5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

History of Alwars: தெய்வத்தின் பேரொளியாக வீசிய நம்மாழ்வாரின் கதை தெரியுமா?

History of Nammalwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். இந்த செய்யுள்களின் தொகுப்பு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வாரின் பேச்சுக்கு பெருமாளை கட்டுப்படுவதாகவும் அவர்கள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அந்த இடத்திற்கு தேடிச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் 12 நபர்கள். அதில் ஐந்தாவது ஆழ்வாரான நம்மாழ்வாரின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.

History of Alwars: தெய்வத்தின் பேரொளியாக வீசிய நம்மாழ்வாரின் கதை தெரியுமா?
நம்மாழ்வார் (Photo Credit: Mahavishnu Info)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 15 Nov 2024 08:45 AM

நம்மாழ்வார் வைணவ நெறியை பின்பற்றிய பக்தி சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்கள் ஐந்தாம் ஆழ்வார். நம்மாழ்வார் ஒன்பதாம் நூற்றாண்டில் பௌர்ணமி திதியில் விசாக நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை காரியார் – உடைய நங்கை என்ற தம்பதியருக்கு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தார். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான் என்றும் இவர் திருமாலின் அம்சமாகவே கருதப்படுபவர். சைவத்திற்கு மாணிக்கவாசகர் போல வைணவத்திற்கு நம்மாழ்வார். இவர் திருமாலின் படைத்தலைவரான விஷ்ணு சேனரின் அம்சமாக பிறந்தவர். இவருக்கு சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன், குருக்கைப் பிரான், குருக்கூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள் என பல பெயர்கள் உண்டு.

தெய்வப் பேரொளியாய் நம்மாழ்வார்:

இவர் பிறந்தது முதலில் சாதாரண குழந்தை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல், உணவு உண்ணாமல், அழாமல், பேசாமல், சிரிக்காமல் இப்படியே இருந்து வந்தார். இதனால் இவரின் பெற்றோர்கள் மிகவும் வருத்தம் கொண்டு இவரை எடுத்துக் கொண்டு போய் திருவனந்த ஆழ்வார் திருப்புளியமரமாக வளர்ந்திருக்கும் அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்று பெயரிட்டு அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். நம்மாழ்வாரும் அந்த புளிய மரத்தின்‌ குகையில் 16 ஆண்டுகளை கழித்தார்.

Also Read: History of Alwars: கோவிலை விட்டு வெளியேறிய பெருமாள்… திருமழிசை ஆழ்வாரின் வரலாறு!

நம்மாழ்வாருக்கு முன்பே பிறந்து தலை யாத்திரை மேற்கொண்ட மதுரகவி வடநாட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அயோத்தியில் இருந்த பொழுது தெற்கே ஒரு தெய்வப் பேரொளியை கண்டார். அந்த ஒளியை பின்பற்றி வந்து இறுதியில் குருகூரில் திருப்புளி அடியில் வீற்றிருந்த ஆழ்வாரை வந்து சேர்ந்தார். கண்களை மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து ஆழ்வாரின் முன்பு கல்லை தூக்கி போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்? என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார் “அது அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்” என்று கூறினார். உடனே மதுரகவி இவரே நம்மை ஆள வந்த குருநாதர் என்று கருதி தெய்வம் மற்றரியேன்‌ என்று ஆழ்வாரின் திருவடியை சேவித்து நின்றார்.

நம்மாழ்வாரின் தொண்டுகள்:

நான்கு வேதங்களாகிய ரிக் யஜுர் அதர்வணம் சாம வேதத்தின் சாரமாக அமைந்தது இவரின் நூல்கலாகும். திருவாய் மொழியில் 1102 பாசுரங்களும், திரு விருத்தம் நூலில் நூறு பாசுரங்களும், திருவாசிரிம் நூலில் எட்டு பாசுரங்களும், பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களிலும் 1297 பாசுரங்களை இசைத்துள்ளார். இவர் மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து மொத்தம் 35 திருக்கோயில்களை மங்களா சாசனம் செய்துள்ளார். மங்களா சாசனம் என்பது ஒரு கோயிலில் இருக்கும் இறைவனை போற்றி பாடுவதாகும்.

Also Read: ஏழு பிறவியிலும் தவம் உடையவர் என்ற பெருமை.. பூதத்தாழ்வார் வரலாறு இதுதான்!

அந்தக் கோயில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, திருத்தொலைவில்லி மங்கலம், சீனிவாச கோயில், பெருங்குளம், தென்திருப்பேரை, அரவிந்த லோச்சனா திருக்கோயில், திருக்கோளூர், வானமாமலை, திருப்பதிசாரம், திருவட்டாறு, திருவனந்தபுரம், ஆரமுளா, திருவண்வண்டூர், திருக்கடி தானம், திருகாக்கரை, திருச்செங்குன்றூர், திருமோகூர், திருப்புலியூர், திருவல்லவாழ், திருமூழிகளம், திருநாவாய், ஆழ்வார் திருநகரி, திருவிண்ணகர், வெண்ணாற்றங்கரை, துவாரகை, திருவடமதுரை, திருப்பேர் நகர், திருங்குறுங்குடி, திருக்கண்ணபுரம், அயோத்தி, திருமாலிருஞ்சோலை, கும்பகோணம், திருவேங்கடம், திருப்பாற்கடல், ஸ்ரீரங்கம் ஆகும். இதுவே நம்மாழ்வார் பெருமாளிடம் கொண்ட பக்தியும் ஆகும் .

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News