History of Alwars: ஒற்றுமையை போதித்த மகான்… பேயாழ்வாரின் வரலாறு
History of Pei Alwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். ஆழ்வாரின் பேச்சுக்கு பெருமாளை கட்டுப்படுவதாகவும் அவர்கள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அந்த இடத்திற்கு தேடிச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் 12 நபர்கள். அதில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
சமகாலத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் முதன்மையான ஆழ்வார்கள் என குறிப்பிடப்படுகிறார்கள். சைவத்தில் சமயக்குறவர்கள் நால்வர் போல் வைணவத்தில் இந்த மூன்று பேரை குறிப்பிடுகிறார்கள். அதில் மூன்றாவது ஆழ்வார் என சொல்லப்படும் பேயாழ்வாரை பற்றி அறிந்து கொள்ளலாம். வைணவ நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய 12 ஆழ்வார்களும் மூன்றாமானவர்.
பேயாழ்வாரின் தோற்றம்:
முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். இவர் 7ஆம் நூற்றாண்டில் ஐப்பசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று சதய நட்சத்திரம் வியாழக்கிழமை அன்று அவதரித்தார். இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் ஆதி கேசவ பெருமாள் கோவில் அருகில் உள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளி பூவிலிருந்து பிறந்தவர் ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாக பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகிறது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவராக பிறந்தார்.
பெயர் காரணம்:
இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதனுள் வேறுபட்டதாக இருந்தனர். தன்னை மறந்து நிலையில் பேய் பிடித்தவர் போல கண்கள் சுழலும்படி விழுந்தார், தொழுதார் ஆடினார், பாடினார். எனவே இவரை எல்லோரும் பேயாழ்வார் என்று கொண்டாடினார்கள்.
Also Read: History of Alwars: பக்தியால் திருமாலைக் நேரில் கண்ட பொய்கை ஆழ்வார்!
பேயாழ்வாரின் தொண்டு:
இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள மூன்றாம் திரு வந்ததியை பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது. இவர் மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து மொத்தம் 14 திருக்கோயிலை மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
மங்களா சாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள இறைவனை போற்றி பாடுவதாகும். அந்த திருப்பதி, திருப்பாற்கடல், திருவேளுக்கை, திருவரங்கம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில், உப்பிலியப்பன் கோயில், திருப்பரமபதம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில், திருப்பாடகம் பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சோளிங்கர் யோக நரசிம்மன் பெருமாள் கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் ஆகும். முதல் மூன்று ஆழ்வார்கள் என்று போற்றப்படும் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார்.
இவர்கள் மூவரும் ஞானம், பக்தி, வைராக்கியம் மிக்க துறவறம் பூண்டு ஆண்டவரின் நினைவில் உருகி உள்ளம் கனிய பாடியவர்கள்.
ஒற்றுமை வளர்த்த பேயாழ்வார்:
வைணவர்களால் நம்பிக்கையுடன் போற்றப்படும் வரலாறு உண்டு. பெருமாள் ஒரு முறை பொய்கை ஆழ்வாரை பூதத்தாழ்வாரோடும் பேயாழ்வாரோடும் சந்திக்க வைத்து மூவருக்கும் தன் திவ்ய ரூபத்தைக் காட்டி அவர்களின் பக்தியை உணரச் செய்ய ஒரு எண்ணம் கொண்டார். மூன்று ஆழ்வார்களும் தனித்தனியாக தல யாத்திரை மேற்கொண்டு திருக்கோவிலூருக்கு ஒரே சமயத்தில் நுழைகின்றனர். அப்போது பெருமழை உண்டானது.
மழைக்கு ஒதுங்கும் பொருட்டு மிருகண்டு மாளிகையின் உள்ள நடைபாதையில் ஒதுங்குகின்றன. அந்த இடத்தில் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் என்று அளவிற்கு இடமிருந்தது. அதனால் மூன்று ஆழ்வார்களும் நின்று கொண்டு திருமாலின் புகழை பாடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து நான்காவதாக வந்தது யார் என்பதை இருளில் அறிய முடியவில்லை. அப்போது பேயாழ்வார் பாசுரம் பாடி இறைவனை தொழுதார்.
Also Read: ஏழு பிறவியிலும் தவம் உடையவர் என்ற பெருமை.. பூதத்தாழ்வார் வரலாறு இதுதான்!
இன்று என்னுடைய கடல் போன்ற வண்ணம் உடைய பெருமாளிடத்தில் பெரிய பிராத்தியை சேவிக்க பெற்றேன். அழகிய திருமேனியையும் சேவிக்க பெற்றேன். சூரியன் போன்ற அழகிய ஒளியை கண்டேன். யுத்த பூமியில் சீறி எழுகின்ற சுதர்சன சக்கரத்தையும் சங்கையும் திருக்கையிலே சேவிக்கப்பட்டேன் என்று அவர் பாட இருள் நீங்கி அந்த இடத்தில் நீண்ட நெடிய திருமால் இருப்பதை உணர்ந்தார்.
பிறகு மூன்று ஆழ்வார்களும் திருமாலின் சொரூபத்தை கண்டு அனுபவித்து தரிசித்து சென்றனர். இந்து மதத்தின் பிரிவுகளான சைவ மற்றும் வைணவத்திற்கிடையே போட்டி நிலவிய காலகட்டத்தில் இந்த இரு பிரிவில் கிடையே ஒற்றுமை காண விரும்பியவர் இந்த பேயாழ்வார்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)