5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Krishna Janmashtami: கிருஷ்ண ஜெயந்தி நாளில் புண்ணியம் கிடைக்க இதனை செய்யலாம்!

ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் குழந்தை கண்ணனாக பிறந்தான் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் இன்று அஷ்டமி திதியும், இரவு 9.41 மணிக்கு மேல் ரோகிணி நட்சத்திரமும் வருவதால் இரண்டு நாட்களும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாம். இந்த நாள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என அழைக்கப்படுகிறது.

Krishna Janmashtami: கிருஷ்ண ஜெயந்தி நாளில் புண்ணியம் கிடைக்க இதனை செய்யலாம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Aug 2024 07:10 AM

கோகுலாஷ்டமி: கிருஷ்ண பெருமான் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி இன்றும், நாளையும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்றும், வடமாநிலங்களில் நாளையும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் குழந்தை கண்ணனாக பிறந்தான் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் இன்று அஷ்டமி திதியும், இரவு 9.41 மணிக்கு மேல் ரோகிணி நட்சத்திரமும் வருவதால் இரண்டு நாட்களும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாம். இந்த நாள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் நாம் சில பொருட்களை தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இதையும் படிங்க: Krishna Janmashtami: கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபட உகந்த நேரம் எது?

உணவு: கிருஷ்ண ஜெயந்தி நாளில் அரிசி தானம் அல்லது பசியுள்ள ஒருவருக்கு உணவளிப்பது ஒரு சிறந்த தொண்டு என்று கருதப்படுகிறது. ஆகவே இந்நாளில் ஏழை எளியோருக்கும், பசித்தோருக்கும் உணவு கொடுப்பது மிகவும் புண்ணியமான செயலாகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது . இதனால் குடும்பத்தில் உள்ள அனைத்து துக்கங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

வெண்ணெய் : குழந்தை கண்ணனுக்கு  வெண்ணெய் என்றால் மிகவும் பிடிக்கும். இதற்காக அவன் நடத்திய லீலைகள் எல்லாம் கதையாக கேட்டால் வேடிக்கையாக இருக்கும். எனவே இந்த நாளில் வெண்ணெய் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு வெண்ணெய் தானம் செய்தால் சுக்ர தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுவதோடு செல்வமும் பெருகும்.

ஆடை : கோகுலாஷ்டமி நாள் அன்று ஏழை எளியோருக்கு ஆடை தானம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கை, குடும்பத்தில் நிலவும் துன்பம் மற்றும் வறுமையிலிருந்து விடுபடலாம். இத்துடன் கிருஷ்ணரின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Gokulashtami: கண்ணனை வரவேற்கும் கிருஷ்ண ஜெயந்தி.. வீட்டில் வழிபடுவது எப்படி?

மயில் இறகுகள்: கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த நாளன்று மயில் தோகை தானம் செய்வதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். இதனை தானம் செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். அதுமட்டுமல்லாமல் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

புல்லாங்குழல்: கிருஷ்ண ஜெயந்தி அன்று புல்லாங்குழல் செய்வதும் மிகவும்  பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த நாளில் மரத்தாலான புல்லாங்குழலை தானம் செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

காமதேனு பசு சிலை: கோகுலாஷ்டமி நாளில் காமதேனு பசு சிலை தானம் செய்யலாம். ஏனென்றால் பசுக்கள் பகவான் கிருஷ்ணருக்குப் பிரியமானது. இந்நாளில் வீட்டின் அருகில் இருக்கும் பசுவுக்கு வழிபாடு மற்றும் உணவளிக்கலாம். இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News