Third Crescent Dharshan: ஞாயிற்றுக்கிழமை வரும் மூன்றாம் பிறை… இந்த நாளில் இப்படி தரிசனம் செய்தால் செல்வம் பெருகும்..
Third Crescent Worship: மூன்றாம் பிறை என்று சந்திரனை தரிசனம் செய்தால் சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும் நம்பிக்கை. இந்த மாதம் மூன்றாம் பிறை ஞாயிற்றுக்கிழமையுடன் வருவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயாரையும் சந்திர பகவானையும் ஒருசேர வழிபடுவது மூலமாக பொருளாதார சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த நாளில் சந்திர பகவானை எளிய முறையில் எப்படி தரிசிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
சிவபெருமான் தன்னுடைய தலையில் சூடிக் கொண்டிருக்கும் மூன்றாம் பிறையை நாம் ஒவ்வொரு மாதமும் தரிசனம் செய்யும் பொழுது சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க சந்திர தரிசனம் இம்முறை ஞாயிற்றுக்கிழமையுடன் வருகிறது. இந்த அற்புதமான நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் ஏராளம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்த இரண்டாவது நாளில் மூன்றாம் பிறை என்பது வரும். இந்த மூன்றாம் பிறை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பலனை கொடுக்கும். கையில் நாணயத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மூன்றாம் பிறை தரிசனம் செய்பவர்களுக்கு செல்வம் பல மடங்கு வளர்ந்து கொண்டே இருக்கும். ஞாயிற்றுக்கிழமை உடன் சேர்ந்து வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை என்பது விசேஷமான ஒன்று. மகாலட்சுமி தாயாரையும் சந்திர பகவானையும் ஒருசேர வழிபடுவது மூலமாக பொருளாதார சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
சந்திர பகவானும் மகாலட்சுமியும் சகோதர சகோதரிகளாக கருதப்படக் கூடியவர்கள். எனவே பௌர்ணமி தினத்திலும் மூன்றாம் பிறை நாளிலும் சந்திரனை மட்டுமல்லாமல் மகாலட்சுமி தேவியையும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த மூன்றாம் பிறை மகாலட்சுமிக்கு உகந்த கிழமையான ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வருவதால் மகாலட்சுமி அம்சம் பொருந்திய கல் உப்பு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.
மூன்றாம் பிறை தரிசனம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
இந்த தரிசனத்தை மாலை 6:30 மணிக்கு மேல் செய்ய வேண்டும். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மூன்றாம் நாளில் சந்திர பகவானை வணங்குவது மூலமாக நிலவு வளர்வது போல நமது பொருளாதாரமும் வளரும் என்பது நம்பிக்கை.
Also Read: தெய்வத்திற்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய பூக்கள் என்னென்ன தெரியுமா?
இந்த தரிசனத்திற்கு ஒரு கைப்பிடி அளவு வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். இது சந்திர பகவானுக்கு உகந்த ஒரு பொருள். இந்தச் சர்க்கரைக்கு நடுவில் வைப்பதற்கு ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வீட்டில் இருக்கக்கூடிய அகல் விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தினத்தில் நீங்கள் அசைவம் சாப்பிட்டிருந்தால் தலைக்கு குளித்துவிட்டு இந்த தரிசனம் செய்வது நல்லது.
மாலை 6:00 மணிக்கு வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து விட வேண்டும். பின்பு ஒரு தட்டில் எடுத்து வைத்திருக்கும் வெள்ளை சர்க்கரையை பரப்பி அதற்கு நடுவில் அகல் விளக்கை வைத்து விட வேண்டும். பின் அதைச் சுற்றி சில்லரை நாணயங்களை வைக்க வேண்டும். குறைந்தது இரண்டு சில்லரை நாணயங்களையாவது வைக்க வேண்டும். பின்பு எல்லா நாணயங்கள் மீதும் கிராம்பு வைக்க வேண்டும். பின்பு அகல் விளக்கில் நெய் ஊற்ற வேண்டும்.
தரிசனம் செய்யும் முறை:
இந்த தீபத்தை பூஜையறையில் ஏற்றக்கூடாது. மொட்டை மாடியில் அல்லது சந்திர பகவான் வீட்டில் எந்தப் பகுதியில் தெளிவாக தெரிகிறாரோ அந்த இடத்தில் நின்று கொள்ள வேண்டும். பின்பு தீபத்தை ஏற்றி சந்திரனிடம் தீப ஆராதனை காட்ட வேண்டும். அப்பொழுது ஓம் சந்திர மௌலிஸ்வராய நமஹ என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பின் கண்களை இறுக்கமாக மூடி இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதை பூஜை அறைக்குள் கொண்டு வந்து வைத்து விட வேண்டும். பொதுவாக பூஜையறையில் எவ்வளவு நேரம் விளக்கு எரியுமோ அவ்வளவு நேரம் இந்த தீபம் இருந்தால் போதுமானது.
பிறகு கிராம்பு மற்றும் சில்லறையை பணப்புழக்கம் இருக்கும் இடங்களில் முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தரிசனத்திற்கு பயன்படுத்திய சர்க்கரையை நீங்கள் பயன்படுத்தாமல் ஈ, எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவாக அளியுங்கள். அதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆனால் அந்த நாணயமும் கிராமமும் உங்களைத் தவிர வேறு யாரு கைகளுக்கும் சென்று விடக்கூடாது. மேகமூட்டம் காரணமாக சந்திரன் தெரியவில்லை என்றால் மேற்கு திசையை நோக்கி இந்த பரிகாரத்தை செய்யலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)