Karthigai: கார்த்திகை அமாவாசை.. லட்சுமி தேவி அருளை பெற சொல்ல வேண்டியவை!
Karthigai Amavasya: கார்த்திகை மாத அமாவாசையை அகன அமாவாசை என்றும் பவுமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் ஸ்ரீ ஹரிவிஷ்ணு, லட்சுமி தேவியுடன் சேர்ந்து முன்னோர்களை வழிபடுவது வழக்கம். பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அமாவாசை அன்று லட்சுமி தேவிக்கு சிறப்பு பரிகாரம் செய்யப்படுகிறது.
பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகள் இந்து மதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமாவாசை ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதியில் வருகிறது. அமாவாசை தினத்தில் கங்கையில் நீராடி, ஸ்ரீ மகா விஷ்ணுவை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது மத நம்பிக்கை. லக்ஷ்மி தேவியை வழிபடுவதால் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பணத்துக்கு பஞ்சமில்லை. அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிண்டம் அர்ச்சனை செய்தால் மோட்சமும், பித்ரு தோஷமும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்து பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு கார்த்திகை மாத அமாவாசை டிசம்பர் 1 ஆம் தேதி வருகிறது. அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. புனிதமாக கருதப்படுகிறது. கார்த்திகை அமாவாசை நாளில் சில பரிகாரங்களைச் செய்து நிதி நெருக்கடியைச் சமாளிக்கலாம். இதை செய்தால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்கி அருள்பாலிப்பாள்.
கார்த்திகை அமாவாசை எப்போது?
இந்து பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ அமாவாசை திதி நவம்பர் 30 சனிக்கிழமை காலை 10:29 மணிக்கு தொடங்குகிறது. அதே நேரத்தில் இந்த அமாவாசை திதி டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணிக்கு முடிவடைகிறது. இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசை டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அமாவாசை நாளில் இந்த ஒரு காரியத்தை செய்யுங்கள்
கார்த்திகை அமாவாசை நாளில் லக்ஷ்மி தேவி தொடர்பான பரிகாரத்தை செய்தால் உங்கள் கஜானா பணத்தால் நிரப்பப்படும். வாழ்க்கையில் பணத்துக்குப் பஞ்சம் வராது. இந்த பரிகாரம் லட்சுமி தேவியின் நாமங்களை உச்சரிப்பது ஆகும். கார்த்திகை அமாவாசை தினத்தன்று லட்சுமி தேவியின் 108 நாமங்களை உச்சரிப்பதால் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும் என்பதும், வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் என்பதும் நம்பிக்கை. இந்த அமாவாசை நாளில், லட்சுமி தேவியின் பின்வரும் 108 நாமங்களை உச்சரிப்பது உங்களுக்கு உகந்தது.
Also Read: கார்த்திகை பௌர்ணமி அன்று இந்த பரிகாரங்களை செய்யுங்கள்… வருமானம் கூடும்!
லக்ஷ்மி தேவி 108 நாமங்கள்:
- ஓம் அன்புலட்சுமி போற்றி
- ஓம் அன்னலட்சுமி போற்றி
- ஓம் அமிர்தலட்சுமி போற்றி
- ஓம் அம்சலட்சுமி போற்றி
- ஓம் அருள்லட்சுமி போற்றி
- ஓம் அஷ்டலட்சுமி போற்றி
- ஓம் அழகுலட்சுமி போற்றி
- ஓம் ஆனந்தலட்சுமி போற்றி
- ஓம் ஆகமலட்சுமி போற்றி
- ஓம் ஆதிலட்சுமி போற்றி
- ஓம் ஆத்மலட்சுமி போற்றி
- ஓம் ஆளும்லட்சுமி போற்றி
