History of Alwars: கோவிலை விட்டு வெளியேறிய பெருமாள்… திருமழிசை ஆழ்வாரின் வரலாறு!
History of Thirumazhisai Alwar: வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப்படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதி என்று சரணம் அடைந்து தீராத பக்தி கொண்டு தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள். இந்த செய்யுள்களின் தொகுப்பு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வாரின் பேச்சுக்கு பெருமாளை கட்டுப்படுவதாகவும் அவர்கள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அந்த இடத்திற்கு தேடிச் செல்வார் என்று சொல்லப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் 12 நபர்கள். இப்பொழுது திருமழிசை ஆழ்வார் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.
வைணவ நெறியை பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் நான்காமானவர் திருமழிசை ஆழ்வார். கிபி ஏழாம் நூற்றாண்டு தை மாதம் தேய்பிறை பிரதமை திதி அன்று மகம் நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தார். திருமாலின் ஆயுதங்களின் ஒன்றான சக்கரத்தில் அம்சமாக பிறந்தவர் முதல் மூன்று ஆழ்வார்கள் என்று சொல்லப்படுகின்ற பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்தவர்.
பிறந்த வரலாறு:
திருமாலின் அடியவராக திகழ்ந்த பார்கவ முனிவருக்கும் கணக்காங்கி என்ற தேவ கன்னிகைக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி திருமழிசையில் யாகம் செய்தனர். யாகத்தின் பலனாக கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து கை கால்கள் முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தை பெற்று எடுத்தார்கள். தனக்கு முழு குழந்தை பிறக்காமல் பிண்டம் மட்டுமே பிறந்ததால் அந்த தம்பதியர் மனம் தளர்ந்து அந்த பிண்டத்தை எடுத்துக் கொண்டு போய் பிரம்புகள் வளரக்கூடிய காட்டில் ஒரு பிரம்பு புதருக்கு கீழே போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
பின்பு அந்த இடத்திற்கு நாராயணரும் மகாலட்சுமியும் வந்து அந்த குழந்தையை ஆசீர்வாதம் செய்தார்கள். ஆண்டவரின் அருளால் அந்த பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப் பெற்று ஒரு அழகிய ஆண் குழந்தையாக அழத் தொடங்கியது. அந்த குழந்தையின் அழுக் குறலை கேட்டு அந்த வழியை பிரம்பு வெட்டி செல்ல வந்த திருவாளன் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு போய் வளர்க்க தீர்மானித்தார்.
குழந்தையை வீட்டிற்கு தூக்கி சென்று தன் மனைவி பாக்கிய செல்வியிடம் கொடுத்தார். ஆச்சரியமாக அந்த குழந்தையை அவள் கைகளில் வாங்கியதும் அவள் மார்பில் பால் சுரந்தது. ஆனால் அந்த குழந்தை பால் குடிக்க மறுத்தது.
Read Also: ஏழு பிறவியிலும் தவம் உடையவர் என்ற பெருமை.. பூதத்தாழ்வார் வரலாறு இதுதான்!
திருமழிசை ஆழ்வார் செய்த அற்புதம்:
குழந்தை பசியால் அழும்பொழுது பால் கொடுக்கலாம் என்று அந்த தம்பதியர் காத்திருந்தனர். ஆனால் குழந்தைக்கு பசிக்கவே இல்லை. பல நாள் வரையில் பால் உண்ணாமல் இருந்தது. பால் உண்ணாமல் இருந்தாலும் அந்த குழந்தை சிறிதும் வாடவில்லை. அந்த தெய்வீக குழந்தையின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்து ஒரு வயதான தம்பதியர் ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு வந்தனர்.
அந்த குழந்தைக்கு அதை அன்புடன் ஊட்டினார்கள். ஆச்சரியமாக குழந்தை பாலை குடித்தது. சிறிது காலம் இவ்வாறு அந்த வயதான தம்பதியர் குழந்தைக்கு பால் கொண்டு வந்தார்கள்.
குழந்தையும் வளர்ந்தது ஒரு நாள் தமக்கு பால் கொண்டு வந்து அந்த தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்ய விரும்பியது. தான் குடித்த மிச்ச பாலை அந்த தம்பதியரை அருந்துமாறு குழந்தை சொன்னது. தம்பதியரும் தெய்வ வாக்காக எண்ணி மீதி இருந்த பாலை குடித்தார்கள். ஆச்சரியமாக வயோதிகம் போய் தம்பதிகளுக்கு இளமை திரும்பியது. பின்பு அந்த தம்பதியருக்கு கனிகண்ணன் என்னும் ஆண் குழந்தை பிறந்தது.
