Thulasi Malai: ஐயப்பனுக்கு பிரியமான துளசி மாலை.. யாரெல்லாம் அணியலாம் தெரியுமா?

Spiritual: கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலை செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். ஐயப்பாவிற்கு மாலை அணியும்போது துளசி மணி மாலையும் சேர்த்து அணியப்படும். துளசி என்றால் பவித்திரம், தூய்மை, பரிசுத்தம் ஆகும். ஒரு துளசி செடி இருக்கும் இடத்தை சுற்றி எப்பொழுதும் நல்ல அதிர்வுகளே காணப்படும். அத்தகைய துளசி மாலையை எவ்வாறு அணிய வேண்டும் எப்பொழுது அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Thulasi Malai: ஐயப்பனுக்கு பிரியமான துளசி மாலை.. யாரெல்லாம் அணியலாம் தெரியுமா?

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

12 Nov 2024 19:40 PM

துளசி செடியின் அடிப்பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்துதான் துளசி மணி மாலைகள் செய்யப்படுகின்றது. துளசி செடியின் சின்னஞ்சிறிய மரத்துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலையாகும்.

யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் அணியலாம். எந்த வயது வரம்பும் கிடையாது‌. மாலையை மாதவிடாய் காலங்களில் போது அணிய வேண்டாம். மேலும் அசைவம் சாப்பிடும்‌போதும் அணியக்கூடாது.‌ அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு மாலையை கழற்றி பெருமாள் படத்திற்கு அருகே வைத்துவிட்டு பிறகு நீங்கள் எப்பொழுது அணிய வேண்டுமோ அன்று காலை குளித்து முடித்துவிட்டு மாலையை எடுத்து அணிந்து கொள்ளலாம்.

மாலை அணியும் முறை:

சிறிய மாலை என்றால் 51 ம், பெரிய மாலை என்றால் 108‌ ம், அதை தாண்டி 1008 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இவை நூல்களினால் கோர்க்கப்பட்டதும் உள்ளது . கம்பியினால் கோர்க்கப்பட்டதும் உள்ளது. விருப்பத்திற்கு ஏற்ப மாலையின் அளவினையும் கம்பிகளையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கடையிலிருந்து வாங்கி வந்த புதிய மாலையை அப்படியே கழுத்தில் அணியக்கூடாது.

Also Read: sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

முதலில் அந்த மாலையை மஞ்சள் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். மஞ்சளை நன்றாக தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு துளசி மாலையை இரண்டு மணி நேரம் அந்த மஞ்சள் நீரில் ஊறவைத்துவிட்டு பிறகு நல்ல சுத்தமான தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் விருப்பமான கோவிலுக்கு எடுத்துச் சென்று சுவாமியின் பாதங்களில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கோ அல்லது மகாலட்சுமி படத்திற்கு மாலையை சாற்றி விட்டு பிறகு எடுத்து 108 முறை ஓம் நமோ நாராயணா என்று ஜெபம் செய்துவிட்டு பிறகு நீங்கள் மாலையை அணிந்து கொள்ளலாம்.

குறிப்பாக நீங்கள் எந்த மாலை வைத்து ஜெபம் செய்வதாக இருந்தாலும் உங்கள் கையில் உள்ள மாலையை நீங்கள் உருட்டும்போது அது அடுத்தவர்களின் கண்களுக்கு கட்டாயம் தெரியக்கூடாது. பெண்களாக இருந்தால் உங்களுடைய முந்தானையில் ஜெபமாலையை மறைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் உங்களுடைய அங்க வஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தான் ஜெபமாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம். நீங்கள் மாலையை எப்போதும் கழுத்தில் அணிய முடியவில்லை என்றால் உங்கள் வீட்டில் உள்ள சுவாமி படத்திற்கு அணிவித்து வைத்திருக்கலாம்.

துளசி மாலை அணிவதன் பலன்கள்:

துளசி மாலை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் இதோடு இயற்கையாகவே துளசி மாலைக்கு நம்முடைய உடலில் குளிர்ச்சியையும் சூட்டையும் சமநிலையில் வைத்திருக்கக்கூடிய சக்தி உண்டு. துளசி என்றால் பவித்திரம். துளசி இருக்கும் இடத்தை விட்டு எமதர்மர் கூட தூரம் நிற்பார் என்று புராணங்கள் சொல்கிறது.

ஒருவர் மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்தினால் அவர் நேராக திருமாலின் திருவடிக்கு செல்வார் என்றும் ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவர் இறந்த பின்பு அவர் உடலை எரிக்கும் போது அந்த கட்டைகளுடன் ஒரு சிறிய துளசி கட்டையை சேர்த்து எரித்தால் அந்த ஆத்மா நேரடியாக ஆன்மீக லோகத்திற்கு செல்லும் என்றும் அந்த ஆத்மா பயணிக்க கூடிய வழியில் எல்லாம் தேவர்கள் நின்று கொண்டு வரவேற்பார்கள் என்றும் புராணங்கள் சொல்கின்றது.

Also Read: Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

மேலும் இந்த மாலையை அணிவதால் கெட்ட கனவுகள் வருவதை தவிர்க்கும். உங்களுக்கு இருந்த நீண்ட கால நோய்கள் விரைவில் நீங்கும். நீங்கள் பயணம் செல்லும் போது விபத்துகளை தவிர்க்கும். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். பித்ருகளுக்கும் தேவர்களுக்கும் பல கோடி பூஜைகள் செய்த புண்ணியத்தை தேடி தரும். மகாலட்சுமி அம்சமாகவும் பெருமாளுக்கு உகந்ததாகவும் சொல்லப்படுகின்ற துளசியை மாலையாக நீங்கள் அணிந்தால் மகாலட்சுமி கடாட்சமும் பெருமாளின் அருளும் கிடைக்கும்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?