5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவர்களுக்கு தான் அனுமதி.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

சபரிமலை கோயில்: ஓணம் பண்டிக்ககாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய திறக்கப்பட்டது

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவர்களுக்கு தான் அனுமதி.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
சபரிமலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 14 Sep 2024 15:13 PM

ஓணம் பண்டிக்ககாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரபலம். அந்த கோயிலுக்கு கேரளாவிலிருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகைதருவார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வருடம் முழுவதும் பக்தர்கள் அங்கு செல்வது வழக்கம். அந்த புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், சபரிமலை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு தந்திரிகண்டரரு பிரம்மத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று முதல் சபரிமலை கோயிலில் பூஜைகள் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 21ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

Also Read: வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை..

தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு:

அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. 21ஆம் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அன்றைய தினம், அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரும் 15,16ஆம் தேதிகளில் சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  ஓணம் பண்டிக்ககாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. முன்னதாக, ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதி இருக்கும்.

Also Read: புரட்டாசி மாத பௌர்ணமி‌ விரதம்… நினைத்தது நடக்க இதை செய்யுங்க!

ஆனால், தற்போது ஓணம் பண்டிகை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளம் மூலம் தரிசனத்திற்காக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதன் மூலம்  இன்று முதல் 21ஆம் தேதி வரை சபரிமலை கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News