திருமழிசை ஆழ்வாரின் வரம்:
கணிக்கண்ணன் சீரும் சிறப்புமாய் வளர்ந்து திருமழிசை ஆழ்வாரின் சீடரானார். ஆரம்ப காலங்களில் சைவத்தையும் சமயத்தையும் சார்ந்திருந்தார் திருமழிசை ஆழ்வார். இவரை முதல் ஆழ்வார்களின் ஒருவரான பேயாழ்வார் வைணவ சமயத்தை ஏற்க செய்து திருமந்திர உபதேசம் செய்தார். திருமழிசை ஆழ்வாரும் கனி கண்ணனும் சிறிது காலம் காஞ்சிபுரம் திருவெக்கா தளத்தில் தங்கி இருந்து திருவெக்காவில் குடி கொண்டுள்ள இறைவனாகிய யதோத்காரி பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்தார்கள். அவ்வாறு இருக்கையில் அவர்களின் குடிலை தினமும் தூய்மை செய்யும் ஒரு வயதான மூதாட்டி இருந்தார்.
கைங்கரியம் எதுவும் எதிர்பார்க்காத மூதாதையிடம் திருமழிசை ஆழ்வார் உனக்கு என்ன வேண்டும் கேள் என கேட்டார். அதற்கு மூதாட்டி வயது முதிர்வால் ஏற்பட்ட இயலாமையும் அதனால் தன்னுடைய சேவை முழுமை அடையாமல் இருப்பதை கூற நீ என்றும் இளமையாக இருக்கும் படி வரம் நழுவுகிறேன் என்று கூறி வரம் அளித்தார்.
அழகும் எழிலும் மிகுந்த அந்த பெண்ணை பல்லவராய அரசர் மனம் புரிந்தார். திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து தனக்கு மட்டும் வயதாகிறது உனக்கு இன்னும் ஏன் வயதாகவில்லை என தன் மனைவியிடம் பல்லவராயன் கேட்டார். அப்பொழுது அவருடைய மனைவி ஆழ்வாருடைய புகழை எடுத்துரைத்தார்.
அரசன் உடனடியாக கனிகண்ணனை அழைத்து தன் மனைவிக்கு கிடைத்தது போன்ற வரம் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறி திருமழிசை ஆழ்வாரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். ஆனால் கனிகண்ணனோ ஆழ்வாரை காண வேண்டுமென்றால் நீங்கள் தான் செல்ல வேண்டும் உங்களைக் காண ஒருபோதும் அவர் வரமாட்டார் என்று கூறினார்.
சரி குறைந்தபட்சம் தன்னை பற்றி ஒரு கவிதையாவது பாடுமாறு கனி கண்ணனை வேண்டினார். ஆனால் கனிகண்ணன் நாராயணனை பாடுகின்ற இந்த வாயால் வேறு யாரையும் புகழ்ந்து பாட மாட்டோம் என்று கூறினார். கோபமுற்ற அரசன் கனிகண்ணனை நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.
Also Read: History of Alwars: ஒற்றுமையை போதித்த மகான்… பேயாழ்வாரின் வரலாறு
திருமழிசை ஆழ்வாருடன் நகரை விட்டு வெளியேறிய பெருமாள்:
கனிகண்ணன் இதை ஆழ்வாரிடம் சென்று கூறி நகரை விட்டு செல்ல முடிவெடுத்தார். திருமழிசை ஆழ்வாரோ உன்னுடன் நானும் வருவேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை நோக்கி ஒரு பாசுரம் பாடினார். கனிக்கண்ணன் செல்கிறான் நானும் செல்கின்றேன் கட்சியில் இருக்கும் பெருமாளே நீயும் இங்கு இருக்க வேண்டாம். ஆதிசேசனாகிய உன்னுடைய பாய் சுருட்டிக்கொண்டு நீயும் எங்களுடன் வா என்று பாடினார்.
இதை ஏற்ற பெருமாள் திருமழிசை ஆழ்வார் பின் சென்றார். பெருமாள் அங்கிருந்து சென்றதால் காஞ்சி நகரம் பொலிவிழந்தது. மன்னன் தன் தவறை உணர்ந்து திருமழிசை ஆழ்வார் இடம் மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் காஞ்சி நகருக்கு பெருமாளை திருமழிசை ஆழ்வார் அழைத்து வந்தார். பக்தன் சொல்வதெல்லாம் கேட்டதால் இந்த கோயிலுக்கு சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள் கோயில் என்ன பெயர் பெற்றது.