5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Christmas: உண்மையான சாண்டா கிளாஸ் யார்? கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரலாறு!

History of Santa Claus: கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டாலே வீதி முழுவதும் நிறைய சாண்டா கிளாஸ் உடை அணிந்த நபர்களை பார்க்க முடியும். கிறிஸ்துமஸ் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சான்டா கிளாஸ் தான். ஆனால் இந்த சான்டா கிளாஸ் கற்பனை கதாபாத்திரம் என்றே பலரும் கருதுகின்றனர்.

Christmas: உண்மையான சாண்டா கிளாஸ் யார்?  கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரலாறு!
சாண்டா கிளாஸ் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 29 Nov 2024 22:03 PM

கிறிஸ்துமஸ் என்ற உடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா என்ற சாண்டா கிளாஸ். குட்டையான தோற்றம், குண்டான உருவம், நீண்ட வெண்ணிற தாடி, சிவப்பு வெள்ளை நிற உடை, தலையில் குல்லா, முதுகில் தொங்கவிடப்பட்டிருக்கும் பரிசு பொருள்கள் நிறைந்த பை ஆகியவை தான் சாண்டா கிளாஸின் அடையாளம். சாண்டா கிளாஸ்சை பார்த்தால் குழந்தைகள் குதூகலமாகி விடுவார்கள். ஆனால் இந்த சான்டா கிளாஸ் கற்பனை கதாபாத்திரம் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த உலகில் வாழ்ந்த மனிதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சாண்டா கிளாஸ். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை இப்பொழுது உலகம் முழுவதும் காண முடிகிறது. கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டாலே தெரு முழுவதும் பலர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து வளம் வருவதை பார்க்க முடியும். இந்த பிரபலம் மிக்க கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையாகவே 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாதிரியார்.

 சாண்டா கிளாஸ் என்னும் சிண்டர் கிளாஸ்:

ரோம சாம்ராஜ்யத்தில் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் தான் நிக்கோலஸ். பிறகு துருக்கி நாட்டில் பிஷப்பாக பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். சின்ட் நிக்கோலஸ் என்னும் இவர் பெயரை மக்கள் சிண்டர் கிளாஸ் என அழைக்க தொடங்கினர். வாழ்க்கையில் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும் கொடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் தன்னை உண்மையாக அர்ப்பணித்து உதவிய அற்புதர் இவர். மக்களின் தேவையை அறிந்து அதனை அவர்கள் அறியாமலேயே நிறைவேற்றி வந்தார். இரக்கம், நல்லுறவு, தாராள மனம், குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் போன்ற நல்ல குணங்களைக் கொண்ட இந்த நிக்கோலஸ் ஒரு சிவப்பு அங்கி அணிந்து வெள்ளை குதிரையில் சென்று குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்து வந்தார். இவர் தன் அனைத்து சொத்துக்களையும் விற்று ஏழைகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவி வந்தார்.

மறைமுகமாக செய்த உதவி:

ஆலயங்களில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை சொல்லலாம் என்றும் அவர்கள் குறைகள் நீங்க விசேஷமாக பிரார்த்திக்கப்படும் என்று நிக்கோலஸ் அறிவித்தார். அதன்படி மக்கள் தங்கள் குறைகளை சொல்லும் போது அது நியாயமானதா என்பதை அறிந்து கொண்டு, வேண்டியவர்களுக்கு தெரியாமலேயே அந்த உதவியை செய்து வந்தார்.

இந்த நிக்கோலஸ் எப்பொழுதும் பண்டிகையின் போது தேவை உள்ள மக்களுக்கு அவர்கள் வீட்டின் புகை போக்கி வழியாக பொன்‌ அல்லது பொருள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் போட்டுவிட்டு அந்த வீட்டார் கவனிப்பதற்கு முன் தன் வெள்ளைக் குதிரையில் அங்கிருந்து கிளம்பி விடுவார். பின்னர் அந்தக் குடும்பத்தினரும் குழந்தைகளும் அந்த பொருளை வைத்து மகிழ்வதை கண்டு நிக்கோலஸ் மகிழ்வார். இப்படி தனது சொத்துக்களை விற்று மக்களை தேடி தேடி உதவி செய்த நிக்கோலஸ் 3 ஆம் நூற்றாண்டில் டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார்.

சாண்டாவின் அடிச் சுவடை பின்பற்றிய மக்கள்:

இந்த நாள் பண்டிகை நாளாக ஐரோப்பாவில் இன்னும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிக்கோலஸ் இறந்த பின்னர் அவரது சடலம் மயிரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடத்தில் அவர் காட்டிய கருணை அன்பு மற்றும் அவரின் தயாள குணம் காரணமாக அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர். 6ஆம் நூற்றாண்டில் அவரது கல்லறை மக்களிடத்தில் மிகவும் பிரபலமடைந்தது. அதன் பின்னர் 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் டச்சு இனத்தினர் பலர் அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியேறினர். அங்கு டிசம்பர் 6ஆம் தேதி நிக்கோலஸின் பிறந்தநாளை கொண்டாடியும் வந்தனர்.

சின்ட் நிக்கோலஸ் என்னும் சிண்டர் கிளாஸ் பற்றி அமெரிக்காவிலும் பெரிய தொடங்கியது. அதன் பின்னர் சிண்டர் கிளாஸ் போலவே சிவப்பு அங்கி அணிந்து வெள்ளை நிற குதிரையில் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் கொடுத்து மகிழ்ந்து வந்தனர். இதைப் பற்றி அமெரிக்க பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியில் St. A Claus என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அது சாண்டா கிளாஸ் என மாறியது.

1809 ஆம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் இர்வின், நிக்கோலஸ் தான் உண்மையான சாண்டா கிளாஸ் என்பதை பல ஆதார மூலம் இந்த உலகிற்கு தெரிவித்தார்.நிக்கோலஸ் தன் வாழ்க்கையில் செய்த வழக்கம், தற்பொழுது உலகம் எங்கிலும் ஒரு பழக்கமாக மாறிவிட்டது. பல நபர்கள் சான்டா கிளாஸ் வேடமடைந்து தேவை உள்ள மனிதர்களுக்கு உதவி வருகின்றனர்.

Latest News