- ஓம் இஷ்டலட்சுமி போற்றி
- ஓம் இதயலட்சுமி போற்றி
- ஓம் இன்பலட்சுமி போற்றி
- ஓம் ஈகைலட்சுமி போற்றி
- ஓம் உலகலட்சுமி போற்றி
- ஓம் உத்தமலட்சுமி போற்றி
- ஓம் எளியலட்சுமி போற்றி
- ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
- ஓம் ஒளிலட்சுமி போற்றி
- ஓம் ஓங்காராலட்சுமி போற்றி
- ஓம் கருணைலட்சுமி போற்றி
- ஓம் கனகலட்சுமி போற்றி
- ஓம் கஜலட்சுமி போற்றி
- ஓம் கானலட்சுமி போற்றி
- ஓம் கிரகலட்சுமி போற்றி
- ஓம் குணலட்சுமி போற்றி
- ஓம் குங்குமலட்சுமி போற்றி
- ஓம் குடும்பலட்சுமி போற்றி
- ஓம் குளிர்லட்சுமி போற்றி
- ஓம் கம்பீரலட்சுமி போற்றி
- ஓம் கேசவலட்சுமி போற்றி
- ஓம் கோவில் லட்சுமி போற்றி
- ஓம் கோவிந்தலட்சுமி போற்றி
- ஓம் கோமாதாலட்சுமி போற்றி
- ஓம் சர்வலட்சுமி போற்றி
- ஓம் சக்திலட்சுமி போற்றி
- ஓம் சக்ரலட்சுமி போற்றி ஓம்
- சத்தியலட்சுமி போற்றி
- ஓம் சங்குலட்சுமி போற்றி
- ஓம் சந்தானலட்சுமி போற்றி
- ஓம் சந்நிதிலட்சுமி போற்றி
- ஓம் சாந்தலட்சுமி போற்றி
- ஓம் சிங்காரலட்சுமி போற்றி
- ஓம் சீவலட்சுமி போற்றி
- ஓம் சீதாலட்சுமி போற்றி
- ஓம் சுப்புலட்சுமி போற்றி
- ஓம் சுந்தரலட்சுமி போற்றி
- ஓம் சூர்யலட்சுமி போற்றி
- ஓம் செல்வலட்சுமி போற்றி
- ஓம் செந்தாமரைலட்சுமி போற்றி
- ஓம் சொர்ணலட்சுமி போற்றி
- ஓம் சொருபலட்சுமி போற்றி
- ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி
- ஓம் ஞானலட்சுமி போற்றி
- ஓம் தங்கலட்சுமி போற்றி
- ஓம் தனலட்சுமி போற்றி
- ஓம் தான்யலட்சுமி போற்றி
- ஓம் திரிபுரலட்சுமி போற்றி
- ஓம் திருப்புகழ்லட்சுமி போற்றி
- ஓம் திலகலட்சுமி போற்றி
- ஓம் தீபலட்சுமி போற்றி
- ஓம் துளசிலட்சுமி போற்றி
- ஓம் துர்காலட்சுமி போற்றி
- ஓம் தூயலட்சுமி போற்றி
- ஓம் தெய்வலட்சுமி போற்றி
- ஓம் தேவலட்சுமி போற்றி
- ஓம் தைரியலட்சுமி போற்றி
- ஓம் பங்கயலட்சுமி போற்றி
- ஓம் பாக்யலட்சுமி போற்றி
- ஓம் பாற்கடல்லட்சுமி போற்றி
- ஓம் புண்ணியலட்சுமி போற்றி
- ஓம் பொருள்லட்சுமி போற்றி
- ஓம் பொன்னிறலட்சுமி போற்றி
- ஓம் போகலட்சுமி போற்றி
- ஓம் மங்களலட்சுமி போற்றி
- ஓம் மகாலட்சுமி போற்றி
- ஓம் மாதவலட்சுமி போற்றி
- ஓம் மாதாலட்சுமி போற்றி
- ஓம் மாங்கல்யலட்சுமி போற்றி
- ஓம் மாசிலாலட்சுமி போற்றி
- ஓம் முக்திலட்சுமி போற்றி
Also Read: கார்த்திகை பௌர்ணமி.. சிவன் அருள் பெற வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகள்!
- ஓம் முத்துலட்சுமி போற்றி
- ஓம் மோகனலட்சுமி போற்றி
- ஓம் வரம்தரும்லட்சுமி போற்றி
- ஓம் வரலட்சுமி போற்றி
- ஓம் வாழும்லட்சுமி போற்றி
- ஓம் விளக்குலட்சுமி போற்றி
- ஓம் விஜயலட்சுமி போற்றி
- ஓம் விஷ்ணுலட்சுமி போற்றி
- ஓம் வீட்டுலட்சுமி போற்றி
- ஓம் வீரலட்சுமி போற்றி
- ஓம் வெற்றிலட்சுமி போற்றி
- ஓம் வேங்கடலட்சுமி போற்றி
- ஓம் வைரலட்சுமி போற்றி
- ஓம் வைகுண்டலட்சுமி போற்றி
- ஓம் நாராயணலட்சுமி போற்றி
- ஓம் நாகலட்சுமி போற்றி
- ஓம் நித்தியலட்சுமி போற்றி
- ஓம் நீங்காதலட்சுமி போற்றி
- ஓம் ராமலட்சுமி போற்றி
- ஓம் ராஜலட்சுமி போற்றி
- ஓம் ஐஸ்வர்யலட்சுமி போற்றி
- ஓம் ஜெயலட்சுமி போற்றி
- ஓம் ஜீவலட்சுமி போற்றி
- ஓம் ஜோதிலட்சுமி போற்றி
- ஓம் ஸ்ரீலட்சுமி போற்றி