன்ற கூடாரம் அமைக்கப்படுகிறது,  அதன் நடுவே சூரிய சக்தியை குறிக்கும் வகையில் பானை வடிவத்தில் தீபம் ஏற்றி இரவு முழுவதும் இறை வழிபாடு செய்வார்கள்.  சப்தமி அன்று சூரிய உதயத்தை தரிசித்து வணங்க விரதம் முடிவுக்கு வரும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Latest News